புதன், 4 ஜூலை, 2007

மூலிகைவளம்

மூலிகைவளம்
பழங்காலத்தில் மூதாதையர்கள் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற மூலிகை செடிகளின் இலை, வேர், காய், பழம், பட்டை, மற்றும், விதைகளைப் பயன் படுத்தினர். பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள், தன்வந்திரி, மூலனார், நாகர்ஜுனா, போன்றவர்கள் அறிவுத் திரனாலும் அனுபவத்தாலும் கண்ட உண்மைகளை பல மூலிகைகளைக் கண்டு பிடித்து ஏடுகளில் எழுதிவைத்துள்ளனர்.

சுமார் 4000 வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் முலிகை மருத்துவத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. மற்றும் ஆயுர் வேதமருத்துவத்தில் கி.மு. 600 ல் மூலிகை குணம் தீர்க்கும் நோய்கள் பற்றி 341 மருந்துச் செடிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது. தற்பொழுதும் இது நடைமுறையில் உள்ளது. நம் இந்திய நாட்டில் சுமார் 2000 முதல் 7000 வகை மூலிகைச் செடிள், மரங்கள் உள்ளன. இவற்றில் 700 முதல் 1000 வரை மூலிகைச் செடிகள் நாட்டு மருந்துகள் தயாரிப்பிலும் 100 முதல் 150 மூலிகைகள் ஆங்கில மருத்துவத்திலும் பயன் படுத்தப்படுகின்றன. நம்மிடம் மூலிகை செடியிலிருந்து மூலப்பொருட்களைப் பிரித்தெடுக்க உகந்த மேம்பட்ட தொழில் நுட்பங்கள் இல்லாமையால் மூலிகை மருந்து உற்பத்தியில் நம் நாடு 15 வது இடத்தை வகிக்கின்றது. நமது நாட்டில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், போன்ற தட்ப வெப்ப நிலங்களில் வளரும் மூலிகைகள் உள்ளன. அதனால்ஏற்றுமதியில்முன்னேற்றம்அடைந்துள்ளோம். மூலிகை வளம் கொழிக்கும் நம் நாட்டில் தீராத நோய்களையும் பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்தவும், பிணியின்றி வாழவும் இயற்கையான முறையில் பயிர் செய்யப்பட்ட தானியங்கள், மூலிகைகள் வாங்கி உபயோகிக்கவும், ஆங்கில மருத்துவத்தை விட மூலிகை மருத்துவப் பணச்செலவு குறைவாக இருப்பதாலும், மேலும் பக்க விளைவுகளும் இல்லை என்பதாலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆகவே பல வகை மூலிகைகளைப்பற்றி யாவரும் அறியவும், ரகசியம் எதுவும் மறைக்காமல் வெளியிடப்படும்.
க.பொ.குப்புசாமி கோவை-641 037.

5 கருத்துகள்:

பாலராஜன்கீதா சொன்னது…

தமிழ் வலைப்பதிவு உலகத்திற்கு தங்கள் வரவு நல்வரவாகட்டும். தொடர்ந்து எழுதுங்கள். புதுப்புது செய்திகளை அறியத் தரும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

kuppusamy சொன்னது…

தமிழ் வலைப்பதிவுக்கு நான் புதியவன் என் தோட்டத்தில் இருந்த ஐயம்பனா என்ற குறுஞ் செடியின் இலையை மூலம் இருந்த ஒருவருக்குக் கொடுத்து குணமானது அதைப்பார்த்த என் நண்பர் இது போன்று எல்லோரும் அறிய தமிழில் ஒரு வலைப்பதிவு உள்ளது அதில் போடுங்கள் என்று சொன்னதால் புது முயற்சி எடுத்துள்ளேன். உங்கள் வாழ்த்துக்கு எனது நன்றிகள்

chezhiyan சொன்னது…

ஐயா என் பெயர் இளஞ்செழியன் நான் ஆவரம்பூவை சாகுபடி செய்யலாம் என்று உள்ளேன் அதற்கு உண்டான விதைகளை எங்கு வாங்குவது மற்றும் ஆவரம்பூவை எங்கு விற்பது என்று சிறிது ஆலோசனை வழங்குமாறு பணியுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
இளஞ்செழியன்.

kuppusamy சொன்னது…

இழஞ்செழியன் அவர்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் எந்த ஊர் ஆவரஞ்செடி ரோட்டு ஓரங்களில் தானாக இயற்கையாக வளர்கிறது. நீங்கள் வேறு மூலிகைகள் வளர்க்கலாம். சேலமாக இருந்தால் மருந்துக்கூர்கன் வளர்கலாம். ஒட்டஞ்சத்திரம் ஏரியா இருந்தால் செங்காந்தல் மலர் வளர்க்கலாம். மிக்க நன்றி.

sathy சொன்னது…

Am a youngster. Wonderful job sir. Thank you very much. I would like to know where to get these herbs to plant in my garden. If there is some herbal nursery in your contact, please post their contact details.

Regards,

Satish Kumar K S
07418341038