செவ்வாய், 30 டிசம்பர், 2014

துவரை.


துவரை
துவரை.

மூலிகையன் பெயர் –: துவரை.

 தாவரவியல் பெயர் –; CAJANUS INDICUS.
தாவரக்குடும்பம். –; FABACEAE.
பயன் தரும் பாகங்கள் –; இலை, காய், துவரம்பருப்பு, பொட்டு, வேர் இழம் தழிர் மற்றும் அதன் தடிபாகம் முதலியன.
வகைகள் –: வம்பன்-2 மற்றும் வம்பன்-3 என்பன.

வளரியல்பு –; துவரை ஒரு மீட்டர் முதல் 4 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய சிறு மரம் மற்றும் பெரிய செடி. இது 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதன் தாயகம் வட ஆசியா. இதை உணவு தானியமாகப் பயிரிட்டனர். ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லேட்டின் அமரிக்கா போன்ற நாடுகளில். துவரைக்கு ஆங்கிலத்ததில் PIGEON PEA, KARDIS, GANDULEBEAN, TROPICAL GREEN PEA, KADIOS, CONGO PEA, GUNGO PEA, TOOR DAL, ARHAR DAL, RED GRAM, YELLOW HAHL. என்று அழைப்பார்கள். இதற்கு வருட மழையளவு 650 எம்.எம். வரை தேவைப் படும். இது 3 ஆண்டுப் பயிராகவும், ஒரு வருடப் பயிராகவும் இருக்கும். இதற்கு பி.எச்- 5 முதல் 7 வரை மண் வளம் இருக்க வேண்டும். 5 க்குக் குறைவாக இருந்தால் வளராது.இதற்கு சீதோஸ்ண நிலை 18 – 30 டிகிரி சிலிசியஸ் இருக்க வேண்டும். விதைத்த 180 முதல் 250 நாட்களில் பலன் தரக்கூடியது. இதை உழுந்து, வேர்கடலை, பருத்தி, பச்சைப் பயிர் போன்ற பயிர்களில் ஊடு பயிராக சால் விட்டுப் பயிரிடுவார்கள்.  ஒரு ஏக்கருக்கு 500 கிலோவரை பலன் கொடுக்கக்கூடியது. ஒரு கிலோவில் 16000 – 18000 விதைகள் இருக்கும். இதன் கிளைகள் அதிகமாக வரும். பூ மஞ்சள் நிறத்தில் மற்றும் ஊதா, சிவப்பு இதழ்கள் இருக்கும். காய்கள் கொத்தாக விடும்.

வம்பன் 2180 ஆடிப் பட்டத்திலும், வம்பன் 2110 வகை ஆடி, புரட்டாசி மற்றும் மாசிப் பட்டத்திற்கு ஏற்றது. ஒரு ஏக்கருக்கு 2,5 கிலோ விதை தேவைப் படும். இதைத் தண்ணீர் விட்டுப் பயிர் செய்வதானால் நாற்று விட்டு ஒரு மாதம் கழித்து எடுத்து நட வேண்டும்..ஆறு மாதத்தில் பூக்க ஆரம்பிக்கும். அப்பொழுது நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  காய்கள் முற்றிய பின் ஒரு அடி விட்டு வெட்டி அவைகளை வெய்யிலில் காயவைத்து நன்றாகக் காய்ந்த பின் அடித்து துவரையைத் தனியாக எடுக்க வேண்டும். மேலும் அதை இருப்பு வைக்கும் முன்பு பூச்சிகள் வராமல் இருக்க மருந்து தெளிக்க வேண்டும். துவரை காய்ந்த பின் உடைத்ததெடுத்தால் துவரும் பருப்பாகும். இதில் அதிக புரத சத்துள்ளது. இது உணவில் அதிகம் பயன் படுத்துப் படுகிறது. துவரை விளையும் நாடுகள் ஆசியாவில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், பூட்டான், இந்தியா மற்றும் இலங்கை. ஆப்பிரிக்காவில் எத்தோப்பியா, கென்யா, மாளவி, டான்ஜானியா மற்றும் உகாண்டா போன்றவை. உலக உற்பத்தியில் 82 விழுக்காடு இந்தியாவில் விளைவிக்கப் படுகிறது. மேற்கு ஆப்பிருக்காவில் துவரைச் செடியின் இலைகளை கால்நடை தீவனமாகப் பயன்படுத்துகிறார்கள். இத்தோப்பிய்யாவில் இதன் தளிர் கொழுந்தை சமைத்து உணவாகச் சாப்பிடுகிறார்கள். துவரையை காப்பபி மற்றும் மஞ்சள் போன்ற வற்றிக்கு நிழலாகவும் வளர்க்கிறார்கள். துவரை விதை மூலம் இன விருத்தி செய்யப் படுகிறது.


