செவ்வாய், 17 ஜூன், 2008

சீமை அகத்தி


சீமை அகத்தி.
1) மூலிகையின் பெயர் -: சீமைஅகத்தி.
2) தாவரப்பெயர் -: CASSIA ALATA.
3) தாவரக்குடும்பம் -: FABACEAE,(CAESALPINACEAE)
4) வேறு பெயர்கள் -: மெழுகவத்திப் புதர்மெழுகுவத்திப் பூ, காட்டுச் சென்னா, GUAJAVA,கிருஸ்மஸ் மெழுகுவத்தி, ஏழு தங்க மெழுகுவத்தி.
5) பயன்தரும் பாகங்கள் -இலை,பட்டை, பூக்கள் மற்றும் விதை.
6) வளரியல்பு -இந்த சீமை அகத்தி தமிழ் நாட்டில் தென் மாவட்டத்தில் அதிகமாகஉள்ளது. மண் வளமும் ஈரப்பதமும் உள்ளஇடத்தில் நன்கு வளரும். இது ஆற்றுப்படுகைகளில் அதிக உயரமாக வளமுடன் வளரும்.இது ஆறு அடி முதல் 12 அடி வரை வளரக்கூடியது. இது ஒரு புதர் போன்ற சிறு மரம். வெட்ட வெட்டதழைத்து வளரும் இந்தத் தாவரம் பூர்வீகம் மெக்சிகோ நாடு. இதன் இலை எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலை 50 -80 செ.மீ. நீளம் உடையது.இது அமேசன் மழைக் காடுகளில் அதிகமாகக்காணப்படும் மேலும் பெரு, பிரேசில் , பிரன்சுகயானா, கயானா, வெனிசுலா, கொலம்பியா, ஆப்பிரிக்கா, ஆஸ்ட்ரேலியா,அமரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும். இது அழகுச் செடியாகவும்வளக்கப்படுகிறது. இதன் பூக்கள் மெழுகுவத்தி வைத்தால் போன்றுமஞ்சள் நிறமாக கொத்தாக அழகாக வளர்ந்திருக்கும். இதன் இலைகள் இரவில் மூடிக்கொள்ளும் வாகை இலைபோன்று. பூக்கள் உதுர்ந்து நீண்ட காய்கள் இருபக்கதுதிலும்அடுக்காகக் காய்க்கும்.இதன் விதைகள்நீள் சதுர வடிவில் அமைந்திருக்கும். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

7) மருத்துவப்பயன்கள்:சீமைஅகத்திச் செடியின் இலைகள் அதிகமாக மருத்துவத்திற்குப் பயன்படுகிறது.தோல் வியாதிகளைக் குணப்படுத்துகின்றது. வண்டுகடி, படர்தாமரை, சொறிசிறங்கு, கற்பப்பை கோளாறுகள் பாக்டீரிய்,பூஞ்சல்களைக் கொல்லவும், இரத்த அழுத்தம் குறைவதைக் குணப்படுத்தவும்,வயிற்றுவலி, காய்ச்சல், ஆஸ்த்துமா, அல்சர், பாம்புக்கடி, சிறுநீர் எழிதாகக்கழிய, நுரையீரல் நோய்கள், இரத்த சோகை, மாதவிடாய் சம்பந்தமான நோய்கள், மேலும் மேக நோயான சிபிலிஸ் போன்றவைகளையும் குணப்படுத்தும். இதன் இலையில் தடுப்பு சக்தி இருப்பதால் சோப்பு,ஷேம்பு,முகப்பூச்சாகவும் பிலிப்பெயின்சில் பயன்படுத்துகிறார்கள்.
வண்டு கடியைக் குணப்படுத்த குறிப்பிட்டஅளவு புதிதாகப் பச்சையாக உள்ள இலையைபறித்து எலுமச்சஞ்சாறுடன் சேர்த்து நன்குஅரைத்து வண்டு கடிமீது காலை, மாலைதடவினால் விரைவில் குணமடையும்.
இதன் மஞ்சள் பூக்களைப் பறித்து முறைப்படிகசாயம் வைத்துக் கொடுக்க சிறு நீர் கோளாறுகள் நீங்கி தடையின்றி வெளியேறும்.

சீமைஅகத்தி பட்டையை எடுத்து முறைப்படி ஊரவைத்து கசாயமாகக் காய்ச்சி வடிகட்டிதினம் காலை, மாலை இரண்டு வேளை உட்கொண்டால் மேக வியாதிகள் குணமடையும், வலியைப் போக்கும், மலக் கழிவு இலகுவாக வெளியேறும்.

படர் தாமரையைப் போக்க உடனேபறித்த சீமை அகத்தி இலைகள் அறைத்து அதற்கு சமனெடை தேங்காய்எண்ணெயில் சேர்த்துத் தினந்தோறும்இரண்டு தரம் அழுத்தித் தேய்க்க குணமடையும். .----------------------------(தொடரும்)

8 கருத்துகள்:

தமிழ்சினிமா சொன்னது…

வண்டு கடியைக் குணப்படுத்த குறிப்பிட்டஅளவு புதிதாகப் பச்சையாக உள்ள இலையைபறித்து எலுமச்சஞ்சாறுடன் சேர்த்து நன்குஅரைத்து வண்டு கடிமீது காலை, மாலைதடவினால் விரைவில் குணமடையும்.

வண்டுக்கடி மட்டும் தான் கேட்குமா... பூரான், தேள் கடிக்கு இந்த முறையில் மருத்துவம் பார்க்கலாமா..

kuppusamy சொன்னது…

இது வண்டுகடிக்கு மட்டுந்தான், பூரான்
தேள் கடிக்குஇது உதவாது. பார்வையிட்
டமைக்கு மிக்க நன்றி.
குப்புசாமி.

இராசேந்திரன் சொன்னது…

சீமைஅகத்தி இலையுடன் குளியல் மஞ்சள் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வர பெண்களின் முகம் மென்மையாகும், பொளிவடையும், முகத்தில் தோன்றும் தேவையற்ற முடி மெலிந்து உதிரும்.

kuppusamy சொன்னது…

மிக்க நன்றி. ராஜேந்திரன் அவர்களே. மேலும் தகவல் அளித்தமைக்கு.

Advocate P.R.Jayarajan சொன்னது…

நமது தமிழ் நாட்டில் கிடைக்கின்றதா ஐயா....?

kuppusamy சொன்னது…

ஆம். தென் மாவட்டங்களில் அதிகம் கிடைக்கும். எனது தோட்டத்தில் உள்ளது.

kumar சொன்னது…

எங்கள் பகுதியில் அதிகமாக கிடைக்கிறது ஆனால் இதன் மருத்துவகுணம் பற்றி இப்போது தான் தெளிவாய் அறிந்து கொண்டேன். நன்றி ஐயா

KASI YADAV சொன்னது…

இதன் படத்தை உதாரணமாக கண்பித்தல் நன்று.