வெள்ளி, 30 நவம்பர், 2012

நீரெட்டி முத்து.



நீரெட்டி முத்து மரம்.


நீரெட்டி முத்து.

மூலிகையின் பெயர் :– நீரெட்டி முத்து.

தாவரப்பெயர் :– HYDNOCARPOS PEN TANDRA.

தாவரக் குடும்பம் :- ACHARIACCEAE.

வேறுபெயர்கள் :– மரவட்டை, வட்டை, மற்றும் ஆங்கிலத்தில் MOROTHI TREE & CHAULMUGRA. என்று சொல்வர்.

பயனுள்ள பாகங்கள் :– விதை, வேர், மற்றும் இலை ஆகியன.

வளரியல்பு :– நீரெட்டி முத்து என்ற மரம் நடுத்தர வர்கத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் ஜப்பான் மற்றும் சீனா. இது 30 அடிமுதல்  75 அடிகள் உயரம் வரை வளரக்கூடியது. இது பசுமைக் காட்டில் வளரக்கூடியது. ஆற்றுப் படுகைகளில் அதிகம் காணப்படும். இதன் குடும்பத்தில் 40 வகை உண்டு. இது மலைப்பிரதேசங்களில் கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் முதல் 1700 மீட்டர் வரை வளரக்கூடியது. இதற்கு மிதமா சீதோசனம் தேவை. இலைகள் கரும்பச்சை நிரத்தில் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இதன் நீளம் .7 செ.மீ. முதல் 2.2 செ.மீ. வரை இருக்கும். இதன் பூக்கள் ஆண்பூக்கள் என்றும் பெண் பூக்கள் என்றும் இருக்கும். ஆண் பூக்கள் ஒன்று திரண்டும், பெண் பூ தனியாகவும் இருக்கும். பூக்கள் வெண்மையாக இருக்கும். பூவின் இதழ்கள் 3 – 6 மற்றும் 2 – 3 என்று காணப்படும். பூக்கள் வாசனையாக இருக்கும். இந்த மரங்கள் இந்தியாவில் மகாராஸ்ட்ரா, கோவா, கர்நாடகா, தமிழ் நாடு, கேரளா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய இடங்களில் காணப்படும். இதன் காய் பிஞ்சாக இருக்கும் பொழுது கருப்பாகத் தென்படும். பின் முற்றும் போது மரக்கலராக மாரும். அதன் விட்டம் சுமார் 6 செ.மீட்டராக இருக்கும். இந்த மரம் ஏப்ரல் மாதத்தில் பூக்க ஆரம்பித்து அக்டோபர் மாதத்தில் காயுடன் இருக்கும். பழங்கள் முற்றிய பின் மரக்கலராக இருக்கும். ஒரு காயில் சுமார் 15 முதல் 20 வரை கொட்டைகள் இருக்கும். விதைகளை ஒரு ஆண்டு சேமித்து வைக்கலாம். ஆனால் ஒரு மாதத்தில் பாத்தியில் ஊன்றி விட வேண்டும். முழைப்புத் திரன் குறைவாகத்தான் இருக்கும். விதைகளிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள். அந்த எண்ணெயில் ‘SHAVLMOOGRA’ என்ற வேதியப் பொருள் உள்ளது. இது முக்கியமான மருத்துவ குணம் உடையது. கட்டிங் முறையிலும் இன விருத்தி செய்யப்படும்.

