சனி, 17 ஜூலை, 2010

சங்கிலை.

1. மூலிகையின் பெயர் :- சங்கிலை.

2. .தாவரப்பெயர் :- AZIMA TETRACANTHA.

3. தாவரக்குடும்பம் :- SALUADORACEAE.

4. பயன் தரும் பாகங்கள் :- இலை, வேர், பால், மற்றும் பழம் முதலியன.

5. வேறு பெயர்கள் :- முட்சங்கஞ்செடி, மற்றும் இசங்கு ஆங்கிலத்தில் "Needle bush."

6. வளரியல்பு :- சங்கிலை மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். தமிழகமெங்கும் புதர் காடுகளிலும், மலைகளிலும், ஆற்றங்கரை, கடற்கரைகளிலும் வளர்கிறது. இதன் பூர்வீகம் தென் ஆப்பிரிக்கா. பின் காங்கோ, சோமாலியாவில் பரவிற்று, பின் மடகாஸ்கர், இந்தியாவில் பரவிற்று. இது 8 மீட்டர் வரை வளர்ந்து படரக்கூடியது. இதன் இலைகள் பளபளப்பானவை. எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். கூரைமாயான நுனிகளையுடையது. இலைகோணங்களில் நீண்ட நான்கு முட்களையுடையது. முட்கள் 5 செ.மீ. நீளமுடையது. இதன் பழங்கள் மஞ்சளாக இருந்து பின் வெள்ளையாக மாரும். உண்ணக்கூடியது. செப்டம்பர் மார்ச்சு மாதங்களில் பூக்கும். விதையிலிருந்து எண்ணெய் எடுப்பர் அதற்கு 'Fatty acid' என்று ம். விதையில் 'Ricinoleic Acid 9.8 %' மற்றும் 'Cyclopropenooid fatty acid 9.6 %' உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

7. மருத்துவப்பயன்கள் :- சங்கிலை சிறுநீர்ப் பெருக்கியாகவும், இலை உடல் பலம் பெருக்கியாகவும், வேர் கோழையகற்றும், இருமல் தணிக்கும், ஆஸ்த்துமா, சர்கரை வியாதி போக்கும் மருந்தாகவும் செயற்படும்.

சங்கிலை, தூதுவேளை இரண்டும் ஒரு பிடி அரைத்து நெல்லிக்காயளவு பசும் பாலில் கொள்ள கபரோகம் தீரும்.

சங்கிலை, வேப்பிலை, சமன் அரைத்து நெல்லிக்காயளவு காய்ச்சி ஆரிய நீருடன் பிரசவ நாளிலிருந்து கொடுத்து வரக் கற்பாயச அழுக்குகள் வெளியேறிச் சன்னி, இழுப்பு வராமல் தடுக்கும்.

சங்கிலை, வேர்பட்டை சமனளவு அரைத்து சுண்டைக்காயளவு வெந்தீரில் காலை, மாலை கொள்ள 20 நாள்களில் ஆரம்பப் பாரிச வாதம் வாயு, குடைச்சல் பக்கவாதம் தீரும்.

சங்கிலை, வேம்பு, குப்பைமேனி, நொச்சி, நாயுருவி ஆகியவற்றில் வேது பிடிக்க வாத வீக்கம், வலி, நீர் ஏற்றம் கீல் வாயு தீரும்.

சங்கம் வேர்பட்டைச்சாறு 20 மி.லி. 100 மி.லி. வெள்ளாட்டுப் பாலில் குடித்து வர சிறு நீர்த்தடை தீங்கும்.

வர அரிசி மாவுடன் ஒரு கட்டு சங்கிலை, நீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி ஆரிய பின் ஒரு டம்ளர் காலை மாலை குடிக்க இருமல் குணமாகும்.


-------------------------------------(தொடரும்)


11 கருத்துகள்:

geethasmbsvm6 சொன்னது…

வணக்கம், சுண்டைக்காய்க்கு ஆங்கிலப் பெயர் அல்லது தாவரப் பெயர் என்னனு கொஞ்சம் சொல்ல முடியுமா?

geethasmbsvm6 சொன்னது…

to continue

kuppusamy சொன்னது…

வணக்கம் கீதாசாம்பசிவம் அவர்களே. சுண்டைக்காய்க்கு தாவரப்பெயர்-Solanum tarvum.ஆகும். தாவரக்குடும்பம்- Solanaceae.
காய் சற்றே கசப்புடையது. வற்றலாகக் கடைகளில் கிடைக்கும். கோழையகற்றியாகவும் வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் பயன்படும்.
வலைப்பூவைப்படித்தமைக்கு மிக்க நன்றி.

Sweatha Sanjana சொன்னது…

We are proud of inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

kuppusamy சொன்னது…

மிக்க நன்றி தங்கள் வருகைக்கு.

பெயரில்லா சொன்னது…

Hello Sir,
You Are Doing Weldone Job in Sidha . Keep up the Momentom , Your Notes are very Usefull.

All the Very Best.

Regards
K.Elayaraja

வெண் புரவி சொன்னது…

என் நண்பருக்கு ஐயம்பனா தேவைப்படுகிறது.
மூல வியாதியால் அவதிப்படுகிறார். அனுப்பி வைக்க இயலும?
என்னுடைய mail id: arun@nestfashions.com
இந்த முகவரிக்கு விபரங்களை அனுப்பி வைக்கவும்.
நன்றி.

kuppusamy சொன்னது…

ஐயம்பனா கோவையில் DCF வனத்துறை அலுவலகத்தில் விற்பனைக்கு உள்ளது. வந்து பெற்றுக் கொள்ளலாம். விலை ரூ.5-00 குள். நீங்கள் எந்த ஊர்? கோவை வருவீர்களா? நன்றி.

geethasmbsvm6 சொன்னது…

மூல வியாதி இருப்பவர்களுக்கான கை மருந்துகள்.

ஒரு ஸ்பூன் சர்க்கரையும், ஒரு ஸ்பூன் நெய்யும் எடுத்துக் குழைத்துக் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம்.

ஒரு பூவன்பழத்தை வேகவைத்து நெய், சர்க்கரையோடு சேர்த்து இரவில் படுக்கும்போது தினமும் சாப்பிட்டு வரலாம்.

பாகற்காய்க் கொடியின் இலைகளைப் பறித்துக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.

சாதம் வடிக்கும் கஞ்சியில் ஒரு சிட்டிகை உப்புப் போட்டுக் குடிக்கலாம்.

மணத்தக்காளிக் கீரையின் சாறை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

ஐயம்பனாவும் முயலுங்கள், இவையும் பயனளிப்பவையே.

kuppusamy சொன்னது…

கீதாசாம்பசிவம் அவர்களே உங்கள் வருகைக்கும் மிக்க நன்றி. மூல நோய் தகவல்கள் அளித்தமைக்கு என மனமார்ந்த நன்றிகள். மக்கள் பயன் அடையட்டும்.

kuppusamy சொன்னது…

தங்கள் வலைப்பதிவு மிகவும் நன்றாக உள்ளது.இனிய தமிழில் படங்களுடன் விவரித்துள்ள விதம் மிகவும் அழகு .பல மூலிகை களின் பெயர் மட்டுமே எங்களுக்கு தெரிகிறது ,ஆனால் அருகிலேயே இருந்தாலும் அது எப்படி இருக்கும் என்பது தெரியாமல் உள்ளது. அக்குறையை போக்கும் விதமாக தங்கள் வலைப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி . நல்வாழ்த்துக்கள் .
murugesh md
to kuppu6@gmail.com