வெள்ளி, 24 செப்டம்பர், 2010

கொடிப்பசலை.


சிலோன்கீரை,
தரைப்பசலை
.


கொடிப்பசலை.


1. மூலிகையின் பெயர் :- கொடிப்பசலை.
2. தாவரப்பெயர் :- PORTULACA QUADRIFIDA.
3. தாவரக் குடும்பம் :- PORTULACACEAE.
4. பயன் தரும் பாகங்கள் :- இலைகள்.
5. வளரியல்பு :- கொடிப்பசலை தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இதன் பூர்வீகம் அமரிக்கா, பின் ஆப்பிரிகாவுக்கும் இந்தியாவுக்கும் பரவிற்று. இதை வீட்டுப்பந்தல்களில் கீரைக்காகவும், அழகுக்காகவும் கிராமங்களில் வளர்க்கிறார்கள். வாழ்க்கைக்கு மிகவும் ஜீவாதாரமாக இருப்பவை கீரைகள்.அவை நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு உதவுகின்றன. வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஊட்டச் சக்தியாக கீரைகளிலும் காய்கறிகளிலும் இயற்கை வழங்குகின்றது. கீரைகளிலும் காய்கறிகளிலும் இயற்கை அன்னை தன்னுடைய மிக விரிவான ஜீவாதாரமான ரசவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறாள். உணவு நிபுணர்கள் பசலைக்கீரைக்கு முதல் இடம் வழங்கியுள்ளனர். பசலையில் செடிப்பசலை என்ற இனம் உண்டு. இது குத்துச் செடியினம். இது இலங்கையிலிருந்து வந்ததால் சிலோன்கீரை என்றும் அழைப்பர். இதன் இலைகள் சிறிதாக எதிர் அடுக்கில் இருக்கும். இதன் தண்டைக் கிள்ளி வைத்தால் வளரும். மற்றொன்று தரைப்பசலை என்பது. இது தரையில் படர்ந்து வளரும். இலைகள் சிவப்பாகவும் பசுமையாகவும் இருக்கும். குணம் எல்லாம் ஒன்று தான். கொடிப்பசலையின் இலைகள் பச்சையாகவும், வட்டமாக நீண்டு இருக்கும். கொடி 90 அடிக்கு மேல் படரும். படத்தில் உள்ள கொடிகள் என் மாடிவீடு வரை படர்ந்துள்ளது. பல வருடம் இருக்கும். பழங்கள் கருநீலத்தில் இருக்கும். கொடியை வெட்டி வைத்தால் வளரும். விதை மூலமும் வளரும்.
6. மருத்துவப்பயன்கள் :- பசலைக்கீரை இலையாக அமைந்த கறியாகும். அதில் இரும்பு சத்து ஏராளமாக உள்ளது, இனவே இரத்தம் குன்றியுள்ள சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் நன்மை தருகின்றது. பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து உள்ளது, மருந்தாகும் மதிப்பு உள்ளது. இதில் பெரும் அளவில் வைட்டமின் சத்துக்கள் உள்ளன, சுண்ணாம்புச்சத்து உள்ளது, இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹிமொகுளோபின்) உள்ளது. புரதங்களைப் பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளன. அது நம்மைப் பேணிப் பாதுகாக்கும் உணவு. அதில் காரசத்துள்ள தாதுப் பொருள்கள் ஏராளமாக உள்ளன. ஆதலால் அது தொத்து நோயிக்கு எதிர்பான தடுப்புச் சக்தியை மிகவும் ஆற்றலுடன் பேணுகின்றது.
பசலைக்கீரையை உட்கொண்டால் எரிச்சலூட்டும் ஒரு வகை நச்சு அமிலச்சத்து மிகமிகச் சிறிய அளவில் உண்டு. தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதச்சத்தும் இதில் மிகமிகச்சிறிய அளவில் உண்டு. ஆனால் வைட்டமின் சத்துக்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி ‘ ஆகியனவும், பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் ஏராளமாக உள்ளன. வைட்டமின் ‘ஏ’ பார்வைக் கோளாரைக் குணப்படுத்தும், இரத்த விருத்தி உண்டாக்கும். இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. சோடியம், போலாசின், கால்சியம் உள்ளன ஆனால் கொழுப்பு சத்துக்கிடையாது. பசலைக்கீரை மிகவும் சுலபமாக செரிகின்றது, குளிர்ச்சி தருகின்றது, ஊட்டச்சத்து உள்ளது. எரிச்சலைத் தணிக்கின்றது, மிக உயர்ந்த உணவாக உள்ளது. பித்தம், நீர்தாரை, வெட்ட நோய்கள் குணமாகின்றன. தோல்நோய்கள், மேகம், சீதபேதி குறைகின்றது. இதன் இலைச் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க நீர்கோவை குணமாகும். இந்தக் கீரை சாப்பிடும் போது தாது கெட்டி படும். மூளைக்கு சக்தியைக் கொடுக்கும். இலையை வாட்டி தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். இதை சிறிதளவு தண்ணீரில் சமைக்க வேண்டும். சமைத்த பின் தண்ணீரை வெளியில் கொட்டிவிடக் கூடாது ஏனெனில் அதில் மிகுந்த ஊட்டச்சத்துப் பொருள்கள் உள்ளன. மிளகு, பூண்டு, தக்காளி சேர்த்து ரசம் வைக்கலாம்.
பசலைக்கீரையின் இளம், மென்மையான முளைகளைச் சமைக்காத பச்சடிகளில் பயன்படுத்தலாம். இவற்றைப் பச்சடிக் கீரையின் கொழுந்துகளுடன் செர்த்துக் கொள்ளலாம். இது நல்ல பசியைத் தூண்டிவிடுகின்றது. பருப்புகளுடன் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளும் கீரை வகைகள் மிகவும் நன்மை தருகின்றன.
பசலைக்கீரை மலத்தை நன்றாக இளகச் செய்கின்றது. எரிச்சலைத் தணிக்கின்றது. திசுக்களின் அளிவை இது குறைக்கின்றது. இதில் உடல் வறட்சிக்கு எதிரான பெரிபெரி என்னும் வீக்க நோயிக்கு எதிரான, கரப்பான் வியாதிக்கு எதிரான சத்துக்கள் கணிசமான அளவில் உள்ளன. கொழுந்தாக உள்ள கொடிச் சுருளைப் பச்சையாகவே உண்பது மிகுந்த நன்மையைத் தருகின்றது.
நீரிழிவு, இரத்தக் குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பசலைக்கீரை மிகவும் உதவுகின்றது. இதன் சாறு, சிறுநீரில் கற்கள் இருந்தால் அவற்றைக் கரைக்க உதவுகின்றது. கற்களைக் கரைத்து வெளியேற்றும் சக்தி அதற்கு உள்ளது. சிறுநீரகக் கோளாறுகளையும் இது அகற்றுகின்றது. இதன் சாற்றைக் கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகின்றது.
இலைகளை (1 லிருந்து 10 வரை)க் கக்ஷாயம் வைத்து அருந்தினால் காய்ச்சல்கள், கல்லடைப்பு, சுவாசப்பைகளிலும் குடல்களிலும் ஏற்பட்டுள்ள வீக்கங்கள், சுவாசிப்பதில் சிரமம், வேகமாக இயங்கும் சுவாசம் ஆகியவை குணமாகின்றன. இத்தகைய நோய்களின் போது இது எரிச்சலைத் தணிக்கின்றது. துவர்ப்பு மருந்தாக உதவுகின்றது, சிறுநீரைப் பெருக்குகின்றது. உட்கொள்ளும் அளவு 1 அல்லது 2 அவுன்சு.
வளரும் இளம்பெண்கள் பசலைக் கீரையை ஏராளமாக உண்ணவேண்டும், அதில் இரும்புச் சத்து ஏராளமாக உள்ளது, சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது.
முதல் படம் சிலோன் கீரை.