மருத்துவப் பயன்கள் :– நீரெட்டி முத்து மரம் வீடுகட்ட கட்டுமானப்பொருட்களாகவும், மரப்பெட்டிகள் செய்யவும். விரகு எரிபொருளாகவும் பயன் படுத்துப் படுகிறது. இந்த மரத்தின் கொட்டையிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள். அந்த எண்ணெய் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அந்த எண்ணெயை ஆரம்ப தோழு நோய் உள்ளவர்கள் இதை மேல் பூச்சாகப் பூசினால் நோய் குணமடைவதைக் காணலாம். இந்த எண்ணெய் தோல் சம்பந்தமான எல்லா நோய்களையும் குணமாக்க வல்லது.
‘லீகோடர்மா’ என்ற நோயைக் குணப்படுத்தும். இது மன அழுத்தத்தைக் குறைக்கும். உடலில் ஏற்படும் புடைத்த கட்டிகளை குணப்படுத்தும். ஆராத குடல் புண்களை குணப்படுத்த வல்லது. வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். நாட்பட்ட புண்கள் குணமடையும். வாதம், சுழுக்கு, நெஞ்சுவலி, கண்நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும் டானிக்காகப் பயன் படுத்தப் படுகிறது. இந்த மரத்தின் வேர் மற்றும் காய்ந்த இலைகளையும் சேர்த்து ஊரவைத்து கசாயமாக்கி உட்கொள்ளும் போது மலேரியா நோய் குணமாகும். சுண்ட வைத்து அடிச் சாற்றைத் தலைக்கு இட்டால் முடி உதிர்வதைத் தடுக்கும். இதன் பூவிலிருந்து நறுமணத்தைப் பிரித்தெடுத்து வாசனைப் பொருட்கள் தயார் செய்கிறார்கள். இதன் இலையை நன்கு ஊரவைத்து பதப்படுத்தி போதை உண்டாகும் ஒரு குடிபானத்தைத் தயாரிக்கிறார்கள். இதன் எண்ணையில் உள்ள பலவகை வேதியல் பொருட்களுடன் வேற்று மரங்களில் எடுக்கப்பட்ட நுண்நுயிர்களுடன் முறைப்படி கலந்து தாவரங்களுக்கு உபயோகமான பூச்சிக் கொல்லி மருந்தாகவும், ஊட்டச்சத்து மிகுந்த ஊக்கியாகவும்  மரப்பெருக்கு மைய (IFGTB) விஞ்ஞானிகள் தமது ஆராய்ச்சி மூலம் நிரூபித்து அறிமுகப்படுத்தியுள்ளனர். 

நீரெட்டி முத்து காய்.
நீரெட்டி முத்து விதை
               
-------------------

திங்கள், 29 அக்டோபர், 2012

முள்ளுசீதா


முள்ளுசீதா மரம்.


முள்ளுசீதா.

மூலிகையின் பெயர் :– முள்ளுசீதா.

தாவரப்பெயர் :– ANNONA MURICATA.

தாவரக்குடும்பம் :- ANNONACEAE.

வேறு பெயர்கள் :– GRAVIOLA, SOURSOP, BRAZILIAN-PAW-PAW, GUNABANA. ஆகியன.

பயனுள்ள பாகங்கள் :– இலை, பூ, பழம், பட்டை, வேர் மற்றும் விதை முதலியன.

