மூலிகையன் பெயர் :- கல்லுருவி.
தாவரப்பெயர் :- AMMANNIA BACCIFERA.
தாவரக்குடும்பம் :- LYTHRACEAE.
பயன் தரும் பாகங்கள்- சமூலம்.
வளரியல்பு :- கல்லுருவி நல்ல சீதோசன நிலையில் எல்லா இடங்களிலும் வளர்வது. இது சாதாரணமாக இந்தியா முழுதும் சதுப்பு நில்களிலும் வளரும் பூண்டு. வயல்களில் நெல் அறுவடைக்குப்பின் கழையாகத் தென்படும் செடி. இதன் தாயகம் இந்தியா. பின் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாக்கீஸ்தான், சைனா, பிலிப்பனஸ் , நியுஜினியா, ஆஸ்திரேலியா, மற்றும் மலேசியாவில் பரவிற்று. இதை ஆங்கிலத்தில் MONARCH RED STEM என்பர். கல்லுருவி ஒரு அடியிலிருந்து 2 அடி வரை வளரக்கூடியது. நேராக வளரும். சிறு கிழைகள் அதிகாக இருக்கும். இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் மென்மையானவை, நீழம் சுமார் 3.5 செ.மீ. இருக்கும். தண்டு சதுர வடிவில் அமைந்திருக்கும். இலை இடுக்குகளில் பூக்கள் பூத்திருக்கும். அதன் இதழ்கள் சுமார் 1.2 மி.மீ. நீழம் பச்சை அல்லது கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும். சூலகம் வட்ட வடிவில் இருக்கம். இது தன் மகரந்தச் சேர்க்கையால் காய் உண்டாகும். விதைகள் கருப்பாக இருக்கும். கல்லுருவி இனம் போன்று தொடர்புடைய வேறு செடிகளின் பெயர்கள்- AMMANNIA BACCIFERA L.FORMA BACCIFERA, AMMANNIA BACCIFERA KOEHNE FORMA TYPICA, AND AMMANNIA BACCIFERA L.SUBSP. BACCIFERA.. இது போன்று எண்ணற்ற இனங்கள் உள்ளன. கல்லுருவி விதைகள் மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.
மருத்துவப்பயன்கள் :- கல்லுருவி இலைகள் புண்களைப் போக்க வல்லது. விடத்தைக் குணப்படுத்தும். காச்சலைப் போக்கும். புற்றுநோயால் அழியும் செல்களைப் புதிப்பிற்கும் தன்மையுடையது. மேலும் இது பற்றி பல ஆராய்ச்சிகள் மேல் நாட்டில் செய்து கொண்டுள்ளார்கள். இதன் மூலிகை இனம் காண்பதில் சில சிக்கல்கள் உள்ளதாகச் சொல்வர்.
‘கல்லுருவிப் பூண்டு பலகட்டிகளையுங் கரைக்கும்
வல்லுதிரக் கட்டருக்கும் வந்தபுண்ணை வெல்லரிய
மேகத் தைவல் விடத்தை நீறாத கற்றிடும்
லோகத்தைச் சுத்தி செய்யும் போது’
கல்லுருவி மூலிகை இலையை அரைத்து தோலில் தடவ கொப்பளிக்கும் கட்டி உடையும். கடி நஞ்சுகளுக்கு இதன் இலையைக் கசக்கி கடிவாயில் வைத்துக் கட்ட நஞ்சு முறியும். தேள் கடி விடத்தையும் முறிக்கும். இரத்தத் துடிப்பகற்றும்.
இலைச்சாற்றை வண்டு கடிக்குப் பூசினால் குணமடையும். இதன் இலைகளில் ‘சி’ வைட்டமீன் உள்ளது.
இதன் இலைச்சாற்றை உடல் மீது தடவினால் தோல் வியாதி குணமடையும். காச்சலும் குணமடையும்.
ரணமான புண்களைக் குணப்படுத்த இதன் சமூலத்தை அரைத்து வைத்துக் கட்ட குணமடையும்.
உண்ணும் உணவுடன் இலைச்சாறு கலந்து விட்டால் அடிவயிற்றில் எரிச்சல் ஏற்படும் கவனத்துடன் கையாழ வேண்டும்.
---------------------------- (தொடரும்)
2 கருத்துகள்:
புகைப்படம் தெளிவாக இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்
மிக்க நன்றி. இது செல்போனில் எடுத்த து. அடுத்த முறை இடுகிறேன்.
கருத்துரையிடுக