திங்கள், 31 ஜனவரி, 2011

ஆரை.1.       மூலிகையின் பெயர் :- ஆரை.

2.       தாவரப்பெயர் :- MARSILEA 
                      QUADRIFOLIA.

3.       தாவரக்குடும்பம் :- MARSILEAFEAE.

4.       பயன் தரும் பாகங்கள் :- இலைகள்.

5.       வேறு பெயர்கள் :- ஆராக்கீரை,  
         ஆலக்கீரை என்பன. ஆங்கிலத்தில் 
     பொதுவான பெயர் 
     European water clover என்று சொல்வர்.

6.      வளரியல்பு :- ஆரை ஒரு நீர்தாவரம். 
    இது 3000 ஆண்டுகளுக்கு முன்பே 
    உணவாகப் பயன் படுத்தியுள்ளார்கள். 
    மத்திய, தெற்கு ஐரோப்பாவில்  காணப்
    பட்டது. பின் ஆப்கானீஸ்தான் 
    இந்தியா, சைனாவுக்குப் பரவிற்று. நூறு 
    ஆண்டுகளுக்கு முன்பு வட அமரிக்காவில் 
    காணப்பட்டது. இது செங்குத்தாக வளர்ந்து 
    தண்டில் நான்கு கால் வட்ட இலைகளாக 
    கொண்ட மிகவும் சிறிய செடி. இது 
    ஆற்றங்கரை, குழம், ஏரிக்கரை களிலும், 
    மணல் பாங்கான ஈரமான இடங்களிலும் 
    நன்கு தானே வளர்கிறது.  இது தண்ணீரில் 
   மிதக்கும், தரையிலும் வளரும். இதற்கு 
   லேசான நிழல் தேவைப்படும். கரிமலவாயு 
   குறைந்து எடுத்துக்கொள்ளும். வளர்ச்சி 
   மெதுவாக இருக்கும். இதில் வேறு வகைகளும் 
   உண்டு. இதன் இலைகள் பச்சையாக இருக்கும். 
   இது தொடர்ச்சியாக வேர் விட்டுப் படர்ந்து 
   வளரும். இது சுமார் ஒரு அடி நீழும். 
   அதன் வேருடன் 2 அங்குலம் வெட்டி 
   இன விருத்தி செய்வார்கள்.

7.   மருத்துவப்பயன்கள் :- ஆரை வெப்பம் 
   நீக்கித் தாகம் தணிக்கும் செய்கையுடையது. 
   பாம்புக் கடியைக் குணமாக்கும்.

      கீரையைச் சமைத்துண்ண தாய்பால் சுரப்பை        
      நிறுத்தும்.

      கீரையைச் சமைத்துண்ண பகு மூத்திரம் 
      போகும்.

      இதன் இலையை நிழலில் உலர்த்திப் 
      பொடி செய்து 30 கிராம் தூளை அரை 
      லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி, 
      பாலும், பனங்கற்கண்டும் கலந்து காலை, மாலை 
      பருகி வரப் பகுமூத்திரம், அதிதாகம், 
      சிறுநீரில் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.


---------------------------------(தொடரும்)8 கருத்துகள்:

csmathi சொன்னது…

பயனுள்ள தகவல்கள்..தொடருங்கள்!

kuppusamy சொன்னது…

என் வலைப்பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி. மேலும் தொடருவேன்.

csmathi சொன்னது…

பயனுள்ள தகவல்கள்.

csrimas சொன்னது…

பயனுள்ள தகவல்கள்

பெயரில்லா சொன்னது…

அய்யா,

அப்பக்கோவை என்ற மூலிகை பற்றிக் கூற முடியுமா? அது பிரசவமான தாய்மார்கள் மாரினில் காயம் பட்டால் குணமாக்க உதவுமாமே?

kuppusamy சொன்னது…

வ்ணக்கம் மிக்க நன்றி. அப்பக்கோவை இன்னும் நன் பதிவு போடவில்லை. மருத்துவர் பன்னீர்செல்வம் அவர்களிடம் தொடர்பு கொள்ளவும். அவரது எண்- 9363000645.

C.BHUVANESVARAN சொன்னது…

அய்யா தங்கள் வலைப்பதிவை கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.தாங்கள் பதிந்துள்ள மூலிகை ஆரை என்பது நான்கு கால் வட்ட இலைகளாக கொண்டசெடி என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அது சதாரணமாக வயல்களில் வளரும் களைச் செடி,ஆனால் படத்தில் உள்ளது புளிஆரை என்று பெயர்.இதுவே சமைத்து உண்ணக்கூடியது.
சி.புவனேஸ்வரன்,
சி.முட்லூர்
சிதம்பரம் வட்டம்,
கடலூர் மாவட்டம்

kuppusamy சொன்னது…

மேலும் நல்ல தகவல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. நீங்கள் சொல்வது உண்மைதான.