சனி, 13 ஆகஸ்ட், 2011

மூக்கிரட்டை

மூலிகையின் பெயர் -: மூக்கிரட்டை.

தாவரப்பெயர் :- BOERHAAVIA DIFFUSA.

தாவரக்குடும்பம் ;- NYCTAGINACEAE..

வேறு பெயர்கள்-மூக்குறட்டை, சாட்டரணை, மூச்சரைச்சாரணை முதலியன.

பயன்தரும் பாகங்கள் :- இலை, தண்டு, வேர் விதை முதலியன.

வளரியல்பு :- மூக்கிரட்டை தரையோடு படர்ந்து வளரும் சிறு கொடி. இலைகள் மேல்புரம் பச்சையாகவும் கீழ்புரம் வெழுத்து சாம்பல் நிறத்திலும் நீழ்வட்டமாக எதிர் அடுக்கில் இருக்கும். செந்நிறச் சிறு பூக்களையும் சிறு கிழங்கு போன்ற வேர்களையும் உடைய கொடி. இது தமிழகமெங்கும் தோட்டங்களிலும், தரிசு நிலங்களிலும் தானே வளர்கிறது. சாலையோரங்களிலும், வாய்கால் போன்ற இடங்களிலும் காணப்படும் கழைக்கொடி.. சிறிது வேர் இருந்தாலே ஈரம் பட்டவுடம் தளைத்துவிடும். இதன் தாயகம் இந்தியா பின் பசிபிக்கிலும், தென் அமரிக்காவிலும் பரவிற்று. இது செப்டம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் பூத்துக்காய்க்கும். விதைமூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் :- ஒரு பிடி  வேரும், 4 மிழகும் 100 மி.லி.விளக் கெண்ணையில் வாசனை வரக் காய்ச்சி ஆறவிட்டடு வடிகட்டி வைத்ததுக் கொண்டு
6 மாதக் குழந்தைக்கு 15 மி.லி.
அதற்கு மேல் 30 மி.லி. வாரம் 1 அல்லது 2 முறை கொடுத்துவர மலச்சிக்கல், மூலச்சூடு, நமைச்சல், சொறி சிரங்கு, மலக்கழிச்சல், வாந்தி,செரியாமை ஆகியவைத் தீரும். மாலையில் வசம்பு சுட்ட கரியைப் பொடி செய்து தேனில் உட்கொள்ளவும்.

ஒரு பிடி வேர், மிளகு 4, உந்தாமணிச்சாறு 50 மி.ல்லி. ஆகியவற்றை100 மி.லி. விளகெகெண்ணையில் காய்ச்சி வாரம் 2 முறை மேற்கண்ட முறையில் சொன்னவாறு கொடுத்து வர குழந்தைகளுக்குக் காணும் காமாலை, கப இருமல், சளி, மாந்த இழுப்பு, அடிக்கடி சளி, காய்ச்சல்  வருதல் குணமாகும்.

ஒரு பிடி மூக்கிரட்டை வேர், அருகம்புல் 1 பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 3 வேளையாகத் தினமும் குடித்து வர கீல் வாதம், ஆஸ்துமா, கப இருமல், மூச்சுத் திணரல் தீரும்.

வேர் ஒரு பிடி, அருகம்புல் ஒரு பிடி, கீழாநல்லி ஒரு பிடி, மிளகு 10 சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 2 வேளை சாப்பிட்டு வரக் காமாலை, நீர் ஏற்றம், சோகை, வீக்கம், நீர்கட்டு, மகோந்தரம் தீரும்.

இலையைப் பொறியல், துவையலாக வாரம் 2 முறை சாப்பிட்டு வரக் காமாலை, சோகை, வாயு நோய்கள் வராமல் தடுக்கலாம்.

வேரை உலர்த்திப் பொடித்துக் காலை, மாலை ஒரு சிட்டிகை தேனில் கொள்ள மாலைக் கண், கண்படலம், பார்வை மங்கல் ஆகியவை குணமாகும்.

கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்

இலையைத் தொடர்ந்து பயன்படுத்தி வரப் பொலிவும் இளமையும் வசீகரமிம் உண்டாகும்.
இதன் இலைகளை சுத்தம் செய்து நன்கு அரைத்து நெல்லிக் காயளவு எடுத்து கால் ஆழாக்கு  கருங்குறவை அரிசியில் சேர்த்து சமைத்து அந்த மாவை அடையாகத் தட்டி வாணலியில் அதிக எண்ணெய்யிட்டு அதை வேகவைத்து வேளைக்கு ஒரு அடை வீதம் காலை, மாலை 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும். அப்போது தவிர்க்க வேண்டியவை காரம், மீன், கருவாடு, ஆகியவை.

மூக்கிரட்டைப் பட்டை வேர்-20 கிராம், மாவிலங்கு மரப்பட்டை-20 கிராம், வெள்ளைச் சாரணை வேர்-20 கிராம் மூன்றையும் பொடியாக இடித்து முதல் நாள் இரவில் 250 மி.லி. தண்ணீரில் ஊரவைக்கவேண்டும். 50 மி.லி. வரும் வரை கொதிக்கவைத்து இறக்கி வைத்து ஆறவிட்டு வடிகட்ட வேண்டும். இத்துடன் 60 மி.லி. கிராம் நண்டுக்கல் பற்பம் சேர்க்க வேண்டும். தினமும் பல் துலக்கியதும் இதை அருந்திவர 2,3 மாதங்களில்  முகவாத நோய் நிரந்தர குணம் ஏற்படும்.------------------------------------------------------------------------(தொடரும்)


4 கருத்துகள்:

kuppusamy சொன்னது…

Dear sir,

Today i read first time your blog that's very very useful for like those who are interested in plants& trees,

From the childhood i am interested in plants i am growing varies plants and trees in my home wherever i go i collect the seeds and plants.

Some plants i know the name but i cant identify that in u r blog i see the pictures of the plants.

if u r having the seeds of the herbs pls send me some seeds i will pay for it

Thanks & Regards.

A. Srinivasan
Sr Executive Bio- medical engg.
No.3 Gogulan street,
Govarthanagiri,
Avadi,
Chennai -6000071

மணிவானதி சொன்னது…

மிக புதுமையான வலைப்பதிவு,
மூலிகைக்கு என்று நல்ல பலதகவல்கள்.
இதுபோன்ற மூலிகைத் தொடர்பான செய்திகள் வெளிவர வாழ்த்துக்கள்.
அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.

kuppusamy சொன்னது…

முனைவர் துரை.மணிகண்டன் அவர்களுக்கு மிக்க நன்றி. எனது மூலிகைவளம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

PARTHIBAN சொன்னது…

really very usefull informations abt in our real wealth.- with regards PARTHIBAN.