வியாழன், 19 ஜூலை, 2007

குமரி
1. வேறு பெயர்கள்- சோற்றுக் கற்றாழை, கன்னி, தாழை.

2. தாவரப்பெயர்- AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.

3. வளரும் தன்மை- சதைப்பற்றுடன் கூடிய தடிப்பான அடுக்கு மடல் கொண்ட செடி வகை. கற்றாழை மடல்கள் இருபுறமும் முள்போல் சொரசொரப்பான ஓரங்களைக் கொண்டிருக்கும், பக்கக் கன்றால் உற்பத்தியைப் பெருக்கும்.

4. பயன்படும் உறுப்புக்கள்- இலை மற்றும் வேர், இலையில் உள்ள சதைப்பற்றான ஜெல். ஒடித்தால் வரும் மஞ்சள் நிற திரவம்-கரியபோளம்.

5. பயன்கள்- தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல் போகும். தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும். கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன் படுகிறது. இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப்பயன் படுகிறது. இலை மஞ்சள் நிறத் திரவமும் தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும். வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றுகிறது. எரிசாராயத்துடன் கலக்கி முடிக்குப் போட முடிவளரும், நிறம் கருமையடையும். ஜெல்லைப் பதப்படுத்தி குளிர் பானமாகவும் பயன் படுத்தப் படுகிறது. வேறை சுத்தம் செய்து பால் ஆவியில் அவித்து உலர்த்திப் பொடி செய்து 15 மில்லி பாலுடன் கொடுக்க சூட்டு நொய்கள் தீரும்.ஆண்மை நீடிக்கும்.
(அடுத்த மூலிகை தொடரும்)
_________________________________________________________________________

2 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

திரு.குப்புசாமி
நல்ல விபரங்கள்.இதை வீட்டின் உள்ளே வளர்க்க முடியுமா? அல்லது சூரிய வெளிச்சம் உள்ள இடங்களில் தான் முடியுமா?

kuppusamy சொன்னது…

இதை வீட்டின் உள்ளே வளர்க்க முடியும், ஆனால் வளர்ச்சி குறைவாக வரும். சூரிய வெளிச்சம் உள்ள இடங்களில் நன்றாக வளரும். அந்தக்காலங்களில் கொசு வராமல் இருக்க இதை வீட்டினுள் கட்டி தொங்க விடுவார்கள்.பல மாதங்கள் பச்சையாகவே இருக்கும். தங்கள் பார்வைக்கு மிக்க நன்றி.