திங்கள், 28 பிப்ரவரி, 2011

புன்னை.




1.     மூலிகையின் பெயர் :- புன்னை.

2.     தாவரப்பெயர் :- CALOPHYLLUM INOPHYLLUM.

3.     தாவரக்குடும்பம் :- CLUSIACEAE.

4.     பயன் தரும் பாகங்கள் :- இலை, பூ, விதை, பட்டை மற்றும் எண்ணெய் ஆகியன.

5.     வளரியல்பு :- புன்னை ஒரு மரவகையைச் சேர்ந்தது. மணற்பாங்கான இடம், வளமான ஈரமான இடங்களில்  நன்கு வளரும். கழிமண் நிலத்திலும், உப்புத் தண்ணீரிலும் வளரும். இது சற்று நீண்ட எதிர் அடுக்கில் அமைந்த பெரிய பச்சையான பளபளப்பான இலைகளையும்  உருண்டையான உள் ஓடு உள்ள  சதைக் கனிகளையும் உடைய பசுமையான மரம். இது சுமார் 5 அடிக்குமேல் 12 அடிவரை உயரம் வளரும். இதன் பூக்கள் அழகாக இருக்கும். பூவின் அகலம் 25 எம். எம். ஆகும். ஒரு கொத்தில் 4 - 15 பூக்கள் இருக்கும். இதன் காய்கள் முதலில் மஞ்சளாகவும் பின் முற்றிய பின் மரக்கலராகவும் மாரும். ஒரு மரத்தின் காய் 100 கிலோ கிடைக்கும். அதில் 18 கிலோ எண்ணெய் கிடைக்கும்.  புன்னை மரத்திற்கு ஆங்கிலத்தில் ‘Ballnut’ என்று சொல்வார்கள். இதன் பூர்வீகம் கிழக்கு ஆப்பிரிக்கா, பின் இந்தியாவின் தென் கடற்கரையோரங்கமளிலும், மலேசியாவிற்கும், மாலத்தீவிற்கும்,  ஆஸ்த்திரேலியாவுக்கும், அவாய் தீவுகள், புயூஜி தீவு, பிலிப்பன்ஸ், அமரிக்கா, உகந்தா போன்ற நாடுகளுக்குப் பரவிற்று. இந்தியாவில் தமிழ் நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. பழங்கால இலக்கியங்களில் புன்னை மரம் பற்றிக் காணப்படுகிறது. 
  புன்னை மரம் அழகிற்காகவும் வளர்க்கப்படுகிறது. 
  சோதிடத்தில் ஆயில்ய நட்சத்திரத்தின் மரம் புன்னை. 
  இது நோயைகுணமாக்கும் மரமாக விளங்கியுள்ளது. புன்னை கோயில்கள், சர்ச்சுகளிலும் வளர்க்கப்படுகிறது. கேரளம் தமிழ்நாட்டில் கோயில்களில் காணப்படுகிறது. புன்னை மரம் வலுவானது. இந்த மரத்தில் படகுகள் செய்வார்கள். வீடுகள் கட்டவும் பயன்படுத்துவார்கள்.  இதன் எண்ணெயில் ஆதிகாலத்தில் விளக்குக்குப் பயன் படுத்தினார்கள்.  தற்போது இதை பயோடீசல் தயார் செய்து டீசலுக்ககுப் பதிலாகப்பயன் படுத்துகிறார்கள்.. காட்டாமணக்கு, புங்கன், சொர்க்கமரம், வேம்பு மற்றும் இலுப்பை மரங்களில் கிடைக்கும் விதை போன்று இதன் விதையும் பயன் படுகிறது. புன்னை விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

6.     மருத்துவப் பயன்கள் :- புன்னை தாது அழுகல் போக்கியாகவும், உடல் இசைவு நீக்கியாகவும், நாடி நடையை உயர்த்தி உடல் வெப்பு தரும் மருந்தாகவும் பயன்படும். இது சளி, ஒற்றைத் தலைவலி, தலைசுற்றல் கண் எரிச்சல், வாத நோய், தோல் வியாதி, வயிற்றுப் புண், வெட்டை, மேகப்புண், சொறி சிரங்கு குஷ்டம்  ஆகியவைகளைக் குணப்படுத்தும்.

பூவை அரைத்துச் சிரங்கிற்குப் போடலாம்.

இலையை ஊரவைத நீரில் குளித்து வர மேகரணம், சொறி, சிரங்கு யாவும் மறையும்.

பூவை நிழலில் உலர்த்தித் தூள் செய்து ஒரு சிட்டிகை காலை, மாலை கொடுத்து வர டைபாய்டு தீரும்.