--------------------------------------------(தொடரும்)

பசலைக் கீரை
பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு வேறு இல்லை எனலாம் .
பசலைக் கீரை பொதுவாக மூன்று வகைப்படும். சிறு வெற்றிலை அளவில் ந்நிறமுடையதாக இருக்கும் இலைகளுடன் கொடியாகப் படரும் பசலை கொடிப்பசலை எனப்படுகிறது. இதை வீட்டுத் தோட்டத்திலும் தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம்.
தரைப்பசலையின் இலைகள் மிகவும் சிறுத்து இளஞ்சிவப்பாகவும், பச்சையாகவும் இருக்கும். இது தரையில் படரும்.
இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம்.
ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்குமீறி சாப்பிடக் கூடாது.
இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த
விருத்திக்கும் உதவுகிறது.
இந்த கீரையில் வைட்டமின் A, B C சத்துகள் உள்ளது . சுண்ணாம்பு சத்து நார் சத்து இரும்பு சத்து அடங்கியது . இது தாதுவை கெட்டிப்படுத்தும். மூளைக்கு சக்தி கொடுக்கும் .
உடல் வரட்ச்சியை அகற்றும். உள சூட்டை போக்கும். மருத்துவக் குணங்கள் இதில் மிக அதிகமாக உள்ளன . பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது.
ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.
இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த
விருத்திக்கும் உதவுகிறது.
ஒரு கப் பசலைக்கீரையில் இருக்கும் உணவுச்சத்து: கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லிகிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்.
இலையை நன்றாக அரைத்து கொப்புளம், கழலை, வீக்கம் ஆகியவற்றின் மீது பற்றிட்டால் அவை குணமாகும்.
இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால் உண்டான தலைவலி நீங்கும்.
பசலை கீரை ஏழைகளின் சத்துள்ள தாவர டானிக் !
Thanks to roja123
-------------------------------------------------------------------------------------------
நண்பர் மூகநூலில் எழுதியது........9-8-2014

