புதன், 30 ஜனவரி, 2013

ஆடையொட்டி.



ஆடையொட்டி.

மூலிகையின் பெயர் :– ஆடையொட்டி.

தாவரப்பெயர் :– TRIUMFETTA RHOMBOIDEA Jacq.  Syn: Triumfetta angulate Lam.

தாவரக்குடும்பம் :- TILIACEAE  (Malvacea) இதில் 70 வகைகள் உள்ளன.

பயனுள்ள பாகங்கள் :– இலை, பூ, பட்டை, காய் மற்றும் வேர்கள். (சமூலம்) மருத்துவ குணம் உடையவை.

வேறு பெயர்கள் :– ஒட்டுப்புல்லு (Ottuppullu), புறாமுட்டி (Puramutti)
Aadaiotti, Adayotti, Ataiyottippuntu,போன்றவை.
ஆங்கிலத்தில் - Burr Bush, Diamond burrbark, Chinese Burr போன்றவை.
சமஸ்கிரத த்தில் ‘JHINJHARITA’ என்ன்றும் இந்தியில் ‘CHITKI’ என்றும் அழைக்கிறார்கள்.

வளரியல்பு :– ஆடையொட்டி ஒரு செடி வகையாச் சேர்ந்தது. இது எல்லாவகை மண்ணிலும் வளரக் கூடியது. வெப்பத்தைத் தாங்கும். தமிழ் நாட்டில் மலை, வேலியோரங்களிலும், தரிசு நிலங்களிலும் காணப்படும். இதன் தாயகம் பிறப்பிடம் தெரியவில்லை. இருந்தாலும் ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா, இந்தியா, தாய்வான், தென்ஆப்பிரிக்கா, கானா, .டான்சானியா, காமரூன், பிரேசில், இத்தோப்பியா, ஸ்விச்சர்லேண்ட், லிபியா, சைனா, ஜிம்பாவே, பாக்கீஸ்தான், மடகாஸ்கர், அமரிக்கா, உகாண்டா, இலங்கை போன்ற நாடுகளில் பரவிக் காணப்படுகிறது. இந்தச் செடி சுமார் ஆறு அடி உயரம் வரை வளரக்கூடியது. இது நேராகச் செல்லும் குத்துச் செடி. இதன் தண்டுகள் மெலிந்திருக்கும், லேசான சொரசொரப்பான முடியுடன் இருக்கும். இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் நீழ்வட்டத்தில் பசுமையாக சிறு முடியுடன் இருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்திலும், சில வகை வெள்ளை, ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும், ஐந்து இதழ்களைக் கொண்டிருக்கும். ஜூலை, மற்றும் ஜனவரி மாதங்களில் பூக்கள் பூக்கும். பூ முற்றியதும் அடிபாகத்தில் சூழ் இருக்கும், இது தன்மகரந்தச் சேர்கையால் காய் உண்டாகும். இதன் காய்கள் சிறிதாக மூன்று அரைகள் கொண்டதாக இருக்கும். இந்தக் காய்கள் உலர்ந்தால் ஆடைகள் படும் போது ஒட்டிக் கொள்ளும். இதனால் காரணப்பெயராக அமைந்தது. தமிழ் நாட்டில் தரிசு நிலங்களில் தானாக வளர்ந்தாலும் இதை வெளி நாடுகளில் நல்ல நிலத்தில் பயிராகப் பயர் செய்கிறார்கள்.(மடகாஸ்கர்) விதைமூலம் இன விருத்தி செய்யப்படுகிறது..  

மருத்துவப் பயன்கள் :– ஆடையொட்டியின் தன்மை தட்பம். பிரிவு இனிப்பைச் சேர்ந்தது. செய்கை துவர்ப்பி-லங்கோசகாரி (ASTRINGENT) உள்ளழலாற்று- அந்தர்ஸ்நிகதகாரி (DEMULCENT). இதன் இலை, பூ தொழுநோயை (Leprosy) குணப்படுத்தும், இலையின் பவுடர் இரத்த சோகையைப் (Anaemia) போக்கும். இதை கிழக்கு ஆப்பிரிக்காவில் நடைமுறையில் உள்ளது. இதன் தண்டு மற்றும் புதிய இலையை அரைத்து உள் கொடுக்க வயிற்றுப் போக்கு (Diarrhoea) குணமாகிறது. வயிற்று வலியும் குணமாகிறது. இதன் அடி வேர்கள் பொடி செய்து உள் கொடுக்க குடல் அல்சர் சூடு (Hot infusion-hasten parturition) குணமடைகிறது. இதன் சமூலத்தில் பிரித்தெடுக்கப்பட்ட ஆல்கலாய்டு ஏண்டி பாக்டீரியாகப் பயன்படுகிறது. இதன் வேர் அரைத்துக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு (Dysentery) குணமாகிறது. வெளிநாடுகளில் குதிரையின் வயிற்றுக் குடலில் புண் அஜீரணம் போன்று ஏற்பட்டால் இதன் இலைகளை நன்கு அரைத்து உள்ளுக்குக் கொடுத்து குணம் காண்கிறார்கள். இதன் இலைச் சாற்றிலிருந்து இரசாயனத்தைப் பிறித்தெடுத்து அது TRIUMFEROL 
( 4-HYDROXYISOXAZOLE  -TRIMETHYLSILYLACETARTRAMIA LINN.) இதிலிருந்து எடுக்கப்பட்ட சத்து- TRIUMFETTA BARTRAMIA LINN-Body tempature decrease. (1963) உடல் வெப்பத்தைக் குறைக்கிறது. வெளிநாடுகளில் இதன் இலைச்சாற்றை பவுடராகவும், வில்லைகளாகவும் தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள்.