புன்னை எண்ணெய் பூசி வர மகாவாத ரோகம் முன் இசைவு, பின் இசைவு, கிருமி ரணம் சொறி சிரங்கு, குட்டரோகப் புண்கள் தீரும்.

புன்னை எண்ணெய் 10, 15 துளி சர்கரையில் கொடுத்து உப்பில்லா பத்தியம் இருக்க கொனேரியா என்ற வெள்ளை மேகரணம் தீரும்.

புன்னை மரம் கோயில்களில் உள்ளதை ஆயில்யம் நட்சரத்தில் பிறந்தவர்கள் அந்த மரத்தைச் சுற்றி வந்து கட்டிப் பிடித்துத் தழுவும் போது அந்த மரத்தின் கதிர் வீச்சுக்கள் உடலில் படும் போது நோய்கள் குணமடைகிறது. முக்கியமாக பெண்களுக்கான இதய நோய்கள், மார்பக நோய்கள் குணமடைவதாகச் சொல்கிறார்கள்.

புன்னை விதையை அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப் போட முடக்கு வாதம், கீல்வாயு, வாதவலிகள் தீரும்.

பட்டைக் குடிநீரால் புண்களைக் கழுவலாம்.

புன்னையின் இலைகள் பூக்கள் மற்றும் பட்டையை அரைத்துப் பவுடராக்கி தினம் ஒரு வேளை கொடுக்க மூட்டுவலி, சொறி, சிரங்கு குஷ்டம் மேகம் ஆகியவை குணமாகும்.




------------------------------------------ (தொடரும்)


  

திங்கள், 14 பிப்ரவரி, 2011

பழம்பாசி.




1.  மூலிகையின் பெயர் :- பழம்பாசி.

2.  தாவரப்பெயர் -: SIDA CARDIFOLIA.

3.  தாவரக்குடும்பம் -: MALUACEAE.

4.  பயன் தரும் பாகங்கள் -: சமூலம்.

5.   வளரியல்பு -:  பழம்பாசி ஒருசிறிய செடி
யாகும். இதன் இலைகள் இதைய வடிவமாக  
பச்சையாக இருக்கும்.  இதன் பூக்கள்  கரு  
ஞ்சளாகவும் 5 இதழ்களைக் கொண்டதாக  
இருக்கும். இதன் மேல் பாகத்தில் மொசு
மொசுப்பான  முடிகள் இருக்கம். இது 50-200  
செண்டி மீட்டர் உயரம் வளரக்கூடியதுஇதன்  
தண்டு பசுமை கலந்த மஞ்சள்  நிறத்தில் இருக்
கும்இதன் தாயகம் வட கிழக்கு பிரேசில் பின் 
இது இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா 
தென் அமரிக்கா, அவாய்தீவுகள், புது கினியா 
பிரான்ஸ் மற்றும் இலங்கைக்குப் பரவிற்று.  
இது எல்லா வகை நிலங்களிலும் வளரக்
கூடியது. தமிழகமெங்கும் தரிசு நிலங்களிலும்,  
சாலையோரங்களிலும் தானே வளரக்கூடியது.  
இதை நிலத்துத்தி என்றும் சொல்வார்கள் 
விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.


6.  மருத்துவப்பயன்கள் -: பழம்பாசியின் இலை  
சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல், உடலின்   
எடையை குறையச்செய்தல், இரத்த அழுத்தம்  
குறையச் செய்தல்   காச்சல், நரம்புத்தளர்ச்சி,  
ஸ்த்துமா, வலிப்புகளைப்  போக்கல், தாது  
வெப்பகற்றுதல் போன்ற குணங்களை
யுடையது. வேர் எண்ணெய் காயத்தைக்  
 குணமடையச் செய்யும் தன்மையுடையது.

இதன் இலையுடன் சிறிது பச்சரிசி சேர்தரைத்
துக் குழப்பிக் களி போல் கிளறி கட்டிகளுக்கு  
வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும்.

20 கிராம் இலையைப் பொடியாய் அரிந்து  
அரை லிட்டர் பாலில் போட்டு வேக வைத்து  
வடிகட்டிச் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து 
3 வேளை சாப்பிட மூலச்சுடு தணியும்.  
இதை 20 மி.லி. அளவாகக் குழந்தைகளுக்குக்  
காலை  மாலை கொடுத்து வர  இரத்த்க்  
கழிசல், சீதக் கழிசல்ஆசனம் வெளித்தள்ளல்  
ஆகியவை தீரும்



-----------------------(தொடரும்)