துவரையின் மருத்துவப் பயன்கள் –: துவரைப் பருப்பில் அதிக சத்துக்கள் இருப்பதால் பண்டைகாலந்தொட்டு இதன் பருப்பை சமைத்துக்கடைந்து அதனுடன் மாட்டு நெய் சேர்த்துக் குழந்தைகளுக்கும் மெலிந்தவர்களுக்கும் கொடுப்பது

பழக்கமாகக் கொண்டுள்ளனர். துவரையை அடித்துப் பிரிக்கும் போது அதன் பொட்டுகளை ஆட்டுத் தீவனமாகவும், மாடுகளுக்குப் பால் கொடுப்பதை அதிகரிக்கவும் இதைக் கொடுப்பார்கள்.


பஞ்சமுட்டிக் காகுமரும் பத்தியவீ யஞ்சனமாம்

விச்சுரஞ் சந்நிகட்கு மெத்த நன்றாம் பஞ்சின்

விழுத்துவரை யாது மெலிந்தாரைத் தேற்றுங்

கொழுத்துவரை யாயினீகொள்.”


குணம் –: துவரம் பருப்பை வெண்ணெயிலிட்டுச் சமைத்து போசன முதலில் பசுவின் நெய்யுடன் அன்னத்திற் கலந்துண்ணப் பிடிக்கும் பிடி சதை வளரும். இரைப்பைக்கும் உடலிற்கும் பலத்தைக் கொடுக்கும்.


பத்தியப் பதார்த்தங்களில் சிறந்த உணவாக இதைக் கருதலாம். சக்தியில்லாமல் மிக மெலிந்தவர்களுக்கு இது பயன் படும்.


துவரை இலைகள் மிளகோடு சேர்த்துப் பல்லீறுகளைச் சுத்தப் படுத்துவும், பல் வலிக்கும் பயன் படும்.


இவ்விலைகளை அரைத்து முலைக்குப் பூச பால் சுரப்பது நிற்கும்.  

சாம்பசிவம் அகராதி.


முத்துக்குமார் அம்பாசமுத்திரம்- மிக்க நன்றி.

மூலத்தை ஓட ஓட விரட்டும் துவரை..!

மூலத்தை துரத்தும் துவரை வேர் நாம் உண்ணும் உணவு உணவுப்பாதையில் சீரணிக்கப்பட்டு திடக்கழிவாக மலவாசலில் வெளியேறாவிட்டால் பல உபாதைகள் தோன்ற ஆரம்பித்துவிடும் . இதற்காக மிகவும் பிரயத்தனம் செய்து மலம் கழிக்க முயற்சிக்கும்போது மலவாயிலில் வலி மற்றும் புண்கள் தோன்றலாம். இதே நிலை நீடிக்கும்பொழுது மலப்பாதையில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு மலம் கழிக்க சிரமம் உண்டாவதுடன் ஆசனவாயின் வெளிப்புறம் அல்லது உட்புறத்தில் சிறுசிறு கட்டிகளோ அல்லது வீக்கமோ தோன்றி மூலநோயாக மாறிவிடுகிறது.

