1. மூலிகையின் பெயர் -: மகிழமரம்.
2. தாவரப் பெயர் -: MIMUSOPS ELENGI.
3. தாவரக்குடும்பம் -: SAPOTACEAE.
4. வகைகள் -: வெள்ளை. (BULLET WOOD TREE,)
5. பயன் தரும் பாகங்கள் -: இலை, பூ, காய், விதை, பட்டை, ஆகியவை.
6. வளரியல்பு -: மகிழமரம் தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. மேற்குத் தோடர்ச்சி மலைகளில் தானே வளர்கிறது. இதற்கு அதிக ஈரப்பதம் தேவையில்லை ஆனால் தண்ணீர் தேங்கக் கூடாது. இதன் பூர்வீகம் வட ஆசியா, தென்கிழக்கு ஆசியா, மற்றும் வட ஆஸ்திரேலியா. இதன் உயரம் 20 முதல் 50 அடி உயரம் வளரக்கூடியது. அடர்த்தியான இலைகளையுடைய பசுமை மரம். நல்ல நிழல் தரும் மரம். மனதைக் கவரும் இனிய மணமுடைய கொத்தான வெள்ளைப் பூக்களையும் மஞ்சள் நிற சாப்பிடக் கூடிய பழங்களையும் உடைய மரம். பூவின் மணத்திற்காக நகரங்களில் பூங்காவிலும் கோயில் களிலும், வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. இதன் மணம் மனதை மகிழவைக்கும். மகிழமரம் விதை நாற்றுக்கள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.
7. மருதுதுவப் பயன்கள் -: மகிழமரத்தின் பூ, தாது வெப்பு அகற்றும், காமம் பெருக்கும். விதை குளிர்ச்சியூட்டும். தாது பலம் பெருக்கும், நஞ்சு நீக்கும்.
பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும்.
கருவேலம் பற்பொடியில் பல் துலக்கி மகிழ இலைக் கியழத்தால் வாய் கொப்பளித்து வர பல் நோய் அனைத்தும் தீரும்.
மகிழம் பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய் கொப்பளிக்க வாய் புண் ஆறும்.
10 கிராம் மகிழம் பட்டையைப் பொடித்து அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடி கட்டி தேன் சேர்த்து 50 மி.லியாக காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை பலவீனம் தீரும். காய்ச்சல் தணியும்.
மகிழங் காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப் படும்.
மகிழவித்துப் பருப்பை வேளைக்கு 5 கராம் அரைத்து பாலில் கலக்கி சாப்பிட்ட் வர தாது விருத்தியாகும். உடல் வெப்பு, மலக்கட்டு, நஞ்சு ஆகியவை தீரும்.
மகிழம் பூவை காயவைத்து அரைத்துப் பொடியாக்கிப் பாலில் காலை,மாலை அறிந்தி வர காச்சல் தலைவலி, உடல் வலி, கழுத்து, தோழ்பட்டை வலி போகும். அறிவு வளர்ச்சிக்கு இது ஒரு டானிக். மூத்திர எரிச்சல் குறையும். பழத்தை குடநீராக்கிக் குடிக்க குழந்தை பிறப்பின் போது எழிதாக இருக்கும். பட்டையின் பொடி புண்களை ஆற்ற வல்லது.
--------------------------------------------(மூலிகை தொடரும்)
12 கருத்துகள்:
தங்களின் அனைத்து மூலிகை பற்றிய தகவல்களும் மிக அரியவை. இவற்றின் விதைகள் அல்லது கன்றுகள் எங்கு கிடைக்கின்றன. இவைகளை நான் சேகரித்து வளர்க்க விரும்புகிறேன்.
ஐயா நன்றி, மூலிகை செடிகள் ஆழிய்யார் மூலிகைப்பண்ணையில் கிடைக்கின்றன. மேலும்மருந்துப்பயிர்கள் தொடர்பு மையம் கோவையில் தமிழ்நாடு வேளாண்மைபல்கலைக்கழகம் கோவை-3 போன் 0422 6470425,6611365, 6611284 ல் தொடர்பு கொள்ளவும். வலைப்பதிவை பார்வையிட்டமைக்கு மிக்க நன்றி
ஐயா நன்றி, மூலிகை செடிகள் ஆழிய்யார் மூலிகைப்பண்ணையில் கிடைக்கின்றன. மேலும்மருந்துப்பயிர்கள் தொடர்பு மையம் கோவையில் தமிழ்நாடு வேளாண்மைபல்கலைக்கழகம் கோவை-3 போன் 0422 6470425,6611365, 6611284 ல் தொடர்பு கொள்ளவும். வலைப்பதிவை பார்வையிட்டமைக்கு மிக்க நன்றி
ஐயா தங்களது தகவலுக்கு நன்றி.
வணக்கம் ஐயா
தங்களது வலைபதிவில் உள்ள மூலிகை பற்றிய விஷ்யங்கள் அனைத்தும் உபோயகமாக இருந்தது .மூலிகை படங்களை தெளிவக படம் பிடித்து பதித்து உள்ளீர்கள் சித்த மருத்துவ மாணவர்களுக்கும் இதில் ஆர்வம் உடையவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.நன்றி. எனக்கு ஆகாயத்தாமரையின் படமும் அதன் பயன்பாடு பற்றி தெரிவிக வேண்டுகிறேன்
i would like to get your contacvt no to speak you sir.i am interested in meeting you in the farm and discussing with you.
i would like to get your contacvt no to speak you sir.i am interested in meeting you in the farm and discussing with you.
மிக்க நன்றி திரு இராம்மூர்த்தி அவர்களே. உங்களுக்காக ஆகாயத்தாமரை போட்டுள்ளேன். நன்றி.
கார்த்திகேயா அவர்களே மிக்க நன்றி. எனது அலை பேசி 9487283644. வீடு-0422-2242626
வலைப்பதிவை பார்த்தமைக்கு நன்றி.
நன்றி ஐயா
ஆகயாத்தாமரையின் படமும் அதன் பயன்கள் பற்றியும் மிக தெளிவாகவும் விளக்கமாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள்
உபோயகமக இருந்தது
நன்றி ஐயா
ஆகயாத்தாமரையின் படமும் அதன் பயன்கள் பற்றியும் மிக தெளிவாகவும் விளக்கமாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள்
உபோயகமக இருந்தது இது எங்கு கிடைக்கும்
அய்யா, மகிழ மரம் பற்றிய கூடுதல் விபரங்கள். http://www.flowersofindia.net/catalog/slides/Maulsari.html
இத்த செடியை இப்போது தான் வாங்கினேன்
கருத்துரையிடுக