திங்கள், 25 நவம்பர், 2013

விஷ்ணுக்கிரந்தி. 
விஷ்ணுக்கிரந்தி


மூலிகையின் பெயர் –: விஷ்ணுக்கிரந்தி.


தாவரவியல் பெயர் -: EVOLVULUS ALSINOIDES.

;தாவரக்குடும்பம் -: CONVOLVULACEAE..

வேறு பெயர் விஷ்ணுக் காந்தி எனப்படும்.

பயன்படும் பாகங்கள் -: செடிமுழுதும்.

வளரியல்பு -விஷ்ணுக்கிரந்தி எல்லா இடங்களிலும் தானே வளரக்கூடியது. இது தரையோடு படர்ந்து வளரும் சிறுசெடி.இதன் தாயகம் தென் அமரிக்கா. இதன் தண்டு நீளம் 20 - 70 செ.மீ. வரை வளரும். முழுமையான சிறு இலைகளைக் கொண்டது. வட்டமான சிறு 

மலர்களை உடையது. இதன் பூ விட்டம் 6 - 8 மில்லி மீட்டர் இருக்கும்.  இதன் காய் சிறிதாக உருண்டையாக இருக்கும். அதில் நான்கு விதைகள் இருக்கும். பொதுவாக நீலநிறமாகவும் அரிதாக 
வெண்ணிற, செந்நிற மலர்களும் காணப்படுவதுண்டு. விஷ்ணுக் 
காந்தி எனவும் 
குறிப்பிடுவதுண்டு. தமிழகமெங்கும் தரிசு நிலங்களில் 
தானே வளர்கிறது. விதை மூலமும், பக்கவேர்கள் மூலமும் 
இனவிருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் -விஷ்ணுக்கிரந்தி நோய் நீக்கி உடல் தேற்றுதல், காய்ச்சல் போக்குதல், கோழையகற்றுதல், வியர்வை பெருக்குதல்,
தாது பலமளித்தல் மலர்ச்சிக்கலைப் போக்கும். இதன் எண்ணெய் பெண்கள் முடி வளர உபயோகிப்பர். இதன் வேர் குழந்தைகளின் காச்சலைப் போக்கும். மன அமைதியைக் கொடுக்கும். இதன் இலையை சிகரெட்டாகச் செய்து புகையை உள இழுத்தால் தொடர் இருமல், ஆஸ்த்துமா குணமாகும். இது தொழுநோயைக் குணப்படுத்தும். ஆகிய மருத்துவ குணங்கள்யுடையது.

விஷ்ணுக்கிரந்தி சமூலம், பற்படாகம், கண்டங்கத்திரி வேர், தூதுவேளை வகைக்கு 30 கிராம் சிதைத்து 1 லிட்டர் நீரில் போட்டு கால்
லிட்டராகக் காய்ச்சிக் காலை, மாலை 50 மி.லி.கொடுக்கச் சுரம் வலகும். 2, 3 வேள்ளையாகக் கொடுக்க விடாத காச்சல் தீரும்.

பற்படாகம் நீக்கி ஆடாதொடைசேர்த்து மேற்கண்டவாறு சாப்பிட என்புருக்கிக் காய்ச்சல் தீரும்.

இதன் சமூலம் அரைத்துக் கொட்டைப் பாக்களவு தயிரில் கொடுக்க இரத்த பேதி, சீதப் பேதி தீரும். காரம், புளி நீக்க வேண்டும்.

இதன் சமூல விழுது நெல்லிக் காயளவு ஓரிரு மண்டலம் கொள்ளக் கண்ட மாலை தீரும்.

விஷ்ணுக்கிரந்தி, ஓரிதழ்தாமரை, கீழாநெல்லி சமன் அரைத்துப் பாக்களவு காலை, பகல், இரவு உணவுக்கு முன் உண்டு பால் குடித்து
வர நரம்பு தளர்ச்சி, இந்திரி ஒழுக்கு, மறதி, வெட்டைச் சூடு தணிந்து உடல் பலம் உண்டாகும்.

விஷ்ணுக்கிரந்தி 5 கிராம் சமீலத்தைப் பால் விட்டு மையாய் அரைத்துப் பாலில் கலக்கி வடிகட்டிக் காலை, மதியம், மாலை 3 வேளையும்
கொடுத்து வரச் சீதபேதி, காய்ச்சல், மேகம், என்புருக்கி, இரைப்பு, இருமல், ஈளை,  வாத, பித்தத் தொடர்பான நோய்கள் அனைத்தும் தீரும்.

---------------------------------------------------------------------------------------------------------------(தொடரும்)