ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

கொய்யா. கொய்யா.


மூலிகையின் பெயர் –; கொய்யா.

தாவரவியல் பெயர் –; PSIDIUM GUAJAVA. 

தாவரக்குடும்பம். –; MYRTACEAE.

பயன் தரும் பாகங்கள் –; இலை, வேர், மற்றும் பழம்.

வளரியல்பு –; கொய்யா சிறு மரவகையை சேர்ந்தது.  இதன் தாயகம் மத்திய அமரிக்கா மற்றும் தென் மெக்சிகோ. முழுமையான எதிரடுக்கில் அமைந்துள்ள இலைகளையும் வெள்ளை நிற மலர்களையும், சதைப்பற்றுள்ள உருண்டையான மற்றும் ஓவல் அமைப்பில் உள்ள கனிகளையும், வழுவழுப்பான பட்டையையும் உடைய மரம். தமிழகமெங்கும் பழத்திற்காகப் பயிரடப்படுகிறது. காடுகளில் தானே வளரவதுண்டு. இதன் உயரம் சுமார் முப்பது அடி வளரும், மரத்தின் விட்டம் சுமார் 25 செ.மீ. கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் வரை வளரக்கூடியது. களிமண்ணிலும், சிறிது மணல் பாங்கான இடத்திலும் நன்கு வளரும். மண் 4.5 முதல் 8.2 பி.எச். இருந்தால் போதும். வருட மழையளவு 100 செ.மீ. போதும். வேர்கள் 25 செ.மீ. வரை சத்தை உருஞ்சக் கூடியது.  வெப்பமான பிரதேசத்தில் நன்கு வளரக்கூடியது. மரம் நல்ல கெட்டியானது. அதிக கிளைகள் வரக்கூடியது. பூத்து கொத்தாக காய்கள் விடக்கூடியது. காய் பச்சை நிறத்தில் இருக்கும். பழுத்தால் மஞ்சள் நிரமாக மாரும். பழத்திற்குள் வெண்மையான சதைப்பற்றுடன் விதைகள் இருக்கும். சில வகை கொய்யா சதைப் பற்று சிவப்பாக இருக்கும். மருத்துவப் பயன் ஒன்றே. விதையிலிருந்து இன விருத்தி செய்வார்கள். ஒட்டுக் கட்டியும் புதிய ரகங்களை தயார் செய்வார்கள். பழத்தில் லக்னோ 49 வகை பெரிதாகவும், இனிப்பாகவும் இருக்ககும். வைட்டமீன் "சி" அதிகமாக இருக்கும். அலகாபாத் பேடா வகை பெரிதாகவும் உருண்டையாகவும் நறுமணம் உடையதாகவும் இருக்கும். வரட்சியைத் தாங்கி வளரக் கூடியது. சிட்டிடார் உத்திர்ப்பிரதேசம் பெரிதாகவும் இனிப்பாகவும் இருக்கும். மேலும் பல வகைகள் உள்ளன.

கொய்யாவின் மருத்துவப் பயன்கள் –; ஒரு பிடி கொய்யா இலையை அரித்து ஒரு மிளகாயுடன் வதக்கி ஒரு லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக்காச்சி அரை மணிக்கு ஒரு முடக்கு வீதம் கொடுத்து வர வாந்தி, பேதி (காலரா) மந்தம், வாய்பொருமல், வறட்சி, தாகம் அடங்கும்.
கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து இலேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக்  கொதிக்க வைத்து இறக்கி, சூடாக இருக்கும் பொழுதே வடிகட்டி வைத்துக் கொண்டு,  ஒரு கோழி முட்டையை உடைத்து அதன் மஞ்சள் கருவை மட்டும் எடுத்து ஒரு பாத்திரத்தில் விட்டு நீர் போல அடித்து வைத்துக் கொண்டு, ஒருவர் கசாயத்தை அடித்திக் கொண்டிருக்கும் பொழுதே மற்றவர் கோழி முட்டை மஞ்சள் கரு எடுத்து அந்தக் கசாயத்தை விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மஞ்சள் கரு எல்லாவற்றையும் விடும் வரை அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு அந்தக் கசாயத்தில் பாதியளவைக் காலையிலும் பாதியளவை மாலையிலும் கொடுத்து வந்தால் நாட்பட்ட சீதபேதியானாலும் நின்று விடும். மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைக்குக் காலை, பகல் மாலை ஆக ஒரு நாளைக்கு மூன்று வேளை சங்களவு கொடுத்து வர  நாட்பட்ட சீதபேதி நின்று விடும்.
இரண்டு கைப்பிடளவு நறுக்கிய கொய்யா இலையை லேசாக வதக்கி இரண்டு டம்ளர் அளவுக்குத் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டி அந்த நீரைக் கொண்டு ஆசன வாயில் உள்ள மூலத்தை ஒரு நாளக்கு மூன்று முறை கழுவி வந்தால் நாளா வட்டத்தில் மூலம் சுருங்கி கடைசியில் மூலமே இல்லாமல் போகும். ஆனால் மூலம் சுருங்கும் வரை கழுவி வர வேண்டும்.
கொய்யா இலையைக் கொண்டு வந்து அதை வாயில் போட்டு மென்று அதைக் கொண்டே பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் குணமாகும். இதனால் ஆடும் பற்கள் கெட்டி படும். பற்சொத்தை நீங்கும். எகிர் வீக்கம் வாடி விடும். பற்களில் ஏற்படும் அரிப்பு அதாவது தேய்வு மாறி பல் வெண்ணிறமாகும்.  பல்லில் உள்ள அழுக்கு நீங்கும்.

கொய்யா மரத்தின் ஜல்லி வேர் அதாவது மெல்லிய வேர்களைக் கொண்டு வந்து அதைப் பொடியாக நறுக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுதும் மூடிவைத்து, காலையில் ஒரு டம்ளர் அளவு கொடுத்து வந்தால் வயிற்றுப் போக்கு நன்று விடும். குழ்ந்தைகளுக்கு ஒரு சங்களவு கொடுத்து வந்தால் வயிற்றுப் போக்கு நிற்கும். இந்த நீரைக் கொண்டு மூலத்தைக் கழுவி வந்தால் மூலம் சுருங்கு விடும். ஆனால் தொடர்ந்து 21 நாட்கள் வரை கழுவி வந்தால் தான் குணம் தெரியும்.
மலச்சிக்கலினால் கஷ்டப் படுகிறவர்கள் இரண்டு தினங்கள்க்கு ஒரு முறை கொய்யாப் பழத்தைத் தின்று வந்தால் மலம் இளகளாகச் சரளமாக இறங்கும். சிறுநீர் நன்கு பிரியும். எரிச்சல் குணமாகும்.

கொய்யாக் கொழுந்து இலையை மென்று தின்று இலகுவான உணவு உண்ண செரியாமை, மந்தம், குடல் வாயு தீரும். 

கொய்யாப்பழம் வெட்டியது.
           

---------------------------------------------------------------------------------------------(தொடரும்)