ஆடையொட்டியின் இலையை அரைத்து நீரில் கலக்கி சர்கரை சேர்த்து உள்ளுக்குக் கொடுக்க வெட்டை ரோகம் குறைந்து நன்மை ஏற்படும்.

ஆடையொட்டியின் இலை மற்றும் காய் நீரில் அரைத்து நன்கு கலக்கி மூத்திரத் தாரையில் பீச்ச மேற்படி நீர் சம்பந்தமான ரோகங்கள் குணமாகும்.

ஆடையொட்டி இலையையும் பட்டையையும் அரைத்து நீரில் கலக்கி உள்ளுக்குக் கொடுக்க அதிசாரம் அஜீரண பேதி, சீத பேதிகள் குணமாகும்.



-------------------------------------------------------------------------------(தொடரும்)

சனி, 5 ஜனவரி, 2013

மூலிகை சைவ ஆம்லெட் பவுடர்.


மூலிகைவளர்போர்சங்கம்.

மூலிகை சைவ ஆம்லெட் பவுடர்.

முட்டையில்லாமல் தானியவகைகளாலும், மூலிகை பவுடர்கள் கலந்து தயாரிக்கப்பட்டது. உடல் நலனுக்குரியது, மலச்சிக்கல் நீங்கும், வாயுக் கோளாறுகளை நீக்கும். இரத்தம் சுத்தமடையும். ஜீரண சக்தியை தூண்டும். சளி தொந்தரவுகளைப் போக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை,  அனைவரும் விரும்பி உண்ணும் சுவை உடையது.

 

கலந்துள்ள பொருட்கள்.

 

முளைகட்டிய தானியங்கள், கம்பு, சோளம், ராகி, தினை, எள், கொண்டைக் கடலை,, உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப் பயிர், பீன்ஸ், மக்காச்சோளம், சோம்பு, முருங்கை, தூதுவளை, இந்துப்பு.


மூலிகைகள்.

துளசி, வில்வம், சுக்கு, ஆவரை, வல்லாரை, கருஞ்சீரகம், சீரகம், வெண்தாமரை, தான்றிக்காய்.

தயாரிப்பு முறை.

மூன்று ஸ்பூன் பொடியை 1 டம்ளர் தண்ணீரில் நன்கு கலக்க வேண்டும், ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி உடன் சேர்க்க வேண்டும். மிளகுத்தூள் அல்லது மிளகாய் துண்டுகள் தேவையான அளவு சேர்க்கவும். சமையல் எண்ணெய் ஒரு ஸ்பூன் கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டு பக்குவத்தில் ஸ்பூன் மூலம் நன்கு அடித்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை சூடுபடுத்தி ஸ்பூன் எண்ணெயை விட்டு கலக்கிய ஆம்லெட்டை பக்குவமாக இருபுரம் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

இதோ அமுதத்தை மிஞ்சும் சுவையான ஆம்லெட் ரெடி! உண்டு மகிழுங்கள்!!

இதே போன்று இந்த பேஸ்டை சைவ முட்டைப் பொறியல், தோசை, ரோஸ்ட், சப்பாத்தி, புரோட்டா, சைவ முட்டைக் குருமா, சாம்பார், பலவகை சட்னிகளுடனும் சேர்த்து தயாரித்து உண்டு மகிழுங்கள்.

LAB REPORT.
1.   Moisture (%) ---------------------------------- 4.00
2.   Carbohydrate (%)-----------------------------72.00
3.   Protein  (%)-----------------------------------10-00
4.   Fat (%)-------------------------------------------3.93
5.   Calclum (mg/100g)-------------------------206.45
6.   Iron (mg/100g)---------------------------------8.88

---------------------------------------------------(தொடரும்)