வியாழன், 25 செப்டம்பர், 2008

மருந்துக்கூர்க்கன்.


மருந்துக்கூர்க்கன்.


1) மூலிகையின் பெயர் -: மருந்துக்கூர்க்கன்.

2) தாவரப்பெயர் -: COLEUA FORSKOHLII

3) தாவரக்குடும்பம் -: LAMIACEAE.

4) வேறு பெயர்கள் -: கூர்க்கன் கிழங்கு, கோலியஸ்.

5) இரகங்கள் -: மங்கானிபெரு (மேமுல்), கார்மாய் மங்கானிபெரு.

7) பயன்தரும் பாகங்கள் -: வேர்கிழங்குகள் மட்டும்.

8) பயிரிடும் முறை -: மருந்துக்கூர்க்கன் ஒரு சிறு செடி வகையைச் சேர்ந்தது. இதை சம வெளிகள், மலைச்சரிவு, மற்றும் வறட்சியான பகுதிகளில் பயிரிடலாம். செம்மண், சாரை மண் ஏற்றது. களிமண் கூடாது. மண் கார அமில நிலை பி.எச்.6.0 -7.00 க்குள் இருக்க வேண்டும். மருந்துக்கூர்க்கன் ஓமவள்ளிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மூலிகைச்செடி நெருக்கமான கிளைகளில் தடினமான இலைகளிடன் சுமார் 2 அடி உயரம் வரை வளர்கிறது. இச்செடியானது நுனிக் கொழுந்தைக் கிள்ளி நட்டு வளர்க்கப்படுவதால் ஆணிவேர் உண்டாவதில்லை. அடிக்கணுவிலிருந்து பக்க வேர்களே உண்டாகின்றன. பழுப்பு நிற வேர்களிலிருந்து ஒல்லியான கேரட் வடிவத்தில் 1 அடி நீளம் வரை கிழங்குகள் உருவாகின்றன. ஒரு செடியிலிருந்து அரைக்கிலோ முதல் முக்கால் கிலோ வரை பச்சைக் கிழங்குகள் கிடைக்கின்றன. பொலபொலப்பான பூமியில் 1 கிலோவும் கிடைக்கின்றது.

நிலத்தைபுழுதிபட உழவு செய்யவும். நடவுக்கு ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே ஏக்கருக்கு 7 டன் தொழு எருவை சிதறி விட்டு உழவு செய்யவும். ஈரமான மண்ணில் நுண்ணுயிர்கள் எருவைச் ஞாப்பிட்டுப்பல்கிப் பெருகும். அந்நிலத்தில் பயிர் நட்டவுடன் துளிர்க்கும். துரிதமாய் வளரும்.

வளமான நிலங்களிக்குப் பார் 2 அடி - செடிக்குச் செடி 1.5 அடி=ஏக்கருக்கு 14500 கன்றுகள், வளம் குறைந்த நிலத்தில் பாருக்குப் பார் 2 செடிக்குச்செடி 1.25 = ஏக்கருக்கு 17,000 கன்றுகள், சரளைமண்ணுக்கு பாருக்குப்பார் 1.75 அடி – செடிக்குச்செடி1.25 அடி= ஏக்கரில் 20,000 கன்றுகள்.

மருந்துக்கூர்க்கனின் நுனித் தண்டுகளில் சுமார் 10 செ.மீ. நீளமும் 3-4கணுக்கள் இருக்க வேண்டும். நுனித் தண்டுகளை புது பிளேடால் வெட்டி சேகரிக்க வேண்டும். முற்றிய கொழுந்தை விட இழந்துளிர் சிறந்தது.முற்றிய செடி வேர் பிடித்து வளர்ந்து உருவத்துக்கு வர 40 நாட்கள் ஆகும். இளஞ்செடியோ 25 நாட்களிலேயே வந்து விடும். நடும் போதுஒரு தடவை பாசனமும் நட்ட 3 ம் நாள் உயிர் தண்ணீர் பாச்சவேண்டும். 40 நாட்கள் வரை வாரம் ஒரு தடவை பாசனம், பின் 10 நாட்களுக்கு ஒரு தடவையும், அறுவடைக்கு 10 நாட்கள் இருக்கும் போதே பாசனத்தை நிறுத்தவும். மொத்த நாட்கள் 180.

நடவு நட்ட 15 - 20 நாட்களுக்குள் முதல் களை சுரண்டி விட வேண்டும். இரண்டாம் களை கதிர் அரிவாள் கொண்டு தரைமட்டத்தில் அறுத்து எடுப்பதே சரியானது. இப்போதுதான் மண் அணைக்க வேண்டும். 50 நாடகள் ஆகிவிட்டால் மண் அணைக்க வேண்டாம். அரசாயன உரம், நுண்ணுயிர் உரங்களை 50 நாட்களுக்கு மேல் கொடுக்கலாம்.

பயிர்ப் பாதுகாப்பிற்கு நூற்புழுக்களின் தாக்குதலுக்குகார்போபூரான் தூவ வேண்டும். வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த 250 தொழு உரத்துடன் 5 கிலோ ட்ரைகோடெர்மாவிரிடீ உயிர் பூசானக்கொல்லி மருந்தினை செடிகளைஞச் சுற்றி ஊற்றிக் கட்டுப்படுத்தலாம். பாக்டீரியாவாடல் நோய் தென்பட்டால் சூடோமோனாஸ் புளோரஸன்ஸ் என்ற பாக்டீரியாவினை தொழு உரத்துடன் இடுவதால் யோயைக் கட்டுப்படுத்தலாம்.