குறைந்தளவே தண்ணீர் அருந்துபவர்கள், அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள், நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்கள், வாயுவை பெருக்கக்கூடிய பதார்த்தங்களை அதிகம் உட்கொள்பவர்கள், கடுமையான மலச்சிக்கல் உள்ளவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் மூலநோய்க்கு ஆட்படுகிறார்கள். பரம்பரையாகவும் மூலநோய் ஏற்படுகிறது. இவர்களுக்கு ஆசனவாய் பகுதியில் கிருமிகள் தங்கி வளருவதால் ஆசனவாயில் அரிப்பு உண்டாகி, சில நேரங்களில் மூலம் முற்றிப்போய் ரத்தமும், சீழும் மலத்துடன் கலந்து வெளியேற ஆரம்பிக்கிறது. பலருக்கு இதன் ஆரம்ப அறிகுறி தெரியாமல், நோய் அதிகரித்த பின்பே பலவித உபாதைகள் தோன்றுகின்றன. மூலநோய் உள்ளவர்கள் வாயுவை பெருக்கக்கூடிய கிழங்கு வகைகள், பயறு வகைகள், கொழுப்பு சத்துள்ள உணவுகள், அசைவம், காரம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பதுடன், நீண்ட நேரம் அமர்ந்திருப்பதையும், அதிக எடை தூக்குவதையும், வாகன பிரயாணம் செய்வதையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

எளிதில் செரிக்கக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள், பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். சாதாரண மூலம்தானே என்று அலட்சியம் காட்டினால் அது பவுத்திரமாகவும், ஆசனவாய் அடித்தள்ளலாகவும் மாறிவிடுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் துவரையின் வேரில் ஏராளமான மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன. கஜானஸ் கஜன் என்ற தாவரவியல் பெயர் கொண்ட பேபேசியே குடும்பத்தைச் சார்ந்த துவரைப் பயிர்கள் உணவுப்பயிராக சாகுபடி செய்யப்படுகின்றன. சாணபுஷ்பிகம் என்ற சமஸ்கிருத பெயர் கொண்ட துவரையின் வேரில் பெனில் அலனின், ஐசோபுளோவின், ஐசோபுளோவோன், ஸ்டீரால், ஆன்த்ரோகுயினோன், டிரைடெர்பினாய்டு மற்றும் கஜானால் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன. இவை மெல்லிய சதைப்பகுதிகளில் ஏற்படும் வீக்கம், கொப்பளம், கட்டி போன்றவற்றை கரைத்து அங்கு தேங்கிய ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன.

துவரை வேரை நிழலில் உலர்த்தி முடிந்தளவு பட்டையை உரித்து, நன்கு பொடித்து, சலித்து 1 முதல் 2 கிராம் அளவு தினமும் இரண்டு வேளை தேன் அல்லது வெண்ணெயுடன் கலந்து சாப்பிட, ஆசனவாய் பகுதியில் தோன்றிய வீக்கம் மற்றும் சதை வளர்ச்சி நீங்கும். துவரம் பருப்பிலும் இந்த வேதிச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அன்றாட உணவில் நன்கு வேகவைத்து உட்கொண்டு வந்தால் மலவாய் பகுதியில் தோன்றிய வீக்கம் நீங்கும்..
-தொடரும்.
.துவரை செடியுடன் காய்ந்தது
Add caption

வெள்ளி, 28 நவம்பர், 2014

மணத்தக்காளி.



மணத்தக்காளி

மூலிகையின் பெயர் –: மணத்தக்காளி.

தாவரவியல் பெயர் –: SOLANUM NIGRUM

தாவரவியல் குடும்பம் –: SOLANACEAE.

வேறு பெயர்கள் –: மணித்தக்காளி, மிளகுத்தக்காளி, உலகமாதா, சிறுன்குன்னி போன்றவை.

பயன்படும் உறுப்பு –: இலை, வேர், காய் மற்றும் பழம்.

வளரியல்பு –: மணத்தக்காளி செடி வகையைச் சேர்த்தது. இது சுமார் 40 செ.மீ. உயரம் வரை வளரும். அதே அளவு பரவலாக அடர்த்தியாகப் படரும். சற்று மணற்பாங்கான நிலம், குப்பை, எரு கலந்த மண், குளிர்ச்சியான பகுதிகளில் தான் இது செழித்து வளரும். இதன் இலைக் காம்பிலிருந்து சிறு நரம்பு வளர்ந்து அதில் கொத்துக் கொத்தாக மொக்கு விட்டு மலர்ந்து காய்க்கும். இதன் பூ கத்திரிப் பூவைப் போல நான்கு இதழ்களுடன் கூடியதாக மிகச்சிறிய அளவில் வெண்ணிறமாக இருக்கும். நடுவில் சிறிய மகரந்தத் தண்டு இருக்கும். இதன் காய் மிளகு அளவில் மிளகுக்காய் போலவே இருக்கும். இக்காய்கள் காய்த்துக் கருநிறமாகப் பழுக்கும். இந்தப் பழம் இனிப்பாக ருசியாக இருக்கும். இதனுள் கத்திரி விதை போல மிகச்சிறிய விதைகளிருக்கும். இதை ஒரு சிலர் விரும்பிச் சாப்பிடுவார்கள்.  இது விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் APPLE OF SODOM, BLACK NIGHTSHADE, POISON BERRY  etc.,

