செவ்வாய், 26 ஜூலை, 2011

தான்றி.

  1. மூலிகையின் பெயர் :- தான்றி. 
  2. தாவரப்பெயர் :- TERMINALIA BELLIRICA.
  3. தாவரக்குடும்பம் :- COMBRETACEAE.
  4. வேறு பெயர்கள் :- அகசம், அக்கம், அக்கந்தம், அக்கந்தான், அம்பலத்தி, ஆராமம், அக்காத்தான், அமுதம், எரிகட்பலம், கந்தகிட்பலம், கந்துகன், கலித்துருமம், களத்தூன்றி, சதகம், தாபமாரி, தான்றிக்காய், வாத்தியம், வித்தியம், விபீதகம், திறிலிங்கம், மற்றும் பூதவாசகம்.
  5. பயன்தரும் பாகங்கள் :- இலை, கொழுந்து, பட்டை, காய், அதன் தோல், கெட்டியான கொட்டை. மூதலியன.
  6. வளரியல்பு :- தான்றி ஒரு பெரிய மரவகையைச் சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா. இது மலைகளிலும், மலை அடிவாரங்களிலும், சம வெளியிலும். காணப்படும். மேற்குத்தொடர்ச்சி மலையில் அதிகமாகத் தென்படும். இது மலைகளில் 1400 மீட்டர் கடல் மட்டம் வரை வளரக்கூடியது. இது 12 மீட்டர் முதல் 50 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இது இந்தியாவிலிருந்து அரேபியா, மலேசியா மற்றும் மற்ற நாடுகளுக்கும் பரவிற்று. இதன் இலைகள் 8 முதல் 20 செ.மீ. நீளம் உடையது. மாறு அடுக்கில் அமைந்திருக்கும். இந்த மரம் இரு வகைகள் உண்டு. காய்களில் மட்டும் வித்தியாசம் தெறியும். பூக்கள் சரமாகத் தொங்கும்  5 -15 செ.மீ. நீளம் இருக்கும். பச்சையாக இருந்து   மஞ்சள் நிறமாக மாறும். காய் பச்சையாக இருந்து முத்தும் போது பழுப்பு நிரமாக மாரும். அதன் தோல் துவர்ப்பாக இருக்கும் சதைப்பற்றுடன் இருக்கும். உள் உள்ள கொட்டை கெட்டியாக கல் போன்று இருக்கும். காயின் விட்டம் 1.5 லிருந்து 2.5 செ.மீ. வரை இருக்கும். ஆங்கிலத்தில் "BEDDA NUTS" என்பார்கள். சில வட இந்தியர்கள் இதன் நிழலில் உட்கார மாட்டார்கள் ஒரு வகை நம்பிக்கை. இதன் விதையிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள் அதில் 40 சதம் வரும். இதன் இலைகள் மாட்டுத் தீவனமாகப்பயன் படுத்துவார்கள். விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது. முழைப்புத் திறன் குறைவு.
  7. மருத்துவப் பயன்கள் :- சித்த மருத்துவத்தில் தான்றிக்காய் திரிபலா என்ற மருந்து செய்ய கடுக்காய், நெல்லிக்காயுடன் இதையும் செர்த்து பல நோய்களைக் குணப்படுத்துகிறார்கள். இதன் காய் தொலிலிருந்து தோல் பதனிட உபயோகப்படுத்துகிறார்கள். இதிலிருந்து இங்கு தயார் செய்கிறார்கள். துணீகளுக்கு வண்ணங்கள் தீட்டப் பயன் படுத்துகிறார்கள 
ஆணிப்பொன் மேனிக்கழகும் ஒளியுமிகும்
கோணிக் கொள்வாத பித்தக் கொள்கை போம்-தானிக்காய்
கொண்டவர்க்கு மேகமறும் கூற அன்ற்றணியும்
கண்டவர்க்கு வாதம் போம் காண்.’

