புதன், 3 நவம்பர், 2010

கவிழ் தும்பை.


1. மூலிகையின் பெயர் -: கவிழ் தும்பை.

2. தாவரப் பெயர் -: TRICODESMA INDICUS.

3. தாவரக் குடும்பப் பெயர் -: BORAGINACEAE.

4. வேறு பெயர்கள் -: கழுதைத் தும்பை.

5. பயன்தரும் பாகங்கள் -: சமூலம்.

6. வளரியல்பு -: கவிழ் தும்பை தும்பை இலைவடிவில் சொரசொரப்காக வெளிரிய முழுமையான இலைகளையும் தனித்த வெளிர் நீல அல்லது வெளிர் சிவப்பு நிறமுடைய கவிழ்ந்து தொங்கும் மலர்களையும் உடைய சிறு செடி. தமிழகமெங்கும் தரிசு நிலங்களிலும் சாலையோரங்களிலும் தானே வளர்கிறது. இதன் தாயகம் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஆகும். இது விதைமூலம் இன விருத்தியாகிறது.

7. மருத்துவப் பயன்கள் -: கவிழ் தும்பை இலை குருவையரிசி சமனளவு இடித்து மாவாக்கிப் பனவெல்லம் கலந்து பத்து கிராம் அளவாகக் காலை, மாலை 3 நாள் கொள்ள பெரும்பாடு தீரும்.

‘அரையாப்புக் கட்டி யனில முத்திரம்

பிரியாச்சீதக் கடுப்பும் பேருந் - தரையிற்

பழுதைக்கொள் ளாச்செய்ய பங்கையப்பெண்ணே கேள்

கழுதைத்தும் பைச்செடியைக் கண்டு.’

கவிழ் தும்பையால் அரையாப்புக் கட்டி வாதநோய், இரத்தமுஞ் சீதமும் கலந்து விழலால் வரும் கடுப்பு ஆகியவை போம்.

கவிழ் தும்பைச் சமூலத்தில் ஒரு பிடி எடுத்து ஒன்று இரண்டாக நசுக்கி, 4 ஆழாக்கு நீர் விட்டுக் குடிநீர் செய்து, காலை மாலை அரை ஆழாக்கு வீதம் கொடுத்து வர மேற்கண்ட நோய்கள் தணியும்.

இதன் இலையை சமைத்துச் சிறிது சிற்றாமணக் கெண்ணைய் விட்டுக் கிண்டிக் கிளரி அரையாப்புக்கு (நெரிகட்டுதலுக்கு) வைத்துக் கட்ட குணம் தெறியும்.

கவிழ் தும்பை இலையை தேன்விட்டு வதக்கிக் குடிநீர் செய்து கொடுக்கப் பெரும்பாடு நீங்கும்.

கவிழ் தும்பை இலையை அரைத்துத் துருசுக்குக் (பாசாணம்)

கவசித்துக் (அடுக்கு) மண் சட்டியில் ஐந்து எருக்கள் வைத்து சூடேற்றி புடமிட துருசு செந்தூரமாகும்.

--------------------------------------(தொடரும்)

5 கருத்துகள்:

உருத்திரா சொன்னது…

பயனுள்ள பதிவு

ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ஆஹா...ப்ரமாதன் ஸார்..
தொடருங்கள்..தொடர்கிறேன்!!அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

kuppusamy சொன்னது…

ஆர.ஆர்.ஆர். அவர்களே தொடர்ந்து படித்தமைக்கு மிக்க நன்றி.

kuppusamy சொன்னது…

உருத்திரா அவர்களுக்கு மிக்க நன்றி.தொடர்ந்து படியுங்கள்.

Ananth Rajendran சொன்னது…

நன்றி