வளரியல்பு :– முள்ளுசீதா எல்லாவகை மண்ணிலும் வளரக்கூடியது. இது ஒரு சிறிய பழம் தரும் மரம். இது சீதா வகையைச் சேர்ந்தது. முள்ளுசீதா சுமார் 20 – 30 அடி உயரம் வளரக்கூடியது. இது அதிகமான  கிழைகளைக் கொண்டது. இதன் தாயகம் ‘CARIBBEAN’ மற்றும் மத்திய அமரிக்கா. இதன் வெப்ப தட்ப நாடுகளில் உலகம் முழுதும் பரவலாயிற்று. தமிழகமெங்கும் தோட்டங்களிலும் வேலிகளிலும் ஆற்றுப்படுகைகளிலும் காணப்படும். இதன் இலைகள் கிழைகளில் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும்.  நீள வாக்கில் கொய்யா இலை போன்று ஓவல் வடிவத்தில் காணப்படும். இலைகள் 8 – 16 செண்டி மீட்டர் நீளம் இருக்கும். அகலம் 3 -7 செண்டி மீட்டர் இருக்கும். இது கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இதன் பூக்கள் இலைக்கு எதிர் பக்கத்தில் காம்புப்பகுதியில் பூக்கும்.  ஒன்று அல்லது இரு பூக்கள் பூக்கும். பூ இதழ்கள் கெட்டியாக இருக்கும். சிறு முடி இருக்கும் (15 எம்.எம்.) மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதழ்கள் இதய வடிவில் இருக்கும். இதன் சூழ் முடிகளால் சிகப்பாக சூழ்ந்திருக்கும். இதன் காய்கள் பச்சையாக சிறு சிறு முள் நுனிகளுடன் ஓவல் போன்று பெரிதாக இருக்கும்- சுமார் 30 செண்டிமீட்டர் அளவு இருக்கும். உள் பாகத்தில் விதைகளுடன் வெண்மையான சுவை, மணம் உள்ள சதைப்பற்றுடன் இருக்கும். விதைகள் சுமார் 470 கிராம் எடை இருக்கும்.  மூன்று நாட்கள் காய வைத்தால் 322 கிராம் எடையாகக்குறையும். இதன் பழம் உண்ணக்கூடியது. சிறிது இனிப்பும், துவர்ப்பும் கலந்து அன்னாச்சிப்பழம் போன்று இதன் சதைப்பகுதிகள் சுவை இருக்கும். இந்தப் பழத்தில் ஒரு அமிலத்தன்மை ஏற்படும் அதனால் இதை ‘SOURSOP’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். முள்ளுசீதாப் பழங்கள் தற்போது ஊட்டி செல்லும் வழியில் பரலியாற்றிலும், கொடைக்கானலிலும் கிடைக்கிறது. கிராமங்களில் இதை இராம் சீத்தா என்று அழைக்கிறார்கள். ஆய்வுக்குறியது. காய்ந்த பதப்படுத்திய விதையிலிருந்து விதைத்து நாற்றுக்கள் உற்பத்தி செய்து இன விருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் :– முள்ளுசீதா மரம் அமேசான் காடுகளில் வளர்ந்த போது இதன் பட்டை, இலை, பழம், வேர் எல்லாவற்றையும் அங்குள்ள பழங்குடி மக்கள் நோய் தீர்க்கும் மருந்துகளாகப் பயன் படுத்தி குணம் கண்டனர்.  முக்கியமாக இதன் இலை, பழம் இவைகளை பக்குவப்படுத்தி உணவாக அருந்தும் வகையில் தயார் செய்து புற்று நோயைக் குணப்படுத்தப் பயன் படுத்தினார்கள். அமரிக்காவில் இதை ஆய்வு செய்து புதிய செல்களை உற்பத்தி செய்து கெட்ட நோய் செல்களை அழித்து நல்ல பலன் கிட்டுவதைக் கண்டு பிடித்தார்கள். மேலும் அதில் பக்க விழைவுகள் இல்லையென்பதையும் கண்டறிந்தார்கள். ‘கிமோதெரப்பி’ என்னும் சிகிச்சையில் முடி கொட்டி விடுகிறது மற்றும் உடல் மெலிந்து எடை குறைந்து விடுகிறது. ஆனால் இயற்கையான முள்சீதாவில் அதைவிட புற்று நோய் செல்களைக் கொல்வதில்10,000 மடங்கு சக்தி வாய்ந்தது. அதனால் முடி உதிர்வதில்லை, எடையும் குறைவதில்லை.

இதன் இலைகள் மருத்துவ குணம் இருப்பதால் காயவைத்துப் பதப்படுத்தி ‘டீ’ போன்ற பானமாக மேல் நாட்டில் அருந்துகிறார்கள். இதை வியாபார நோக்குடன் சில கம்பனிகள் செய்து வருகின்றன.


முள்ளுசீதா 12 வகையான புற்று நோய்களைக் குணப்படுத்த வல்லது என்று கண்டு பிடித்தார்கள். மேலை நாடுகளில் பல நாடுகள் இதன் மருத்துவ குணம் நன்கு அறிந்து பலவிதமான நோய்களைக் குணப்படுத்தினர். அவை புற்று நோய் கட்டிகள், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் கற்பப்பையில் புற்றுநோய்கள் மார்பகப்புற்று நோய் அகியவற்றைக் குணப்படுத்தினர். இரத்த அழுத்தம், குறைவு, அதிகரிப்பு இவைகளையும் குணப்படுத்தினர். மேலும் ஆஸ்த்துமா, வயிற்றுப்போக்கு, காச்சல், புண், குடல் புண், புளுகாச்சல், ஈரல் பாதிப்பு, தோல் வியாதிகள், நரம்பு தளர்ச்சி, நடுக்கம், டென்சன், இருதயக்கோளாறு, கிட்னி பாதிப்பு, இருமல், வயிற்றுவலி போன்ற நோய்களையும் இதன் மூலம் குணப்படுத்தினர்.  மருந்து உண்ணும் அளவு மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டும். அதுவும் 30 நாட்களுக்கு மேல் மிகாமல்.. அதிகமாக உட்கொண்டால் வாந்தியை உண்டு பண்ணி பக்க விளைவுகள் ஏற்படலாம். கற்பிணிப் பெண்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.

முள்ளுசீதா காய்.

----------------------------------------------------------------(தொடரும்)

வியாழன், 27 செப்டம்பர், 2012

பவளமல்லி மரம்.