இதனால் சிலந்தி நஞ்சு, ஆண் குறிப் புண், வெள்ளை, குருதி, யழல் நோய் நீங்கும். பல் வலி தீரும். தான்றிப் பொடியைத் தேனில் கலந்து கொடுக்க அம்மை நோய் நீங்கும். தான்றிக்காய் பொடியினால் கண் ஒளி பெருகும். புண் பட்ட இடத்தில் இதன் பருப்பை உரைத்துப் பூச புண்ணாறும்

இதன் கொட்டை நீக்கிக் கருகாமல் வறுத்துப் பொடித்து 1 கிராம் அளவு சர்கரை கலந்து காலை, மாலை கொடுக்க மலச்சிக்கல், குடல் பலமின்மை, காய்ச்சல், பித்தத் தலைவலி, இரத்தமூலம், சீத பேதி ஆகியவை தீரும்.

தான்றிப் பொடி 3 கிராமுடன் சமன் சர்கரை வெந்நீரில் கலந்து காலை, மாலை சாப்பிட பித்த நோய்கள், வாய் நீர் ஒழுகல் தீர்ந்து கண் பார்வை தெளிவுறும்.

இதன் காயை நீர் விட்டு இழைத்து புண்களில் பூச ஆறும். அக்கியில் பூச எரிச்சல் தணிந்து குணமாகும்.

தான்றிக் காய் தோலை வருத்துப் பொடித்து தேனுடனோ சர்கரையுடனோ காலை மற்றும் மாலை சாப்பிட இரத்த மூலம் நிற்கும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக் காய் இவைகளைப் பொடியாக்கி வெறும் வயிற்றில் குடித்து வர உடல் எடை குறையும்.

தான்றிக்காய் தோலை சேகரித்து சூரணம் செய்து கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டி அளவு தேனில் கலந்து தினசிரி சாப்பிட்டு வர அம்மை நோய்கள் தீரும்.

தான்றிக் காயைச் சுட்டு மேல் தோலை பொடித்து அதன் எடைக்குச் சம மாய் சர்கரை கலந்து தினம் காலையில் வெந்நீருடன் சாப்பிட்டு வர பல்வலி, ஈறு நோய்கள் போன்றவை குணமாகும்.

தான்றிக் காய் தோல், திப்பிலி, அதிமதுரம் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துத் தூள் செய்து கொள்ளவும். இதில் 10 கிராம் அளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து நான்கில் ஒரு பாகமாய் சுண்ட வைத்து கசாயத்தை வடிகட்டி காலை, மாலை இரு வேளையும் 100 மி.லி. அளவில் சாப்பிட்டு வர ஆஸ்துமா, மூக்கிறைப்பு, மூச்சுத்திணரல், படபடப்பு ஆகியவை எளிதில் குணமாகும்.


தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய், நாயுருவி இலை, துத்தி இலை, அம்மான் பச்சரிசி, பிரண்டை, பொடுதலை, அத்தி, ஆவரம்பூ ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து உலர்த்தி நன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் காலை மாலை இருவேளையும் உணவுக்குப்பின் ஒரு தேக்கரணடி (5 கிராம்) அளவு 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இதனால் உள்மூலம், வெளிமூலம், சீழ்மூலம், இரத்த மூலம், ஆசன அரிப்பு, கடுப்பு ஆசன வெடிப்பு, பௌத்திரக்கட்டி போன்ற மூலம் சார்ந்த அனைத்து நோய்களும் தீரும்.

தான்றிக்காய், நெல்லிக்காய் வகைக்கு 100 கிராம் கீழாநெல்லி, கரிசிலாங்கண்ணி, குப்பைமேனி வகைக்கு 50 கிராம் சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் வகைக்கு 25 கிராம் அன்னபேதி செந்தூரம் 10 கிராம்- இவை அனைத்தையும்  ஒன்றாய் கலந்து தூள் செய்து ஒரு தேக்கரண்டி பொடியை தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வர இரத்தம் பெருகும் ரத்த சோகை விலகும்.

தான்றிக்காய் தளிரை இடித்து சாறு பிழிந்து 20 மி.லி. அளவு 3 வேளை குடித்து வர தொண்டைக் கட்டு, கோழை கட்டல், மேல் மூச்சு வாங்கல் குணமாகும்.

திரிபலா பொடி இரவில் தண்ணீரில் காச்சி ஊரவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கித் தலையில் தேய்த்துக் குழித்து வர முடி உதிர்வது நிற்கும்.
-----------------------------------------------------------------(தொடரும்)2 கருத்துகள்:

Guru pala mathesu சொன்னது…

sir,please add follower widget on your wep

kalidoss a சொன்னது…

இந்த மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?