வியாழன், 27 நவம்பர், 2008

சர்கரைத்துளசி.


சர்கரைத்துளசி.


1. மூலிகையின் பெயர் -: சர்கரைத்துளசி.

2. தாவரப்பெயர் -: STEVIA REBAUDIANA.

3 . தாவரக்குடும்பம் -: COMPOSITAE.


4. பயன்தரும் பாகங்கள் -: இலை மற்றும் தண்டு.

5. வேறு பெயர்கள் -: “HONEY-LEAF”, “SWEET LEAF”, “SWEET-HERB”. போன்றவை.

6. வளரியல்பு -: சர்கரைத்துளசியின் பிறப்பிடம் தென் அமரிக்கா. அங்கு இயற்கை விஞ்ஞானியான ANTONIO BERRONI என்பவர் 1887ல் இந்த சர்கரைத்துளசியைக் கண்டுபிடித்தார். பாராகுவே மற்றும் பிரேசில் அதிகமாக வளர்க்கப்பட்டது. பின் வட அமரிக்கா, தென் கலிப்போர்னியா மற்றும் மெக்சிகோவில் அதிகம் வளர்க்கப்பட்டது. பின் ஜப்பானில் கோடைகாலத்தில் 32F-35F சீதோஸ்ணத்தில் வளர்க்கப்பட்டது. பின் எல்லா நாட்டிற்கும் பறவிற்று. இதை விதை மூலமும் கட்டிங் மூலமும் இனப் பெருக்கம் செய்யப்பட்டது. முதிர்ந்த விதைகள் கருப்பாக மரக்கலரில் இருக்கும். இதன் முழைப்புத் திறன் மிகவும் குறைவு. சர்க்கரைத்தளசி 2 அடி முதல் 3 அடி உயரம் வரை வளரக்கூடியது. மண் பாதுகாப்பில் இதற்கு இயற்கை உரம், மக்கிய தொழு உரம் தான் இட வேண்டும் இது மணல் கலந்த களிமண்ணில் நன்கு வளரக்கூடியது. இராசாயன உரம் இடக்கூடாது. இதன் ஆணிவேர் நன்கு ஆளமாகச் செல்லும். இலைகள் அதிகறிக்க நட்ட 3-4 வாரங்கழித்து கொழுந்துகளைக் கிள்ளி விட்டால் பக்கக் கிழைகள் அதிகறித்து இலைகள் அதிகமாக விடும். பூக்களை வெள்ளை நிறத்தில் இருக்கும். தன் மகரந்தச் சேர்க்கையால் விதைகள் உண்டாகும். இலைகள் இனிப்பாக இருக்கும். கலோரி கிடையாது. உலர்ந்த இலைகளைப் பொடியாகச் செய்தால் இனிப்பு அதிகமாக இருக்கும். வியாபார நோக்குடன் பயிரிட நிலத்தை நன்கு உழுது தொழு உரம் இட்டு 3-4 அடி அகல மேட்டுப் பாத்திகள் அமைக்க வேண்டும். உயரம் 4 அங்குலம் முதல் 6 அங்குல உயர்த்த வேண்டும் பின் 10 அங்குலம் முதல் 12 அங்குலம் வரை இடைவெளி விட்டு நாற்றுக் களை நட வேண்டும், பின் தண்ணீர் விடவேண்டும். ஈரப்பதம் தொடர்ந்து இருக்க 3 அங்குலம் முதல் 6 அங்குல மூடாக்கு அமைக்க வேண்டும். பின் 2 வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். செடிகள் நன்கு வளர்ந்து பூக்கும் போது இலைகளைப் பறிப்பது சாலச் சிறந்தது. இலைகளை வெய்யிலில் 8 மணி நேரம் உலர வைத்து எடுத்துப் பதுகாக்க வேண்டும். முதிர்ந்த இலைகளைப் போடியாக அரைத்து எடுத்து கண்ணாடி குடுவைகளில் பாதுகாப்பார்கள்.

