புதன், 12 ஆகஸ்ட், 2009

இசப்கோல்.





1. மூலிகையின் பெயர் -: இசப்கோல்.

2. தாவரப் பெயர் -: PLANTAGO OVATA.

3. தாவரக் குடும்பப் பெயர் -: PLANTAGINACEAE.

4. வேறு பெயர்கள் -: இஸ்கால், ஆங்கிலத்தல் ‘PSYLLIUM’ என்று பெயர்.

5. வகைகள் -: ப்ளேன்டகோ சில்லியம், ப்ளேன்டகோ இன்சுல்லாரிஸ், ஜிஐ 1,
ஜிஐ 2, மற்றும் நிஹாரிக்கர் போன்றவை.

6. பயன்தரும் பாகங்கள் -: விதை, விதையின் மேல் தோல் முதலியன.

7. வளரியல்பு -: இசப்கோல் ஒரு சிறு செடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு அடி முதல் 1.5 அடி வரை உயரம் வளர்க்கூடியது. இதற்கு மணல் பாங்கான களிமண் நிலங்களில் பயிரிட ஏற்றது. வடிகால் வசதி வேண்டும். இதற்கு 7.2 - 7.9 கார அமிலத் தன்மையுள்ள நிலமாக இருத்தல் வேண்டும். நிலத்தைப் பண்படுத்தி உரமிட்டு பாத்திகள் அமைத்து நிலத்தைப் பண்படுத்த வேண்டும். இந்தியாவில் அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் நடவுக்கு ஏற்ற பருவங்கள். விதையை மணலுடன் சேர்த்து மேலாக வதைத்து தண்ணீர் பாச்ச வேண்டும். ஒரு ஹெக்டருக்கு 7-12 கிலோ விதை தேவைப்படும். பின் 15-20 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாச்ச வேண்டும். சுமார் 7 நீர் பாச்சல் தேவைப்படும். விதைத்த 5-6 நாட்களில் விதை முளைக்கும். 3 வாரம் கழித்து 20 செ.மீ. X 20 செ.மீ செடிகள் இருக்குமாறு களை எடுத்து, கலைப்பித்து விட வைண்டும். 2-3 முறை களை எடுக்க வேண்டும். பின் 3 வாரம் கழித்து மேலுரமிட்டு பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டும். விதைத்து 2 மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும். பூக்க அரம்பிச்சவுடன் நீர் பாச்சக் கூடாது. பின் 4 மாதம் கழித்து அறுவடை செய்ய வேண்டும். அடிப்பகுதியிலிருந்து நீண்ட காம்புகள் பூக்கும். விதைகள் மெல்லியதாகவும், இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும். விதைகள் முதிர்ச்சி அடையும் போது செடிகளின் அடிபாக இலைகள் மஞ்சள் நிறமாகும், பழங்கள் லேசாக அமுக்கினால் 2 விதைகள் வெளிவந்து விடும். காலை 10 மணிக்கு மேல் அறுவடை சிறந்தது. செடிகளை வேறுடன் பிடுங்கி பெரிய துணிகளில் கட்டி எடுத்து களத்திற்குக் கொண்டு வத்து விரித்துப் பரப்பி, காயவைக்க வேண்டும். 2 நாட்கள் கழித்து டிராக்டர் அல்லது மாடுகள் கொண்டு தாம்பு அடிக்க வேண்டும். விதைகளைப் பிரித்தெடுத்த பின்பு செடிகள் மாட்டுத் தீவனமாகப் பயன் படுத்தலாம். பின் இயந்திரங்கள் மூலம் விதையின் மேல் தோலைப் பிரித்தெடுக்க வேண்டும்.

இந்தச் செடியின் விதைகளின் மேல் தோல்கள் தான் மருந்துக் குணம் அதிகமுடையது. விதையின் மேல் தோலுக்குப் பிசுபிசுப்புத் தன்மை உண்டு. இந்த விதையின் ஒரு வித எண்ணெய் மற்றும் சிறுய அளவில் அக்யுபின் மற்றும் டானின் என்ற க்ளோக்கோஸைடுகள் உள்ளது. இதன் தோல் தண்ணீரை உறிஞ்சி தன்னிடத்தில் நிறுத்திக் கொள்ளும் தன்மை உடையது. குஜராத்திலும், ராஜஸ்தானில் அதிகமாக விளைகிறது. இது இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி மருந்துப் பொருளாகும். விதைகளின் மூலம் இனப் பெருக்கும் செய்யப்படுகிறது.

8. மருத்துவப் பயன்கள் -: இசப்கோல் விதைகள் குடல்புண், மலச்சிக்கலை நீக்கப் பயன்படுகிறது. மேல்தோல் வயிற்றுப் போக்கு, சிறுநீரக கோளாறுகள் நீக்கப் பயன்படுகிறது. தொண்டை மற்றும் நுரையீரல் நோய்களைக் குணப்படுத்த, தேனுடன் உபயோகப்படுத்தப்படுகிறது. இம்மூலிகைச் சாயங்கள், அச்சு ஐஸ்கிரீம் மற்றும் அழகு சாதனங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. தோல் நீக்கப்பட்ட விதைகளில் 17-19 சதம் வரை புரதச் சத்து உள்ளதால் கால் நடைத் தீவனமாகப் பயன் படுகிறது.

--------------------------------------------(தொடரும்)

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

VANNAKKAM IIYA,
THE UTILIZATION AND DETAILS OF ALL THE HERBS ARE REALLY GOOD WITH PHOTOS
BEST REGARDS
SESHYA URPFR ORG

இளங்குமரன் சொன்னது…

ஐயா அருமையான தகவல் களஞ்சியம். நான் நீண்ட காலமாக இதில் ஆர்வம் உடையவன். சரியான வழிகாட்டுதல் கிடைக்கவில்லை. என் தாயார் கற்றுக் கொடுத்த கை மருத்துவங்களைத் தேவைக்கேற்ப பயன்படுத்துவேன். தமிழகத்தில்ஆறு ஆண்டுகளும் சிங்கப்பூரில் கடந்த 14 ஆண்டுகளாகவும் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வருகின்றேன். விரைவில் தொலைபேசியில் உங்களோடு தொடர்பு கொள்கின்றேன்.

இளங்குமரன் சொன்னது…

மிக்க நன்றி ஐயா.