திங்கள், 18 ஜனவரி, 2010
லாவண்டர்.
. மூலிகையின் பெயர் :- லாவண்டர்.
2. தாவரப்பெயர் :- LAVENDULA OFFICINALIS.
3. தாவரக்குடும்பம் :- LABIATAE.
4. பயன்தரும் பாகங்கள் :- இலை மற்றும் பூக்கள்.
5. வளரியல்பு :- அனைத்து வகை வழமான மண்களிலும் வளரும். ஆனால் 3000 அடி உயரத்திற்கு மேல் நன்கு வளமாக 3 அடி உயரம் வரை வளரும். எதிர் அடுக்கில் இலைகள் அமைந்திருக்கும். நேராக வளரும். பூக்கள் நீல நிறமாக இருக்கும். இலைகளும், பூக்களும் வாசனையாக இருக்கும். பிரான்ஸ், மெடிட்டரேனியன் மேற்கிலிருந்து இங்கிலாந்திற்குப் பரவியது. அதை வாசனைக்காகவும், குழிக்கவும் பயன் படுத்தினர். பழைய கிரேக்கர்களால் சிரியாவில் இதை NARD என்று அழைத்தனர். இதை கிரீக் NARDUS என்றும் ரோமன் ASARUM என்றும் அழைத்தனர். அமரிக்கா, ஐரோப்பா, பிரான்ஸ், பல்கேரியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் ரஸ்யாவில் விழைவிக்கப்பட்டது. இதன் வயது 3,4 வருடம். விதையிலிருந்து நாற்றங்கால் அமைத்து சிறு செடியாக வேர் விட்ட பின் எடுத்து நடலாம். ஆனால் 10 செ.மீ. நீளமான தண்டுகளை நாற்றங்காலில் பசுமைக்குடிலில் நட்டு வேர் விட்டவுடன் எடுத்து 4 அடிக்கு 2 அடி என்ற இடைவெளி விட்டு நட்டுத் தண்ணீர் பாச்ச வேண்டும். இது தான் சிறந்த முறை. தேவையான பொழுது களை எடுக்க வேண்டும். தேவைக்கேற்ற நீர் பாச்ச வேண்டும். அறுவடை மற்றும் விளைச்சல் வருடத்திற்கு 200 கிலோ இலைகள் மற்றும் பூக்கள் பற்றும் 50 கிலோ எண்ணையும் கிடைக்கும். பூச்சி நோய் தாக்குதலுக்குத் தைவைக்கேற்ப மருந்தடித்துக் கட்டுப்படுத்த வேண்டும். பூக்கள் மற்றும் இலைகளை பறித்தவுடனே அனுப்ப வேண்டும். செலவு வருடம் ரூ.25,000, வரவு ரூ.65,000, வருமானம் ரூ.40,000 கிடைக்கும்.
6. மருத்துவப்பயன்கள் :- லாவண்டர் நரம்பு சம்பந்தமான மற்றும் செரிமான சம்பந்தமான நோய்கள் தீரும். அழகு சாதன பொருள் மற்றும் வாசனைத் திரவியம் தயாரிக்கப் பயன்படுகிறது. இரண்டாவது உலகப்போரின் போது காயம் பட்ட இராணுவ வீரர்களுக்கு புண் ஆற்ற லாவண்டர் எண்ணெயைப் பயன் படுத்தினார்கள். இங்கிலாந்தில் குழிக்கும் நீரில் இதன் எண்ணெயைக் கலந்து வாசனைக்காகப் பயன் படுத்தினர். டாய்லெட்டுகளைக் கழுவ, வீடு கழுவ, புண்களைக்கழுவ, தீக்காயம் கழுவப் பயன் படுத்தினர்.
லாவண்டர் எண்ணெய் பயன் படுத்தினால் டென்சன் குறையும், தலைவலி குண்மாகும். ஆஸ்த்துமா சரியாகும், குளிர், இருமல் குறையும், தொண்டைவலி குணமாகும். ஜீரணமாகப் பயன்படும், விழையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின் போது அல்லது போட்டியின் போது தொடையில் ஏற்படும் பிடிப்பை குணப்படுத்தும். தோல் வியாதிகள் அனைத்தும் குணமாகும். பூச்சிக் கடியால் ஏற்படும் அறிப்பு இதைத் தடவ குணமாகும். பல்வலி, சுழுக்கு, வீக்கம் ஆகியவை இதனால் குணமடையும். ரோமானியர்கள் இந்த எண்ணெயை நல்ல விலை கொடுத்து வாங்கினர். வெளிநாட்டில் லாவண்டர் பூவினை டீ தயாரிப்பில் பயன் படுத்துகிறார்கள்.
---------------------------------------------------(தொடரும்)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
ஐயா ..தங்களின் இந்த சேவை என்னை ஆச்சர்யபடுத்துகிறது....இந்த வலைதளத்தில் உள்ள அனைத்து தகவள்களும் மிக்க அருமை.
ஐயா, மிக்க நன்றி. பீளமேட்டில் உள்ள வின்சன்ட் என்பவர் எனக்கு மிகவும் உதவியாக உள்ளார். அவரது அலை பேசி-9894066303. மூலிகை தொடரும். நன்றி.
வணக்கம்... விவசாய தகவல்களை ஒரிடத்தில் தொகுக்கும் பொருட்டு விவசாய கலைக்களஞ்சியம் எனும் அக்ரி பீடியா தளத்தினை உருவாக்கியுள்ளோன். இதில் உங்கள் பதிவுகளையும். உங்கள் வலைபக்க இணைப்புகளையும் அளித்து விவசாய சமூகம் பயன் அடைய உதவுங்கள். வருக. www.agripedia.in மேலும் விபரங்கள் பெற 9994396096 என்ற எண்ணிற்கு அழைக்கவும் .இந்த அக்ரிபீடியா சேவை எவ்வித லாப நோக்கமும் இன்றி ஆரம்பிக்கப் பட்டுள்ள தளம். இதில் வருகை புரியும் அனைவரும் கட்டுரைகளை பதிவு செய்யும் வண்ணம் வடிவமைக்கப் பட்ட தளம்....
அன்பர் மாரிமுத்துவின் மடல்.
-----
அன்புள்ள ஐயா,
வணக்கம். என் பெயர் மாரிமுத்து. சென்னையில் கணிப்பொறி துறையில் வேலை பார்க்கிறேன்.
தற்செயலாக தங்களின் Blog (http://mooligaivazam-kuppusamy.blogspot.com/) கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். மூலிகை பற்றிய அறிய தகவல்களை விளக்கமாக தந்தமைக்கு மிக்க நன்றி.
முடிந்தால் தங்களை சந்திக்க விரும்புகிறேன். நன்றி.
--
Regards,
Marimuthu K
Mobile: 98411 11943
-----------------------------------------------
WE CAN * WE WILL & WE WIN
The DREAM is NOT what you seen in sleep.
The DREAM is the thing which DOES NOT LET YOU SLEEP. - Dr.Kalam.
கருத்துரையிடுக