7. மருத்துவப் பயன்கள் -: சர்கரைத்துளசியின் இலைகள், தண்டுகள் சர்கரை போன்று இனிப்பாக இருக்கும். இதில் கலோரீஸ் எதுவும் கிடையாது. அதனால் இதை சர்கரை வியாதியைக் குணப்படுத்த இதை அதிகமாகப் பயன் படுத்திகிறார்கள். இதிலிருந்து மாத்திரைகள் செய்கிரார்கள், எண்ணெய் எடுக்கிறார்கள் பொடியாகவும், பச்சை இலையாகவும் மருத்துவத்தில் பயன் படுத்துகிராகள். இதன் பொடியை காபி, டீ மற்றும் சோடாக்களில் பயன் படுத்திகிறார்கள். இந்த இலை இனிப்பில் சர்கரையைவிட 30 மடங்கு அதிகம். இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் சிறு வியாதிகள் குணமடைகின்றன. இது ‘பிளட் சுகர்,’ இரத்த அழுத்தம் குறைவாக இருப்பது போன்ற வியாதிகளைக் குணப்படுத்தும். இதையையே ஜப்பானில் வயிற்று உப்பல், பல் வியாதிகளுக்குப் பயன் படுத்துகிறார்கள். இது ‘ஏண்டி பாக்டீரீயாவாகப்’ பயன் படுகிறது. இது சர்கரைக்கு மாற்றாக உள்ள ஒரு நல்ல மூலிகையாகும்.

----------------------------------(மூலிகை தொடரும்.)

7 கருத்துகள்:

thottarayaswamy சொன்னது…

vanakam sir,

neegal kovi pathivar kuttathil intha sehdiyal kodithirkal ippothu than valarthatu,sir tell me how to eat?
plz mail me!
by thottarayaswamy
web: thottarayaswamy.net
e-mail: thottarayaswamy@gmail.com

லதாவினீ சொன்னது…

ஐயாவுக்கு வணக்கம். உங்களின் மூலிகைவளம் வலைக்கு என் நன்றிகள். கேள்விப்படாத எத்தனையோ மூலிகைகளை தெரிந்து கொண்டேன். உங்களின் இந்த பணி தொடர வாழ்த்துக்கள்...

லதாவினீ சொன்னது…

ஐயா வணக்கம். தங்களின் மூலிகைவளம் பகுதியை தற்செயலாக பார்த்தேன். அற்புதமான படைப்பு. தெரியாத அரிய மூலிகைகளைப் பற்றி தெரியவைத்த உங்களின் பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.

kuppusamy சொன்னது…

மிக்க நன்றி லதாவினீ அவர்களே. பார்த்த மூலிகைகளை படம் எடுத்து அதைப் பற்றி மக்கள் அறிய எழுதிக்கொண்டுள்ளேன். எல்லோரும் பயன் அடையட்டும்.

இளங்குமரன் சொன்னது…

வணக்கம் ஐயா... நான் என்னுடைய எழுத்தேணி அறக்கட்டளைக்காக இதை வியாபார முறையில் பயிரிட நினைக்கின்றேன்... நாற்றுகள் எங்கே கிடைக்கும்... உங்கள் ஆலோசனை என்ன?
ssdavid63@yahoo.com

தினேஷ் சொன்னது…

ஐயாவுக்கு வணக்கம்,

நான் என்னுடைய சர்கரை வியாதியைக் குணப்படுத்த இந்த சர்கரைத்துளசி நாற்றுகளை தேடி வருகிறேன்.

சர்கரைத்துளசி நாற்றுகள் தமிழ் நாட்டிலே எங்கே கிடைக்கும்.

தயவுசெய்து எனக்கு உதவுங்களேன்.

இப்படிக்கு,
தினேஷ்.

kuppusamy சொன்னது…

இங்கு கோவையில் கிடைக்கிறது. வின்சண்ட் அவர்களைத் தொடர்பு கொள்ளவும். எண் 9498066303. நன்றி.