கொடிபசளையும் குழந்தைப்பேறும் !
“குழல் இனிது யாழ் இனிது என்பர் தம்
மக்கள் மழலைச் சொல் கேளாதவர் !”
நம்மில் எத்தனையோ பேர் குழந்தைச் செல்வம் இல்லாமல் அவதிப்படுவதும், மன உளைச்சலுக்கும் ஆளாவதும் அறிந்த விஷயம் !
சித்தர்கள், ஆரோக்கிய வாழ்வைப்பற்றி சொல்லும்போதெல்லாம் மனம் + உடல் +ஆன்மா என்றே சொல்லிவிட்டிருக்கிரார்கள். ஆயுர்வேதம் சொல்வதும் அதுவே. பொதுவாக குழந்தை இல்லை என்று என்னிடம் சாதகம் கேட்க வருவோர்களுக்கு அயராமல் அடியேன் சொல்லும் விளக்கம்,
“உடலையும் மனதையும் தாண்டி கோள்கள் எதுவும் செய்யாது !” இந்த ஆன்மா நல்வினை தீவினைகளை இந்த இரண்டின் மூலமே அனுபவிக்கிறது. அப்படி இருக்க பெண் உடலையும் ஆண் மனதையும் திடப்படுத்திக்கொண்டால், குழந்தைபேறு மட்டுமல்ல, வேறு எந்த ஒரு விதியையும் நாம் மாற்றி அமைக்க முடியும் !!”
அந்த வகையில் பெண்களின் உடல் உறுதிக்கும், கர்ப்பப்பையினில் உண்டாகும் பிரச்சச்சனைகளுக்கும் தேவ மூலிகையாக விளங்குபன.. சதாவேரி, அசுவகந்தா மற்றும் திரிபலாதி யான நெல்லி, தான்றிக்காய், கடுக்காய் ஆகும்.
இவற்றையெல்லாம் எட்டித்தாவி மாதவிடாயினை சரி செய்து, குழந்தைபேறுக்கு தயார்படுத்தும் தேவ மூலிகை இந்த கொடிபசளை !
2009 ஒன்பதாம் வருடம்.. எனது மானசீக குரு அய்யா இயற்கை மருத்துவர் சண்முகவேல், கோயம்பத்தூர், அவர்களுடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம்.. எதையோ பார்த்தவர், உடனே வண்டியை நிறுத்தச் சொன்னார். சரசரவென்று வண்டியிலிருந்து இறங்கியவர், அழகுக்காக வைக்கப்பட்டு பின்னர் ரோட்டோரம் வெட்டி வீசப்பட்ட ஒரு கொடிவை தனது மார்பில் அனைத்து தூக்கும் அளவிற்கு குழந்தையை தூக்குவது போல தூக்கினார் .. அசந்தே போய் விட்டேன்! அடியேனும் அவரும் சேர்ந்து அதை தூக்க முடியாமல் தூக்கி வந்து .. மருத்துவ மனையில் உள்ள அனைவருக்கும் சமைத்துப்போட்டார்.
ஒரு தம்பதியினர் ஐந்து வருடமாக குழந்தை இல்லை என்றும் அதனால் அவர்கள் குடும்பத்திலும் மனசங்கடம் உள்ளதெனவும் கேட்டு வந்தார்கள். உடனடியாக நான் சொன்னவிஷயம் கொடிபசலைதான் .. அதுவும் நண்பர் சொன்ன ஆலோசனைதான்.
மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் குறைந்தது ஒரு வாரம் இந்த கொடிபசலையை //வறுத்து அதன் பண்பைக் கொன்றுவிடாமல்// லேசாக பருப்புடன் வேகவைத்து அவியலாக செய்து சாப்பிட வைத்தோம் !! அடுத்த மதத்திலேயே கரு தங்கியது !!
இந்த சிகிச்சையை போன வருடம் கூட ஒரு தம்பதிக்கு வேலூரில் சொல்லி போன மாதம் குழந்தை பிறந்துள்ளது !!
சாதாரண பாலக் கீரையைப் போலவே சுவை உடைய இந்த மா மூலி யாருக்காவது வாழ்க்கை மாற்றத்தை ஏற்படுத்தினால் சந்தோஷமே !
உடலையும் மனதையும் தொடாமல் குழந்தை பிறக்காது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு, சாமியையோ அல்லது சாமியாரையோ நாடாமல், உடலையும் மனதையும் உறுதிப்படுத்தி நலமுடன் வாழலாமே!
  • You like this.
  • Kuppu Samy இது பற்றி எனது வலைப்பதிவான 'மூலிகைவளம்' பாருங்கள்.
  • Aanma Sakthi nandri ayia.....