பவளமல்லி மரம்.



பவளமல்லி மரம்.

மூலிகையின் பெயர் :- பவளமல்லி மரம்.

தாவரப்பெயர் -: NYCTANTRES ARBORTRISTIS.

தாவரக் குடும்பம் :- OCEACEAE..

வேறுபெயர்கள் -: பாரிஜாதம், பவழமல்லி முதலியன.

பயன்தரும் பாகங்கள் -: இலை, மலர்கள், பட்டை முதலியன.

வளரியல்பு :– பவளமல்லி மரம் சிறு மரவகையைச் சேர்ந்தது. இதன் பூர்வீகம் தென் கீழ் ஆசிய நாடு. தாய்லந்து நாட்டில் காஞ்சனபுரி மாநிலத்திலும் காணப்பட்டது. இது இந்தியா முழுதும் வளரக்கூடியது.வீட்டுத் தோட்டங்களிலும் நந்த வனங்களிலும் வளர்க்கப்படுகிறது. இந்த மரம் வழமான மண்ணில் நன்கு வளரும்..இதற்கு சிறிது வெய்யிலும் நிழலும் தேவைப்படும். 10 முதல் 25 அடி உயரம் வரை வளரக்கூடியது. நீர் தேங்காத இடத்தில் நன்கு வளரும். இதன் இலைகள் நீள் வட்ட வடிவில் கூரான முனைகளையுடையது. எதிர் அடுக்கில் அமைந்தருக்கும். இலைகள் சொரசொரப்பாக இருக்கும் .இலைகள் தளவாடங்கள் மெருகேற்றப் பயன்படும். பூக்கள் பவழ நிறம் பட்டு வகைத் துணிகளுக்கு சாயம் ஏற்றப் பயன்படும். கிளை நுனையில் பூக்கும். பூக்கள் பவழக் காம்பும், வெண்நிறமும் மல்லிகைப்பூப் போல்  அமைந்திருக்கும், நறுமணம் உடையது. பூக்கள் 5 – 7 இதழ்களையுடையது. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பூக்கும். இந்தப் பூக்கள் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிர்ந்து விடும். இந்த மரம் பற்றியும் பூக்கள் பற்றியும் புராணங்களில் இரண்டு கதைகள் சொல்வார்கள். இதன் காய்கள் தட்டையாக வட்ட வடிவில் காணப்படும். இரண்டு விதைகள் இருக்கும்.இந்த மரம் ஆண் மரம் தான். தன்மகரந்தச் சேர்க்கையால் காய்கள் விடும். இந்த மரம் தலவிருட்சமாகக் கருதப் படும். சிவத்தலங்களில் காணலாம். கட்டிங்மூலம் தான் இன விருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் :– ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் இலைகள், பூக்கள், விதைகள், வயிற்றுத் தொந்தரவு, மூட்டு வலி, காச்சல், தலைவலி போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலை வியர்வை, சிறுநீர், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கி மலமிளக்கும். வேர் பட்டை கோழையகற்றும், பித்தத்தை சமப்படுத்தும்.

இதன் இலைக் கொழுந்தை இஞ்சிச் சாற்றில் கலந்து முறைக் காச்சலுக்கு தினம் இரு வேளை கொடுத்தால் குணம் காணலாம்.

இம்மர இலையைச் சுடுநீரில் போட்டு நன்றாய் ஊரவைத்து நாள் ஒன்றுக்கு இரு வேளை அருந்து வர, முதுகுவலி, காச்சல் போகும்.

வயிற்றில் புழுக்கள் வெளியேற இவ்விலைச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அத்தோடு தேன் கலந்து அருந்தினால் போதும், நல்ல பலன் கிடைக்கும்.

மேலும், இதன் இலைகளை 200 கிராம் எடுத்து வந்து மண்சட்டியில் போட்டு பதமான அனலிலிட்டு வறுத்து, ஒரு லிட்டர் நீர் விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காச்சி, இருதய வலுவற்ற குழந்தைகளுக்கும், இரத்தம் அதிகம் இல்லாதவர்களுக்கும் அரை அவுன்ஸ் முதல் இரண்டு அவுன்ஸ் வரை நாளைக்கு இரு வேளை கொடுக்கு, குணம் பெறலாம்.

நன்றி டாக்டர் க.திருத்தணிகாசலம்.
பவளமல்லி பூக்கள்
பவளமல்லி இலைகள்.


---------------------------------------------------