1. மூலிகையின் பெயர் :- கோவை.
2. தாவரப்பெயர் :- COCCINIA INDICA.
3. தாவரக் குடும்பம் :- CUCURBITACEAE.
4. பயன் தரும் பாகங்கள் :- இலை, காய் மற்றும் கிழங்கு.
5. வளரியல்பு :- கோவைக் கொடி நன்கு படர்ந்து வளரக் கூடிய கொடி இனத்தைச் சேர்ந்தது. இது சாதாரணமாக வேலிகளிலும், குத்துச்செடி, மரங்களிலும் படர்ந்து தமிழகமெங்கும் வளரக்கூடியது. இதன் இலைகள் ஐந்து கோணங்களையுடைய மடலான காம்புடையது. மலர்கள் வெள்ளையாகவும், நீண்ட முட்டை வடிவ வரியுள்ள காய்களையும், பழங்கள் செந்நிரமாக இருக்கும். பெண்களின் உதடுகளை இந்தப் பழத்திற்கு ஒப்பிடுவர் புலவர்கள். வேர் கிழங்காக வளரும்.
6. மருத்துவப்பயன்கள் :- கோவை சிறுநீர், வியர்வை ஆகியவற்றை மகுதிப்படுத்தும் குணமுடையது. வாந்தியை உண்டாக்கும் தன்மையுடையது. இரத்த சர்கரையை (Blood sugar) குணப்படுத்த வல்லது.
கோவையின் ஒரு பிடி இலையை 200 மி.லி. நீரில் சிதைத்துப் போட்டு 100 மி.லி. யாகக் காச்சிக் காலை மாலை குடித்து வர உடல் சூடு, கண்ணெரிச்சல், இருமல், நீரடைப்பு, சொறிசிரங்கு, புண் ஆகியவை போகும்.
இதன் இலைசாறு 30 மி.லி. காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர மருந்து வேகம் தணியும்.
கோவைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வரச் சொறி, சிரங்கு, படை, கரப்பான் ஆகியவை தீரும்.
கோவையின் பச்சைக் காய் இரண்டை தீனமும் சாப்பிட்டு வர மதுமேகத்தைக் தடுக்கலாம்.
கோவைக் கிழங்குச் சாறு 10 மி.லி. காலை மட்டும் குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா) இரைப்பு, கபரோகம், மார்புச்சளி, மதுமேகம், கண்டமாலை, வீக்கம் ஆகியவை தீரும்.
கோவைக்காயை துண்டு துண்டாக வெட்டி, வெய்யிலில் நன்கு காயவைத்துப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி வீதம் மூன்று வேளை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை நோய் குணமாகும். பச்சைக் காயை வாரம் இருமுறை பொறியல் செய்தும் சாப்பிடலாம்.
--------------------------------------------------(தொடரும்)
3 கருத்துகள்:
இலஙைகையிலிருந்து இன்று வந்த மின்னஞ்சல்-
எனதன்புள்ள குப்புசாமி அய்யா
தங்களது இணையத்தளத்தினை பார்த்த பிறகுதான் உங்களைப்பற்றி தெரிய வந்தது அதனால்தான் உங்களுடன் இலங்கையிலிருந்து தொடர்புகொண்டேன். உங்களுடைய இச்சேவையானது மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒரு செயல். காரணம் அனேகமானோர் தங்களுக்கு தெரிந்த மூலிகைகள் மற்றும் அவற்றின் இரகசியங்களை மறைத்து சித்து விளையாட்டு காட்டும் இக்காலத்தில் நீங்கள் செய்யும் இக்காரியம் மிகவும் போற்றப்பட வேண்டும். மேலும் நான் ஒரு வியாபாரி. இலங்கயின் கிழக்கு மாகாணத்தில் விவசாய இரசாயங்களை விற்பனை செய்து வருகிறேன். எனக்கு தற்போது வயது 30 தான் ஆகிறது. இருப்பினும் மூலிகைகள் பற்றி அறிய எனக்கு ஓரளவு ஆவல் இருந்தது, இருப்பினும் அதுபற்றி போதிய வழிகாட்டல் இன்மையால் அவ்வறிவு மழுங்கடிக்கப்பட்டு விட்டது. உங்களது தளத்தை பார்த்த பின்னர்தான் எனது ஆர்வம் தூண்டப்பட்டுள்ளது.
எனது தாயார் தற்போது நீரிழிவு நோயினால் அவதிப்படுகிறார். அதன் காரணமாத்தான் இன்சுலின் செடி பற்றி உங்களிடம் தொலைபேசியூடாக கேட்டேன்.முடியுமானல் அதனை எனக்கு தரவும். காரணம் எனது தாயார் மட்டுமல்ல அவரது சகோதர சகோதரிகளும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர், எனது தாயாரின் மூத்த சகோதரிகளுள் ஒருவர் இதனால் இறந்துவிட்டார்.
மேலும் என்னிடம் பழங்காலத்தில் பனை ஓலையில் தமிழில் எழுதப்பட்ட மருத்துவக்குறிப்பேடு உள்ளது ஆனால் அதனை வாசித்து விளங்குவது மிக கடினமாக உள்ளது. உங்களால் அதற்கு உதவ முடியுமா? அப்படியானால் அவ்வோலைகளின் பிரதிகளை உங்களுகு இ மெயில் மூலம் அனுப்ப முயற்சிக்கிறேன்.
உங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்
நன்றி
முகம்மது கியாஸ்
அன்புள்ள மொகமது கியாஸ் அவர்களுக்கு எனது வலைப்பதிவைப் படித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த சின்ன் வயதில் உங்களுக்கு மூலிகையின் பால் உள்ள ஆர்வத்தைக் கண்டு பூரிப்படைகிறேன். உங்கள் ஆசை நிறைவேரும். தமிழ் நாடு வந்தால் கோவை மாவட்டம் வந்து என்னைச் சந்திக்கவும். என்னால் முடிந்த உடவிகளைச் செய்கிறேன். ஏட்டுச் சுவடி நகல் அனுப்பி வைக்கவும் தெறிந்தவர் மூலம் படிக்க முயற்சிக்கிறேன். எனது முகவரி-குப்புசாமி.கெ.பி. 39, பேராநாயுடு வீதி, பாப்பநாய்க்கன்பாளையம், அஞ்சல், கோவை-641037. போன்-0422 2242626. எனது நணபர் சித்தமருத்துவர் பன்னீர்செல்வம், அலைபேசி-9363000645. தொடர்பு கொண்டு வியாதி பற்றிய விபரம் கேட்கவும், மருந்து தயார் செய்கிறார. வியாபார நோக்கத்துடனும் அணுகலாம். விளக்கம் அளிப்பார். நன்றி.
அன்புள்ள,
குப்புசாமி.
ஐயா!
இது "கொவ்வையா?" , கோவையா?
அப்பர் தேவாரத்தில் "குனித்த புருவமும்
கொவ்வைச் செவ்வாயும் எனத்தானே குறிப்பிடுகிறார்.
இலங்கையில் கொவ்வை என்போம்.
கருத்துரையிடுக