மருந்துக்கூர்க்கனின் வளர்ச்சிப் பருவங்கள் – 1 - 20 நாட்கள் வேரில்லாத நுனிக் கொழுந்திலிருந்து வேர்கள் முளைத்து வெளிவருகின்றன. ஆரம்பக்கட்ட வேர்கள் உருவாகி செடியானது மண்ணில் நிலை நிறுத்தப்படுகிறது. 21 - 40 நாடகள் வேர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. செடிகளில் தழை வளர்ச்சி குறைவாகவே காணப்படும். 41 - 60 செடிகளில் தீவிர வளர்ச்சிப் பருவம் ஆரம்பிக்கிறது. கிளைகளும், துளிலர்களும் உருவாகி பயிரானது பந்து கட்ட ஆரம்பிக்கிறது. 61 - 90 தழை வளர்ச்சியும் தீவிரம், வேர் வளர்ச்சியும் தீவிரம். பயிர் நிலத்தை அடைத்துக் கொள்கிறது. 91 - 120 கிழங்குகள் உருவாகின்ற தருணம். இத்தோடு தழைவளர்ச்சி நின்று விடும். 121 - 150 கிழங்குகள் கேரட்டைப் போல் நீண்டு பருக்கின்றன. 151 - 180 நாட்கள் கிழங்குகளுக்குள் மாவு சத்தும், மருந்துச் சத்திம் சேமிக்கப்படும் தருணம். அதாவது கிழங்குகள் முற்றி எடை கூடும் காலம்.

இது இந்தியா, நேபாளம்,இலங்கை, ஆப்பரிக்கா, பர்மா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் வணிகரீதியாகப் பயிரிடப்படுகிறது. இதில் போர்ஸ்கோலின் ‘Forskoslin’ எனும் மூலப்பொருள் உள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு(சேலம்) குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பயிர் செய்யப்படுகிறது. பயிரிட ஏற்ற பருவம் ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள். வேர் கிழங்குகளை 180 நாட்கள் முடிந்தவுடன் சேதமின்றி எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி வெய்யிலில் சீராக 10 நாட்கள் உலர வைக்க வேண்டும். கிழங்கில் 8 சதம் ஈரப்பதம் இருக்கும் போது பக்குவமாக இருக்கும்.ஹெக்டருக்கு 15 - 20 டன் பச்சைக் கிழங்குகள் கிடைக்கும். அல்லது 2000-2200 கிலோ உலர்ந்த கிழங்குகள் கிடைக்கும்.ஹெக்டருக்கு 20,000 ரூபாய் செலவு செய்தால் ரூ.60,000 வரவு வர வாய்ப்புள்ளது. ஒப்பந்த சாகுபடி செய்ய விரும்புவோர் எம்.ஜி.பி.மார்கெட்டிங் சென்டர்ஸ் 469, மகாலட்சுமி காம்ளெக்ஸ், அண்ணாபுரம், ஐந்து ரோடு, சேலம்-4. தொலைபேசி - 0427-2447143, செல் - 98427 17201. அவர்களிடம் தொடர்பு கொண்டு பயன் பெறவும்.

8) மருத்துவப் பயன்கள் -: மருந்துக்கூர்க்கன் கிழங்கிலிருந்து எடுக்கப்படும் வேதியப் பொருளான போர்ஸ்கோலின் இரத்த அழுத்தத்தை சீர் செய்து இதயப் பழுவைக் குறைக்கிறது. இது ஆஸ்த்மா, புற்று நோய், கிளாக்கோமா கண் நோயைக் குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுகிறது.


-------------------------------------------(மூலிகை தொடரும்)

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

respected sir, this picture look like - coleus aromaticus Benth- omavalli.omavalli doest have heavy roots . pleace change the picture Coleus forskohlii is marunthu koorgan. pleace dont mind for this message . thankyou for your work sir. thenmozidas@gmail.com

kuppusamy சொன்னது…

அய்யா எனது வலைப்பதிவை பார்த்துப்படித்தமைக்கு மிக்க நன்றி. மருந்துக் கூர்க்கன் படம் நான் விவசாயக்கல்லூரியில் எடுத்த படம். அங்கு பெயர் பலகையும் வைத்துள்ளார்கள். அது மருந்துக்கூர்க்கன்தான். எனது தோட்டம் தர்ம்புரியில் உள்ளது அதில் ஒரு ஏக்கரில் சேலத்திலிருந்து கொழுந்து வாங்கிச் சென்று நட்டு பயிர் செய்தேன் ஆனால் அதிக மகசூல் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. படங்கள் முடிந்த அளவு நான் தான் நேரில் எடுக்கிறேன். அதில் மாற்றம் வர வாய்ப்பு இல்லை. தற்போது விவசாயக் கல்லூரி கோவையில் மாதிரி பயிர் போட்டுள்ளார்கள் அதன் படம் இடுத்துப் போடுகிறேன். நன்றி.

udaya kumar.G சொன்னது…

Dear sir,

We want to know about all the details about the herbal "licorice root".

please kindly send the details to my id for students research.

my email id ;
udayakumarpbn@gmail.com
mobile :9487544083

kuppusamy சொன்னது…

மிக்க நன்றி அய்யா, நீங்கள் எனது மூலிகைவளம் வலைப்பதிவில் மருந்துக்கூர்கன் லேபிளை கிளிக் செய்யவும். விபரம் கிடைக்கும்.