1.மூலிகையின் பெயர் -: மிளகாய்ப் பூண்டு.
2.தாவரப் பெயர் -: CROTON SPARSIFLORUS.
3.தாவரக் குடும்பப் பெயர் -: EUPHORBIACEAE.
4.பயன்தரும் பாகங்கள் -: இலை, விதை மற்றும் வேர் முதலியன.
5.வளரியல்பு -: மிளகாய்ப் பூண்டு தமிழகமெங்கும் தானே வளர்கிறது. எல்லா மண் வளத்திலும் வளரக்கூடியது. மிளகாய் இலை வடிவில் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும், நீள் குச்சியில் இருமருங்கும் வெண்ணிறப் பூக்களையும், ஆமணக்குக் காய் வடிவில் சிறு காய்களையும், உடைய மிகச்சிறு செடி. 2 அடி உயரம் வரை குட்டாக வளரும். இதை எலி ஆமணக்கு என்றும் குறிப்பிடுவதுண்டு. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
6.மருத்துவப் பயன்கள் -: மிளகாய்ப் பூண்டு மலமிளக்கியகவும் உடல் தாதுக்களை அழுகாது தடுக்கவும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.
இதன் இலையைக் கீரை போல் வதக்கிச் சோற்றில் பிசைந்து சாப்பிட மலர்ச்சிக்கல் தீரும்.
இதன் இலையைக் குடிநீர் 3, 4 வேளை 1 முடக்கு வீதம் குடித்து வரக் கட்டிகள் கரையும். கை, கால் இடுக்குகளில் நெறி கட்டிய சுரம் தீரும்.
40 கிராம் வேரை 250 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சி தினம் 2 துளி சர்கரையில் காலை, மாலை சாப்பிட்டு வரப் பாரிச வாயு, பக்கச் சூலை, இழுப்பு, இளம்பிள்ளை வாதம், முக வாதம் ஆகியவை தீரும்.
------------------------------------------------(தொடரும்)
6 கருத்துகள்:
நல்ல தகவல்கள்! பார்கின்சன், அல்சீமர் வியாதிகளை குணப்படுத்தும் மருந்து உண்டா?
வணக்கம் அய்யா,
அளவற்ற பயனுள்ள தகவல்களை அளிக்கும் உங்களுக்கு நன்றி. இந்த மூலிகைகளை முடிந்த வரை ஈரோட்டிலிருக்கும் என்னுடைய சிறு தோட்டத்தில் வளர்க்க விரும்புகிறேன். சரியான வழி காட்டல் தேவை. தங்களால் வழி காட்ட முடியுமா? தற்போது தோட்டத்தில் மா, சப்போட்டா மற்றும் சில பழ வகைகளை பயிரிட்டுள்ளேம்.
sivaramj@yahoo.com
நன்றி
அமர பாரதி அவர்களுக்கு எனது வலைப்பதிவைப் படித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் தாராளமாக மூலிகைப் பண்ணை அமைக்கலாம். ஈரோட்டில் எஸ்.கே.எம். ல் நீங்கள் நாற்றுக் கேட்டுப்பார்க்கலாம். இல்லையென்றால் கோவையிலிருந்து நாற்றுக்கள் கிடைக்கும். மேலும் விபரம் அறிய திரு.விலசென்ட் 9894066303. அவரிட்ம் தொடர்பு கொண்டால் வெட்டி வேர், எலுமிச்சம்புல், ரோஸ்மேரி, பச்சோலி, இன்சுலின், ஐயம்பனா போன்ற மூலிகை நாற்றுக்கள் வைத்துள்ளார் விற்பனைக்கு. நன்றி.
நன்றி அய்யா. வின்சென்ட் அவர்களை தொடர்பு கொள்கிறேன்.
அன்புள்ள தேவன் மாயம் அவர்களுக்கு மிக்க நன்றி. எனது நண்பர் பாரம்பரிய சித்த மருத்துவர் திரு பன்னீர்செல்வம் அவர்களைத் தொடர்பு கொள்ளவும். அவரது அலை பேசி- 9363000645. குனியமுத்தூர். நன்றி.
அமர பாரதி அவர்களுக்கு பொளி ஓரங்களில் வெட்டிவேர் வைக்கலாம். மர நிழலில் பச்சோலி வைக்கலாம். மேலும் வின்சென்டிடம் கேழுங்கள். நன்றி.
கருத்துரையிடுக