வெள்ளி, 29 மார்ச், 2013

பாலக்.


 
பாலக்

பாலக்.

மூலிகையின பெயர் :– பாலக். (PALAK.)

தாவரப்பெயர் :– BETA VULGARIS.L.

.தாவரக்குடும்பம் :- CHENOPODIACEAE.

வளரியல்பு :– பாலக் ஒரு கீரை வகையைச் சேர்ந்த மூலிகைச் செடி. இதன் தாயகம் ஐரோப்பா. இங்கு கடற்கரையோரம் Sea Beet லிருந்து உருவானது. பின் வட ஆப்பிரிக்கா, ஆசியா, இந்தியா போன்ற நாடுகளுக்குப் பரவிற்று. தென் ஐரோப்பாவில் இதன் வேரிலிருந்து சர்கரை எடுக்கிறார்கள். இதில் பல வகைகள் உண்டு. ஸ்பெயின் நாட்டில் பாலக் அதிகம் சாகுபடி செய்கிறார்கள் இதை ஆங்கிலத்தில் “MINES OF MINARALS” என்று சொல்வார்கள்.  அங்கு இதன் குடும்பம் AMARANTHACEAE என்கின்றனர். பாலக் வளர வளமான மண் தேவை. மணலிலும் வண்டல் மண்ணிலும் நன்கு வளரும். இதன் மண் அளவு 7 பிஎச். எப்போதும் இதற்கு ஈரம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இதற்கு மித சீதோஸ்ண கால நிலை தேவை. பாலக் ஒரு அடி முதல் 2 அடி உயரம் வரை வளரக் கூடியது. இது .75 அடி முதல் 1.5 அடிவரை பக்க வாட்டில் வளரும். இதற்கு நைட்ரஜன் உரம் அதிகம் தேவைப்படும். இதற்குத் தண்ணீர் தேங்க க்கூடாது. வடிகால் வசதி அவசியம். இதைப் பயிரிட முதலில் மண்ணை நன்கு உழுது உரம் இட்டு மிருதுவாக்க வேண்டும். பின்18 அங்குல இடைவெளி இருக்குமாறு பார்கள் அமைத்து அதன் பக்கவாட்டில் 1.5 அங்குல ஆழத்தில் விதைகளை 8 அங்குல முதல் 12 அங்குல இடைவெளியில் ஊன்ற வேண்டும். இதற்கு 3 நாட்களுக்கொருமுறை நீர் பாச்ச வேண்டும். பத்து நாட்களுக்குள் நாற்றுக்கள் முளைத்து வளர ஆரம்பிக்கும். ஈரப்பதம் காயாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அடுத்த 30 வது நாளிலிருந்து பாலக் இலைகளை வெளிப்பக்கத்திலிருந்து வெட்டி உபயோகப்படுத்தலாம். அறுவடை சுமார் 6-8 முறைசெய்யலாம். இலைகளை பூ விடும் முன்பு பறித்து விட வேண்டும். இது ஒரு ஆண்டுப் பயிர். இதில் வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி' உள்ளது.. பாலக் விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் :– பாலக் தலைவலியைக் குணப்படுத்தும். மூளைவளர்ச்சிக்கு உதவும். இதன் இலையைச் சாப்பிடுவதால் குடற்புண்ணைக் குணப்படுத்தும். தலைமுடி உதிர்வதையும், மொட்டையாவதையும் தடுக்கும். பாலக் இலைச் சாற்றைக் கொப்பளித்தால் பல் வலி குணமாகும். மஞ்சக் காமாலை சரியாகும். இதன் இலைச் சாற்றை வடிகட்டி 3 சொட்டுக் காதில் விட்டால் காதில் இறைச்சல் இருப்பதைக் குணப்படுத்தும். பாலக் வேரிலிருந்து வெளிநாட்டில் ‘வொயின்’ தயார் செய்கிறார்கள். கிரேட்பிரிட்டனில்  20 சதம் சர்கரை இருப்பதால் அதை எடுக்கிறார்கள். பாலக் சமூலத்தில் சாறு எடுத்து புற்று நோயைக் குணப்படுத்திகிறார்கள். அவை Leukemia, Breast, Esophagus, Glands, Intestines, Leg, Lip, Lung, Prostate, Rectum, Spleen, Stomach and Uterus. போன்றவை.

பாலக் விதையைக் கொதிக்க வைத்து வடிகட்டி அதன் நீரை மிதமான சூட்டில் இரண்டு டம்ளர் வீதம் மூன்று வேளை குடிக்க ‘GENITAL TUMORS’ ஐ குணப்படுத்தும். 

பாலக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் போக்கும்.

குளிர்ச்சியைத் தரும். குடல் நோய்களுக்கு நல்லது. இருதயத்திற்கு நல்லது.

பத்து கிராம் பாலக் இலைச் சாற்றுடன், சீரகம் 5 கிராம், பூண்டு இரண்டு பல்  ஆகியவற்றை அரைத்து மூன்று சம பாகமாகப் பிரித்து வடிகட்டி மூன்று வேளை  சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.
பாலக் சமையலில் பல விதமாகப் பயன்படுத்துகிறார்கள்.

கோவையில் பாலக் பசுமைக் குடிலில் விற்கப்படுகிறது. 250 கிராம் ரூ.15-00 


பாலக் மாடியில்பாலக் பசுமைக் குடிலில் வளர்க்கிறார்கள் வேண்டுவோர் கைபேசி-7598262973.பாலக் பசுமைக் குடலில்.
www.palakindia.com.

பாலக் விதைகள்.


பாலக் பூத்தது மாடியில்                       -
தொடரும்..