மணத்தக்காளியின் மருத்துவப் பயன்கள் –: மணத்தக்காளி வியர்வையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது.

மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வர உட்சூடு, வாய்புண், முதலியவை நீங்கும். சிறுநீரை வெளியேற்றும். தேகம் குளிர்ச்சியாகும். உடல் வசீகரம் ஏற்படும்.
மணத்தக்காளி இலையை வதக்கி வலியுடன் கூடிய விரை வீக்கத்திற்கு இளஞ்சூட்டுடன் வைத்துக் கட்டி வர நன்மை பயக்கும்.

மணத்தக்காளிக்கீரையை தினந்தோறும் பருப்புடன் கலந்து சமைத்து உண்டு வரலாம். மலக்கட்டை நீக்கும். நெஞ்சில் கட்டியுள்ள கோழையை அகற்றி வாத ரோகங்களை நீக்கும்.

மணத்தக்காளி வற்றலுக்கு சுவையின்மையை நீக்கி பசியைத் தூண்டும் குணம் உண்டு. மணத்தக்காளிக் காய்களைப் பறித்து சுத்தம் செய்து, மோருடன் சிறிது உப்பு சேர்த்து வெயிலில் நன்கு உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்வதே மணத்தக்காளி வற்றல். இதனை எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து சோற்றுடன் கலந்து சிறிது நெய் சேர்த்து உண்டு வந்தால் மலர்ச்சிக்கல், வயிற்றில் கிருமியினால் உண்டாகும் தொந்தரவுகள் விடுபடும். ஆஸ்த்துமா, நீரிழிவு, காசம் முதலிய நோய் உடையவர்கள், மெலிந்த உடலினை உடையவர்கள் அனைவருக்கும் இது சிறந்தது.

நீர்க்கோவை, நீர்ச்சுருக்கு முதலியவற்ற்றிற்கு இதன் வற்றலை 135 கிராம் எடுத்து 700 மி.லி. வெந்நீரில் ஊறவைத்து ஒரு மணி நேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் அதனை இறுத்து 35 மி.லி. அருந்தி வருவது நல்லது.
மணத்தக்காளி இலையிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் இருமல், இரைப்பு முதலிய நோய்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில்  பயன் படுத்தலாம். மணத்தக்காளி இலையைக் கீரை போல் கடைந்து உண்டு வர, அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து உண்டு வந்தால் நோய்கள் நீங்கி உடல் வன்மை பெறும்.

மணத்தக்காளியிலையைக் கொண்டு வந்து ஆய்ந்து, கீரை உள்ள அளவில் பாதியளவு பச்சைப் பருப்பு என்ற பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு வைத்து அல்லது கடைந்து பகல் சாதத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலத்தில் இரத்தம் வருவது நின்றுவிடும்.

மணத்தக்காளிக் கீரையுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு, வெகவைத்து  தண்ணீரை இறுத்துக் குடித்து விட வேண்டும். பிறகு கீரையை உப்பு சேர்த்துத் தாளித்து பகல் உணவுடன் சேர்த்து ஐந்து நாட்கள் சாப்பிட வயிற்றுப் புண் ஆறிவுடும்.

மணத்தக்காளியிலைச்சாறு, வல்லாரை இலைச்சாறு, தேன் மூன்றிலும் ஒரு தேக்கரண்டி எடுத்து தினசரி காலை, பகல் மாலையாக மூன்று வேளையும் காமாலை நோய் தீரும் வரை கொடுக்க வேண்டும்.

மணத்தக்காளி-காய் மற்றும் பழம்.
 

