வியாழன், 27 செப்டம்பர், 2012

பவளமல்லி மரம்.

பவளமல்லி மரம்.பவளமல்லி மரம்.

மூலிகையின் பெயர் :- பவளமல்லி மரம்.

தாவரப்பெயர் -: NYCTANTRES ARBORTRISTIS.

தாவரக் குடும்பம் :- OCEACEAE..

வேறுபெயர்கள் -: பாரிஜாதம், பவழமல்லி முதலியன.

பயன்தரும் பாகங்கள் -: இலை, மலர்கள், பட்டை முதலியன.

வளரியல்பு :– பவளமல்லி மரம் சிறு மரவகையைச் சேர்ந்தது. இதன் பூர்வீகம் தென் கீழ் ஆசிய நாடு. தாய்லந்து நாட்டில் காஞ்சனபுரி மாநிலத்திலும் காணப்பட்டது. இது இந்தியா முழுதும் வளரக்கூடியது.வீட்டுத் தோட்டங்களிலும் நந்த வனங்களிலும் வளர்க்கப்படுகிறது. இந்த மரம் வழமான மண்ணில் நன்கு வளரும்..இதற்கு சிறிது வெய்யிலும் நிழலும் தேவைப்படும். 10 முதல் 25 அடி உயரம் வரை வளரக்கூடியது. நீர் தேங்காத இடத்தில் நன்கு வளரும். இதன் இலைகள் நீள் வட்ட வடிவில் கூரான முனைகளையுடையது. எதிர் அடுக்கில் அமைந்தருக்கும். இலைகள் சொரசொரப்பாக இருக்கும் .இலைகள் தளவாடங்கள் மெருகேற்றப் பயன்படும். பூக்கள் பவழ நிறம் பட்டு வகைத் துணிகளுக்கு சாயம் ஏற்றப் பயன்படும். கிளை நுனையில் பூக்கும். பூக்கள் பவழக் காம்பும், வெண்நிறமும் மல்லிகைப்பூப் போல்  அமைந்திருக்கும், நறுமணம் உடையது. பூக்கள் 5 – 7 இதழ்களையுடையது. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பூக்கும். இந்தப் பூக்கள் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிர்ந்து விடும். இந்த மரம் பற்றியும் பூக்கள் பற்றியும் புராணங்களில் இரண்டு கதைகள் சொல்வார்கள். இதன் காய்கள் தட்டையாக வட்ட வடிவில் காணப்படும். இரண்டு விதைகள் இருக்கும்.இந்த மரம் ஆண் மரம் தான். தன்மகரந்தச் சேர்க்கையால் காய்கள் விடும். இந்த மரம் தலவிருட்சமாகக் கருதப் படும். சிவத்தலங்களில் காணலாம். கட்டிங்மூலம் தான் இன விருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் :– ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் இலைகள், பூக்கள், விதைகள், வயிற்றுத் தொந்தரவு, மூட்டு வலி, காச்சல், தலைவலி போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலை வியர்வை, சிறுநீர், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கி மலமிளக்கும். வேர் பட்டை கோழையகற்றும், பித்தத்தை சமப்படுத்தும்.

இதன் இலைக் கொழுந்தை இஞ்சிச் சாற்றில் கலந்து முறைக் காச்சலுக்கு தினம் இரு வேளை கொடுத்தால் குணம் காணலாம்.

இம்மர இலையைச் சுடுநீரில் போட்டு நன்றாய் ஊரவைத்து நாள் ஒன்றுக்கு இரு வேளை அருந்து வர, முதுகுவலி, காச்சல் போகும்.

வயிற்றில் புழுக்கள் வெளியேற இவ்விலைச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அத்தோடு தேன் கலந்து அருந்தினால் போதும், நல்ல பலன் கிடைக்கும்.

மேலும், இதன் இலைகளை 200 கிராம் எடுத்து வந்து மண்சட்டியில் போட்டு பதமான அனலிலிட்டு வறுத்து, ஒரு லிட்டர் நீர் விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காச்சி, இருதய வலுவற்ற குழந்தைகளுக்கும், இரத்தம் அதிகம் இல்லாதவர்களுக்கும் அரை அவுன்ஸ் முதல் இரண்டு அவுன்ஸ் வரை நாளைக்கு இரு வேளை கொடுக்கு, குணம் பெறலாம்.

நன்றி டாக்டர் க.திருத்தணிகாசலம்.
பவளமல்லி பூக்கள்
பவளமல்லி இலைகள்.


---------------------------------------------------

 

13 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விளக்கங்களுடன் பயனுள்ள பகிர்வு...

மிக்க நன்றி ஐயா...

kuppusamy சொன்னது…

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

பெயரில்லா சொன்னது…

Oh my goodness! Amazing article dude! Thank you so much, However I am having troubles with
your RSS. I don't understand why I can't join it. Is there anybody else having identical RSS problems?
Anyone who knows the answer will you kindly respond? Thanks!

!
Also visit my web blog : weight loss reviews

sse சொன்னது…

nandri

sse சொன்னது…

good

அரைகுறை ஞானி சொன்னது…

ungalai pondrorai vaazltha vayathillai..vanangugiren..nandri.

kuppusamy சொன்னது…

மிக்க நன்றி. அருகே உள்ள மூலிகையின் உபயோகங்கள் எல்லோரும் தெறிந்து கொள்ளட்டும்.

அரைகுறை ஞானி சொன்னது…

naan inimel mudintha varaiyil mooligaigalin chedi,kodi,marangalin peyargalai yavathu therinthu kolla muyarchipen..periya idam vaangi ella chedi,marangalail ondravathu valarka vendum enbathum en aasaigalil ondru..ungalai pondror en pondror ku valigaatiya ulirkal..neer pallandu vaazla iraivani vendi kolkiren.

kuppusamy சொன்னது…

அய்யா மிக்க நன்றி. எனது வலைப்பதிவை தொடர்ந்து படித்து வாருங்கள். சந்தேகம் வந்தால் நேரில் தொடர்பு கொள்ளங்கள். எண்-9487283644.

அரையாய் நிறை சொன்னது…

mikka nandri ayya.kurithu vaithu konden.ungal anupuvangalai ellam eluthi vara kettu kolkiren.kandipaga matravarkaluku payanullathaga irukum.nandri ayya.

kuppusamy சொன்னது…

மேலும் தொடர வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.

பெயரில்லா சொன்னது…

Hello there! I could have sworn I've been to this website before but after going through many of the posts I realized it's new to me.
Regardless, I'm definitely delighted I found it and I'll be book-marking it and checking back frequently!
My blog post - www.supercapsiplex.co.uk

kuppusamy சொன்னது…

எனது வலைப்பதிவை பார்த்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள். வாழ்த்துக்கள். உங்கள் வலைப்பதிவைப் பாரொத்தேன். நன்றி.