6 கருத்துகள்:

MACHAMUNI BLOGSPOT சொன்னது…

மதிப்பிற்குரிய ஐயா,
தங்கள் பணி பாராட்டுதற்குரியது.புகைப்படக் கருவி போன்ற வசதிகள் எனது முப்பாட்டனார் காலத்தில் இல்லாததால்,மூலிகைகளை இனங்கண்டு கொள்வது கடினமாக உள்ளது.எனது பற்பல சந்தேகங்களை தீர்க்கும் வண்ணம் உங்கள் வலைப்பூ உள்ளது.அது மட்டும் அல்ல பலரது வியாதிகளையும் தீர்க்கும் வண்ணம் உள்ளது.நாங்கள் பலருக்கும் பல விஷயங்களை விளக்கும் கலைக்களஞ்சியம் உங்கள் வலைப்பூ என்றால் அது மிகையல்ல.
நன்றி
என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்

S.S.Alauddeen சொன்னது…

மதிப்பிற்குரிய குப்புசாமி அய்யா அவர்களுக்கு இறைவன் எல்லா நலன்களையும் தந்தருளட்டும்.
கொடி பசலை குறித்து அறிந்து கொண்டோம். அக்கட்டுரையில் காட்டியுள்ள சிலோன் செடி பசலை கொடியின் குணங்களை கொண்டதா? என்பதை விளக்கவும்.
நன்றி.
S.S. அலாவுத்தீன்.

kuppusamy சொன்னது…

திரு சாமி அழகப்பன் அவர்களுக்கு என் வலைப்பதிவை பாரத்தமைக்கும் பாராட்டுக்கும் எனது நன்றியைத் தெறிவித்துக் கொள்கிறேன். நான் எல்லா மக்களும் பயன் அடைய இந்தப்பணி செய்து கொண்டுள்ளேன். காவல் துறைப்பணியில் 34 ஆண்டுகள் முடிந்தபின் இதைச் செய்து கொண்டுள்ளேன். மூலிகை இனம் காணல் ஒரு பெரிய இடர்பாடாகத்தான் உள்ளது. தற்போது கைஅலைபேசி மூலமாகக் கூட புகைப்படங்களை எடுத்து வலைப்பதிவில் போடும் வசதி உள்ளதால் செல்லும் இடஙைகளில் காணும் மூலிகைகளையெல்லாம் எழிதில் போடுகிறேன். உங்கள் ஒத்துழைப்பு எனக்கு மிகவும் தேவை. பாரம்பறிய மூலிகை மருத்துவத்தை மக்களும் அறியட்டும். தாங்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டமைக்கு மிக்க நன்றி. வணக்கம்,
தங்கள் அன்புள்ள
குப்புசாமி.க.பொ.

ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

எங்கள் வீட்டிலும் பசலைச் செடி (கொடி பசலை) உள்ளது. அதன் அருமை தெரியச் செய்துள்ளீர்கள், நன்றி!!

kuppusamy சொன்னது…

வணக்கம் ராம்மூர்த்தி அவர்களே. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. மக்களுடன் நீங்களும் பயன் அடையுங்கள்.

kuppusamy சொன்னது…

இராச்சுந்தரம் என்பவர் யு.கே. விலிருந்து எனக்கு எழுதிய மின்னஞ்சலும் பதிலும் காண்க.

Dear Sir,This is Rajasundaram mailing from Stevenage ,UK.When browsing the web last night It happened to access your blog.It is very informative and details about all ‘’mooligais’’. I haven’t gone thru it 100% but before that thought of dropping you a line. I reckon your blog will be a treasure for the next generation who doesn’t know anything about Ayurvedha/Natural treatment or remedies for most of the health problems.Hats off to you and Keep up the great job!PS:Could you please provide details about the vizham pazham(Wood Apple) as it got lot of medicinal values.Thanks,

Raj
இராசசுந்தரம் அவர்களுக்கு மிக்க நன்றி. விளாவின் தாவரப்பெயர்- Feronia elephantum. இது மரவகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து,இலை, காய், பழம் , ஓடு பிசின் ஆகியவை மருத்துவப்பயனுடையவை.
இதன் பொது குணம் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்வது. பழம் கோழையகற்றிப் பசியுண்டாக்கும். பழு ஓடு தாது தாதுக்களின் கொதிப்பைத் தணிக்கும். பிசின் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும். புகைப்படம் எடுத்தபின்பு வலைப்பதிவில் எழுதுகிறேன் மிக்க நன்றி.
அன்புள்ள
குப்புசமி.
15-11-2010.