கோதுமைப்புல் |
கோதுமைப்புல்
மூலிகையின் பெயர்
–: கோதுமைப்புல்.
தாவரப்பெயர் –:
TRTICUM AESTIVUM.
தாவரக் குடும்பம்
-: POACEAE.
பயன் தரும் பாகம்
–: புல் மட்டும்.
வளரியல்பு –: கோதுமை
எல்லா வளமான இடங்களிலும் வளரக்கூடியது. இந்தியாவில் வட நாட்டில் அதிகமாக விளைகிறது.
கோதுமையின் தாயகம் மேற்கு ஆசியா. பின் வட ஆப்பிரிக்கா,
ஐரோப்பா, மற்றும் கிழக்கு ஆசியாவுக்குப் பரவிற்று. வட அமரிக்கா 1890 ல் கோதுமை வியாபரத்தில் முதன்மை
பெற்றது. இது வருடாந்திரப்பயிர். இதன் புல் மருத்துவத்திற்கு மிகவும் அதிகம் பயன்படுகிறது.
கோதுமை ரோட்டி செய்யவும் உணவுப் பொருளாகவும் பயன் படுகிறது. கோதுமைப் புல் வீடுகளிலும்
வளர்க்கலாம். புல் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும், பச்சையாக இருக்கும். பல வகை வைட்டமின்களைக்
கொண்டுள்ளது. கோதுமை விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.
கோதுமைப்புல்லின்
மருத்துவப் பயன்கள் –: கோதுமைப்புல்லின் சாற்றைக் குடிப்பதால் அது இரத்தத்தை சுத்தம்
செய்கிறது. ஈரலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்குகிறது. பெருங்குடலில் உள்ள (colon) என்ற
பாகத்தைச் சுத்தம் செய்ய உதவுகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது. மலச்சிக்கலைப்
போக்குகிறது. முகப்பரு, உடலில் உள்ள வடுக்களைப் போக்க உதவுகிறது. சாற்றைக் கொப்பளித்தால்
தொண்டை கரகரப்பு நீங்கும், தொண்டைப் புண்ணும் குணமாகும். பல் எகிரில் ஏற்படும் வீக்கம்
சீள் பிடித்தலைக் குணப்படுத்தும். புற்று நோய் புதிய செல்கள் உண்டாவதை அழித்துக் குணப்படுத்தும்.
தோல் வியாதிகளைக் குணப்படுத்தும். முக்கியமாக வெண்புள்ளி தேமலைப் போக்க வல்லது.
50 கிராம் கோதுமைப்
புல்லை எடுத்துக் கழுவி நன்கு அரைத்து 150 மில்லி நீர் கலந்து வடிகட்டியபின் அதில்
தேன் கலந்து சாற்றைக் குடிக்கலாம். தயார் செய்தவுடன் குடித்து விட வேண்டும். இதனால்
புற்று நோயை எதிர்க்கும் சக்தி இதற்கு உண்டு.
கோதுமைப்புல் சாறு
பல் வலி உண்டாகும் போது வாயில் ஊற்றிக் கொப்பளித்துக் குடித்தால் பல் வலி குறையும்.
எல்லா நாட்பட்ட
நோய்களும் இதன் சாற்றால் குணமடையும். உடல் பருமன், நீரிழிவு நோய் குணமடைகிறது.
கோதுமைப் புல்லில்
உள்ள சத்துக்கள் :-
நீர் – 65%, புரதம் – 20%
கொழுப்பு – 3% மாவு சத்து – 12% நார் சத்து – 1% கால்சியம் – 40 மி.கி. இரும்பு – 6 மி.கி. விட்டமின் – B1 – 1.4 யூனிட், B2 – 0.54 யூனில், நியாசின் – 2.90 யூனிட். மற்றும் A, B 1, 2, 3,
5, 6, 8 & 12 C, E & K ஆகியவை உள்ளன.
----------------------------------------------------------------------------(தொடரும்)..
2 கருத்துகள்:
கோதுமைப்புல்லின் மருத்துவப் பயன்களுக்கு மிக்க நன்றி ஐயா...
ஐயா வணக்கம்,
முந்தய பதிவில்
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் - இதை உணவுக்கு முன் அருந்த வேண்டுமா அல்லது உணவுக்கு பின் வேண்டுமா
சற்று விளக்கி கூறுங்கள்.
நன்றிவுடன்
ராஜா
கருத்துரையிடுக