ஆயுர்வேதம் ஜூன் 2012 ல் பதிவானவை – நன்றி.

வாய்ப்புண்ணா? மணத்தக்காளி கீரையை வாயில் போட்டு மென்று துப்புங்கள் எனும் பாட்டி வைத்தியம் இன்றும் பலன் தரும். மணத்தக்காளியில் இலைகள் மட்டுமல்ல, இதன் காய்களும் பலன் தருபவை. மணத்தக்காளி ஒரு மீட்டர் உயரம் வளரும் செடி. இலைகள் பச்சை நிறமாகவும், பூக்கள் வெள்ளை நிறமாகவும் இருக்கும். காய்கள் முதலில் பச்சை நிறமாகவும், பின்பு சிவப்பாகி கருமையாகும். காய்கள் கருமிளகு போல் இருப்பதால் இது மிளகு தக்காளி என்றும் அழைக்கப்படும். 

தாவிரவியல் விவரங்கள்

 தாவிரவியல் பெயர் - Solanum Nigram
 குடும்பம் - - Solanaceae
 ஆங்கிலம் - Black Night Shade,  சமஸ்கிருதம் - காஹமாச்சி   உபயோகப்படும் பாகங்கள் - சமூலம்

கீரையின் பொதுத் தன்மைகள்

உடல் தேற்றி, சிறுநீர் பெருக்கி, வியர்வைப் பெருக்கி, கோழை அகற்றி.

மருத்துவப் பயன்கள்

வாய்ப்புண், வயிற்றுப்புண்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது மணத்தக்காளிக்கீரை. கையளவு கீரையை எடுத்து வாயில் போட்டு மெல்ல வாய்ப்புண்கள், நாக்குப் புண்கள் ஆறும். உடலுறுப்புகளில் வேறெங்கும் புண் இருந்தால் அவையும் குணமாகும்.

வெறும் கீரையை உண்டாலே வாய்ப்புண்கள் ஆறும். சிறிது மஞ்சள் பொடியை சேர்த்து கீரையை வேக வைத்து உண்டால் புண்கள் சீக்கிரம் ஆறும். குடல் புண்களையும், மணத்தக்காளி ஆற்றும். வாய்ப்புண், நாக்குப்புண், வாய்வேக்காடு, குடல் புண் போன்றவற்றுக்கு மணத்தக்காளிகீரை கண்கண்ட மருந்தாகும். வாய் வெந்திருக்கும் போது மணத்தக்காளி + சிறிது சீரகம் + ஒரு மிளகாய் வற்றல் சேர்த்து, எண்ணெய்யில் வதக்கி, தண்ணீர் சேர்த்து வேக வைத்து, பிறகு அதில் தேங்காய்ப்பால் சேர்த்து வேக வைத்து உண்டால் வாய்ப்புண் உடனே குணமாகும்.

காய், கீரை இரண்டையும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் காங்கை (சூடு) தணியும். உடல் குளிர்ச்சியடையும்.

ஒரு கைப்பிடி அளவு கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து கஷாயமாக செய்து குடித்து வர சிறுநீர் நன்கு பிரியும். நீர்க்கடுப்பு, எரிச்சல் குணமாகும்.

இலைச்சாற்றை வெளிப்புண்கள் மேல் தடவினாலும் ஆறிவிடும்.
இலைச்சாற்றை சருமம், தேமல், சொறி சிரங்கு இருக்கும் இடத்தில் தடவினால் அவை மறையும். 

மணத்தக்காளி இலைச்சாற்றுடன் பால் சேர்த்து குடித்து வர, காமாலை குணமாகும்.

உடல் இளைத்திருப்பவர்கள் மணத்தக்காளி சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட உடல் பருக்கும்.

வாத நோய்கள் குணமாக, மணத்தக்காளி கீரையை உப்பு போட்டு சமைத்து சாப்பிட வேண்டும். கப நோய்களுக்கும் நல்ல மருந்தாகும். கப நோய்கள் தீர, ஒரு கைப்பிடி மணத்தக்காளிக்கீரையை எடுத்து 10 மிளகு, 3 திப்பிலி, 4 சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து விழுதாக அரைத்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் தணியும்.
மணத்தக்காளிக்கீரை மலச்சிக்கலை போக்கும்.

உடல் எடை குறைய, மணத்தக்காளி கீரையை 100 கிராம் எடுத்து கொதிக்கும் நீரில் 5 (அ) 10 நிமிடம் போட்டு எடுத்து 2 வெங்காயம் (அரிந்தது) + பாதி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கஷாயம் தயாரிக்கவும். இதை காலை உணவுக்கு பின் சாப்பிட்டால் அதிஸ்தூலம் (அதிக உடல் பருமன்) குறையும்.

மணத்தக்காளிப்பழம் கர்ப்பிணிகளுக்கு நல்லது. கருவை வலிமையாக்கும்.

மணத்தக்காளி செடியை இலை, காய், பழம் இவற்றுடன் சேர்த்து இடித்து பிழிந்தெடுத்த சாறு கல்லீரல் வீக்கம், கணைய வீக்கம் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாகும்

ஆயுர்வேதம் ஜூன் 2012
---------------------------------------------------(தொடரும்)

புதன், 29 அக்டோபர், 2014

நரிமிரட்டி.




 
நரிமிரட்டி இலை, பூ.
நரிமிரட்டி.

மூலிகையின் பெயfர் –: நரிமிரட்டி.

தாவரவியல் பெயர் –: CROTALARIA VERRUCOSA.

தாவரவியல் குடும்பம் –: PAPILIONACEAE, FABACEAE.

பயன்தரும் பாகங்கள் –: முழுதாவரம்.

வேறு பெயர்கள் -: கிலுகிலுப்பை, நரிவிரட்டி, சோணபுஷ்பி மற்றும் சங்குநிதி.

வளரியல்பு –: நரிமிரட்டி காடு மலைகள்ளில் தானே வளரக்கூடியது. மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். இது 50 செ.மீ. முதல் 100 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் முக்கோண வடிவத்தில் சுமார் 5 செ.மீ. முதல் 15 செ.மீ. வரை நீளம் இருக்கும் இதன் காம்பு 2 – 4 எம்.எம். நீளமிருக்கும். பூக்கள் நவம்பர் மாத த்தில் பூக்கும். நுனியில் சுமார் 10 பூக்கள் வரை பூக்கும். இதன் நீளம் 9 எம்.எம். இருக்கும். இதழ் 1.5 செ.மீ.. இருக்கும். பூ ஊதா நிறமும் வெள்ளையும் கலந்திருக்கும். கருநீல வரிகள் இருக்கும். காய் 5 – 10 எம்.எம். நீளத்தில் இருக்கும். காயினுள் 28 முதல் 32 விதைகள் இருக்கும். அவை முற்றிக் காய்ந்தால் உள்ளிருக்கும் விதைகள் காற்றில் ஆடும் போது ஒரு வித சத்தத்தை உண்டாக்கும் வெப்ப சீதோஸ்ணமான இடம் இதற்கு ஏற்றது. இது ஒரு வராடாந்திர புதர் செடி, இதை வேலிக்காகவும் அழகுக்காகவும் வளர்ப்பார்கள். இதன் விதையிலிருந்து எண்ணெய் எடுத்து வியாபார நோக்கில் விற்பார்கள். இந்த நரிமிரட்டிக்கு ஆங்கிலத்தில்  BLUE RATTLESNAKE, RATTLEPOD, BLUEFLOWER என்ற பெயர்களும் உண்டு.இந்தபுதர்செடி பங்களாதேஸ்,  சீனா, கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மாயின்மர், நேபால், பிலிப்பைன், இலங்கை, தாய்லந்து, வியட்னாம், ஆஸ்திரேலியா மற்றும் அமரிக்காவில் அதிகமாகக் காணப்படும். நரிமிரட்டி விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

நரிமிரட்டியின் மருத்துவப் பயன்கள் –: இதன் செய்கைகள் கசப்பு, துவர்ப்புச் சுவைகள், வாந்தியாகச் செய்தல், இது அஜீரணம், கபம், காய்ச்சல், தொண்டைநோய், இதய நோய், பித்தம், பென்னி பாதம் செயல் உடையது.  இதன் இலையிலிருந்து டீ பானம் தயாரித்துக் குடித்தால் தலைவலி, குளிர் காய்ச்சல், தோல் வியாதிகள், வயிற்றுவலி, சொறி சிறங்கு, ஆகியவை குணமாகும், கிட்னி, லிவர், காமாலை,  நோய்கள் குணமாகும். மேலும் பாம்புக்கடி, குடல்புண், மூத்திரக் கோளாறு, குடல் புழு, வயிற்றுப் போக்கும் குணமாகும். இது கால்நடைகளுக்கு ஏற்படும் பலவிதமான நோய்களை பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்த வல்லது.. இதைப் பற்றி போகர் எழுதியதை கீழே காணலாம்.
Author: தோழி / Labels: போகர், வசியங்கள்
சமீப நாட்களில் வன விலங்குகள், மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் வந்து விடுவதாகவும், அதனால் மக்களுக்கு துயர் உண்டாவதாகவும் பல செய்திகளை பத்திரிக்கைகளீல் பார்க்க முடிகிறது. நாம் அவற்றின் வாழ்விடங்களான வனப் பகுதிகளை ஆக்கிரமித்து குடியேறியதுதான் இத்தகைய நிலைக்கு காரணம்.

முற்காலத்திலும் கூட மனிதன் தன் தேவைகளுக்காக அடர் வனங்களின் ஊடே வாழ்ந்திருந்தனர். ஆனால் அவர்கள் மிருகங்களோடு இணக்கமாயிருக்கும் உத்திகளை கைக் கொண்டிருந்தனர். இத்தகைய உத்திகளை நம் முன்னோர்கள் மிருக வசியம் என்றழைத்தனர். இன்றும் கூட மலைவாழ் மக்கள் இத்தகைய சில உத்திகளை தமது அன்றாட பழக்கத்தில் வைத்திருக்கின்றனர்.

மனித நடமாட்டமில்லாத மலைகளிலும், காடுகளிலும் உறைந்திருந்த நம் சித்தர் பெருமக்களும் இத்தகைய பல மிருக வசியங்களை அருளியிருக்கின்றனர். அவற்றில் சில வசிய முறைகளை இங்கே பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று போகர் அருளிய மிருக வசியம் ஒன்றினை பார்ப்போம். இந்த தகவல்போகர் 7000” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
                                                                                 
தானென்ற மூலிநரி விரட்டிக்கப்பா
தப்பாமா லாதித்த வாரந்தன்னில்
வண்மையுடன் ஓம்சடா சடாவென்று
ஆனென்ற வாயிரத்தெட் டுருசெபித்து
வவ்வேரை மறுவாரம் பிடுங்கிக்கொள்ளே
குறியான வேரையுநீ பிடுங்கிக்கொண்டு
நள்ளுவாய் நிழலுலர்த்திக் கொண்டு
நலமான செப்புகுளிசத்திலடைத்துக்கொள்ளே
அணிவாய் முன்னுருவே தியானஞ்செய்து
ஆச்சரிய மந்திரத்தான் மிருகஞ்சேராது.
நரிவிரட்டி என்றொரு மூலிகை உண்டு. இதற்குநரிமிரட்டி”, “கிலுகிலுப்பை”, “பேய்மிரட்டிஎன வேறு பெயர்களும் உண்டு. இந்த மூலிகையை தேடி கண்டு பிடித்து, ஒரு ஞாயிற்றுக் கிழமை நாளில் அந்த செடியின் முன்னர் அமர்ந்து  "ஓம் சடா சடா" என்ற மந்திரத்தினை 1008 தடவைகள் செபித்துவிடவேண்டுமாம். பின்னர் அடுத்த ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடியினை பறித்து அதன் வேரை பிடுங்கி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டுமாம்.

செம்பினால் ஆன தாயத்து ஒன்றினை செய்து, அதில் காயவைத்த நரிமிரட்டி வேரினை அடைத்து, "ஓம் சடா சடா" என்ற மந்திரத்தினை முன்னூறு தடவைகள் செபித்துக் பின்னர் அணிந்து கொள்ள வேண்டுமாம். இவ்வாறு அணிந்தவரை மிருகங்கள் நெருங்காது என்கிறார் போகர்

ஆச்சர்யமான தகவல் தானே!
நன்றி சித்தர்கள் இராச்சியம் தளம்..

------------------------------------------------------------------(தொடரும்)