வெள்ளி, 30 மே, 2008

இன்சுலின் செடி.




இன்சுலின் செடி.

1) மூலிகையின் பெயர் -: இன்சுலின் செடி.

2) தாவரப்பெயர் -: காஸ்டஸ் பிக்டஸ்

3) PLANT FAMILY: Costaceae

4) BOTANICAL NAME: Costus இக்நேஉஸ்

5
) பயன் தரும் பாகம் -: இலை.

6) வளரியல்பு -: இந்தச் செடி வளமான ஈரப் பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம். இது பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரி யிலும் இந்த தாவரத்துக்கான நர்சரிகள் உள்ளன. நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப் பெருக்கம் செய்ய 3 கணுவுகளை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும். ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். இதை நான் வீட்டிலும், வரகம்பாடி தோட்டத்திலும் வளர்க்கிறேன். இதன் இலைகள் மா இலை போன்று இருக்கும். ஆனால் இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிது புளிப்பு கலந்திருக்கும். ஆரம்பத்தில் இதன் நாற்றை கேரளாவிலிருந்து திரு.வின்சென்ட் அவர்கள் ஒரு நாற்று ரூ.50-00 என்று வாங்கி வந்து நாற்றுக்கள் உற்பத்தி செய்கிறார். தற்போதும் அவரிடம் நாற்றுக்கள் உள்ளன. அவரது போன்- 9894066303 0422-2566303.



5) மருத்துவப் பயன்கள் -: சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள். இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study
தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது.ANTI_Diabetic herb.


பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள். பார்க்க
www.sidhaeureka.blogspot.com




-----------------------------(மூலிகை தொடரும்)

7 கருத்துகள்:

புருனோ Bruno சொன்னது…

//பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது.//

இந்த ஆராய்ச்சி (எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை ) குறித்து தகவல் அளிக்க முடியுமா

1. எங்கு
2. யாரால்
3. எப்பொழுது
4. பிணியாளர்கள் மட்டும் சோதிக்கப்பட்டார்களா அல்லது தன்னார்வலர்களும் சோதிக்கப்பட்டார்களா

--
அப்படி சோதனை எதுவும் செய்யப்படாத பட்சத்தில் பின்விளைவுகள் இல்லை என்று கூறுவதை தவிர்த்தல் நலம்
--

ஒரு மருந்து ஒரு நோய்க்கு தீர்வளிக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் சோதனை வேறு
(மருந்து வேலை செய்கிறதா)

அந்த மருந்து வேறு நோய்களை உண்டாக்காது என்பதை கண்டுபிடிக்கும் சோதனை வேறு (மருந்து பாதுகாப்பானதா)
--
இரண்டையும் குழப்ப வேண்டாமே
--

இரண்டாவது வகை சோதனைகள் செய்யப்படும் வரை ”எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை ” போன்ற பதங்களை தவிர்த்தல் நலம்

kuppusamy சொன்னது…

ஐயா, சித்த மருத்துவத் தடயங்கள் என்ற வலைப்பதிவைப் பார்க்கவும்.
www.sidhaeureka.blogspot.com
நன்றி.

kuppusamy சொன்னது…

Insulin plant (COSTUS IGNEUS (OR )COSTUS PICTUS) is a relatively new entrant to Kerala and India. The plant is a late entrant to Kerala Ayurvedic medicinal herb scene mostly from USA. Insulin plant has not got a Malayalam name yet, except the occasional use of insulin chedy or insulin chedi, where chedy means a plant. The catchphrase of this plant is a leaf a day keeps diabetes away
The plant is characterized by large fleshy looking leaves. It grows very quickly. Propagation is by stem cutting. It grows in slightly shady areas.
Diabetes patients are advised to chew down a leaf in the morning and one in the evening for a month. Allopathic doctors too recommend it and it is found to be effective in bringing blood sugar levels under completely under control. There is also dried and ground powder of the leaves now available in the market.
Costus ingneus belongs to the family zingiberaceae.
(Origin -Florida, USA)
A Magic Cure for Diabetes as never before with proven effects.
Santhimadom Agro Farm has secured these plants from the U.S.A and they are being multiplied using stem cuttings.
Dosage for diabetes patients
1. The patient has to take two leaves per day in the morning and evening and in the evenings for one week. The leaves must be chewed well before swallowing.
2. After one week the patient should take one leaf each in the morning and evening.
3. This dosage should be continued for 30 days.
This medicine is being increasingly prescribed by doctors. In 90 % of the cases diabetes has been found to be curable using this medicine. Just try it for yourself.

-------------------------------------------------------------

pl download from link; http://www.filefactory.com/file/a1beeef/n/insulin.rar

PHARMACOLOGICAL EVALUATION OF COSTUS PICTUS

cheena (சீனா) சொன்னது…

அன்பின் குப்புசாமி - அரிய தகவல்கள் - பயனுள்ள தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

kuppusamy சொன்னது…

மிக்க மகிழ்ச்சி சீனா அவர்களே. இவ்வளவு ஆண்டுகளுக்குப் பின்னும் பல இடர்பாடுகளுக்குப் பின்னும் படித்தமைக்கு மிக்க நன்றி.

Giridaran சொன்னது…

This herb uses as food, it's name in Sri Lanka is Thebu, we can by it in the vegetable market.

kannan சொன்னது…

intha insulin sedi engu kidaikkum