2. தாவரப் பெயர் -: JUSTICIA TRANQUEBRIENSIS.
3. தாவரக் குடும்பப் பெயர் -: ACANTHACEAE.
4. பயன்தரும் பாகங்கள் -: இலைகள்.
5. வளரியல்பு -: தவசு முருங்கை எல்லா வழமான நிலங்களிலும், தரிசு நிலங்களிலும் வளரக்கூடியது. தென்இந்தியாவில் எங்கும் காணப்படுகிறது. எதிர் அடுக்கில் சிறு இலைகளை இரு பக்கமும் கொண்டிருக்கும். இலைகளின் இடுக்குகளில் சிறு மலர்கள் தென்படும். தவசு முருங்கை சுமார் ஆறு அடி உயரம் வரை வளரும். இந்த இலைகளின் சுவை துவர்ப்பாக இருக்கும். இதன் தன்மை வெப்பம், கார்ப்புப் பிரிவு. இதன் செய்கை கோழையகற்றியாகவும், கரஹபகாரியாகவும் செயல்படும். குச்சிகள் மூலம் கட்டிங்காகவும், விதைகள் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படும்.
6. மருத்துவப் பயன்கள் :- தவசு முருங்கையினால் மூக்கு நீர்பாய்தல், உண்ணாக்கு நோய், ஐயம், இரைப்பு, பொடியிருமல் நீங்கும். கோழையகற்றும் குணமுடையது.
அவசியம் பீநசம்உண் ணாக்கும்-உவசர்க்க
ஐயஞ்சு வாசகபம் அண்டாது குத்திருமல்
வையம் விடுத்தேகும் வழுத்து"
இலை இரசத்தை வேளைக்கு ஓர் உச்சிக் கரண்டி அளவு உட்கொள்ள பிள்ளை பெற்ற அழுக்கு வெளிப்படும்.
இதன் சாற்றில் வெள்ளியைப் பழுக்க க்காய்ச்சி தோய்த்து வர கவட்டையாகும். (பக்குவம்)
இலைச்சாற்றை 15 மி.லி. காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், சளி, இரைப்பிருமல், பொடி இருமல் ஆகியவை தீரும்.
செடியை முழுமையாக உலர்த்திப் பொடித்துச் சமனளவு சர்கரைப்பொடி கலந்து அரைத் தேக்கரண்டி தேனில் குழைத்து உண்டு வர சளி, இருமல் ஆகியவை தீரும்.
அடிபட்ட வீக்கம் காயங்களுக்கு இலையை வதக்கிக் கட்ட உடன் வேதனை குறைந்து குணமாகும்.
--------------------------------------------------(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக