வியாழன், 2 ஆகஸ்ட், 2007

ஐயம்பனா

























1) வேறு பெயர்கள்: Apana, Ayapana, Inpana

2) தாவரப் பெயர்கள்: Eupatdrium Triplinerve

3) வளரும் தன்மை: இது ஒரு அரிதான மூலிகைச் செடி. இது முதன்முதலில் மெக்சிகோ நாட்டை பூர்விகமாகக் கொண்டது. இது அங்கிருந்து மற்ற நாடுகளுக்குப் பரவியது. இது மருத்துவ குணமுடைய செடி. 30 முதல் 60 சென்டிமீட்டர் உயரம் வரை வளரும். இதன் தண்டு கெட்டியாகவும் வேர் விட்டுப் படரும் தன்மையும் கொண்டது. இலைககள் மென்மையாக கரும்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

இலைகள் எதிர் வரிசையில் 5 முதல் 6 சென்டிமீட்டர் நீளத்தில் வாசனையுடன் கூர்மையான நுனியைக் கொண்டிருக்கும். இது முதிரும் போது 6 முதல் 7 மில்லி மீட்டர் நீளமுள்ள சுமார் 20 மலர்கள் நீல நிறத்துடன் சிறிய காம்புகளைக் கொண்டதாக ஐந்து இதழ்களுடன் பூக்கும். இதழ்கள் ஒவ்வொன்றும் 2 மில்லி மீட்டர் நீளம் கொண்டது. இந்த இலையில் 1.14 சதவீதம் ‘அபயன்’ எண்ணெய் உள்ளது. இது கட்டிங் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

4) பயன்படும் உறுப்பு: இலைகள் மட்டும்.

5) பயன்கள்: இது தமிழ்நாட்டில் அதிகமாகக் காணப்படுவதில்லை. ஆனால் கேரளா மாநிலத்தில் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சில பேர் இதை ரகசியமாக வைத்துக் கொண்டு மூல நோயைக் குணப்படுத்தி பொருள் ஈட்டுகிறார்கள். என் கேரளா நண்பர் மூலம் அறிந்து கொண்ட உண்மை என்னவென்றால் மூல நோய் உள்ளவர்கள் அல்லது நோய் ஆரம்ப காலமாக உள்ளவர்கள் தினமும் தொடர்ந்து அதிகாலை வெறும் வயிற்றில் இரண்டு முற்றிய ஐயம்பனா இலைகளை பத்து நாட்கள் சாப்பிட்டால் பூர்ண குணமடையும். இதன் பயன்பற்றி ‘Koster’ என்பவர் கூறும் போது இதன் புளிப்பான இலையை சாப்பிடும் போது குளிர் காய்ச்சலைக் குணப்படுத்துவதுடன், வயிற்றுப் போக்கையும் குணப்படுதுக்கிறது என்றார்.

தலைவலி வந்தால் இதன் இலையை ஆமணக்கு விளக்குச் சுடரில் வாட்டி முன் நெற்றியில் வைத்தால் குணமடையும். இதன் ஆயிலை மருந்தாகவும் டானிக்காகவும் பயன்படுத்துகிறார்கள். இதை குளிர்பானமாக பயன்படுத்தும்போது குடல்புண், சீதபேதி, இரத்தக் கடுப்பு, அல்சர் போன்ற நோய்களும் இதனால் குணமடைகிறது.

Bouton என்பவர் தனது ‘Med Plants of Mauritius’ என்ற புத்தகத்தில் 96ம் பக்கத்தில் ‘it appears to hold a high place among the medicinal plants of the Mauritius, being there in daily use in the form of infusion given in dyspepsia and other affection of the bowels and lungs’.

இதை அளவுடன் அருந்தினால் தாதுபுஸ்டியாகும், மேலும் இதை டானிக்காவும் பயன்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் ஜீரண சக்தியை தூண்டி வயிற்றைக் காலி செய்துவிடும். இந்த மருந்துச் செடி வரகம்பாடியில் உள்ள எனது தோட்டத்தில் பயிர்செய்து வருகிறேன்.

(அடுத்த மூலிகை அடுத்தவாரம் தொடரும்)
_________________________________________________________________________

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

The Rise Of The Organization A man gave the route of [B]ed hardy hoodies[/B] collection his own name. Later on he joined by [B]ed hardy clothes[/B] Creating clones for other brand names like Urban Outfitter, Von Dutch and Diesel was his previously functioning. He learn a great possibility in [B][URL=http://www.edhardystore.uk.com]ed hardy sneakers[/URL][/B] masterpieces. He talked this kind of difficult within the yr 2004 having a considering foe a clothes design dependent on his outstanding art and tattoo [B][URL=http://www.edhardystore.uk.com]ed hardy[/URL][/B] Soon right after that talk, Hardy [B]ed hardy[/B] an authorization to make use of his personal types and from then on, the Ed Hardy garments was born.

Together while using achievement of [B][URL=http://www.edhardystore.uk.com]ed hardy[/URL][/B] outfits stytle you will discover difficulties linked with them. [B]ed hardy uk[/B] fine outcomes of [B]ed hardy[/B] outfits selection is because of Christian Audigier's special marketing designs, you will find so numerous who argue this. Audigier personal really a few [B][URL=http://www.edhardystore.uk.com]ed hardy t shirts[/URL][/B] buddies and he hold them. [B][URL=http://www.edhardystore.uk.com]ed hardy[/URL][/B] just provides his good friends no cost goods and take pictures from them wearing his types rather than having to pay so many amounts of bucks for that fashion who will [B][URL=http://www.edhardystore.uk.com]ed hardy clothes[/URL][/B] the clothes selection.

kuppusamy சொன்னது…

தவறான உணவுப் பழக்கம், இரவுப்பணி, ஓரே இடத்தில் அமர்ந்து பணி செய்தல், தினமும் நீண்டதூரப் பயணம், உடற் பயிற்சியின்மை, சரியாக தண்ணீர் அருந்தாமல் இருப்பது என்று பல காரணங்கள் இந்நோய் வருவதற்கு கூறலாம். இந்த நோய் உள்ளவர்கள் ஆரம்ப நிலையில் இதனைப் பற்றி பேச தயக்கப்பட்டு பின் நோய் முற்றியபின் அவர்களது நடையில் மாற்றம் ஏற்படும் போது பிறரின் கேலிக்கு உள்ளாவதை பார்க்கிறோம். அறுவை சிகிச்சை என்று வரும்போது நேரம் மற்றும் பணம் விரையமாவதை தவிர்க்க முடிவதில்லை. ஆரம்பநிலையில் இருப்பவர்கள் அதிக நார்சத்துள்ள காய்கறி மற்றும் பழவகைகளை உண்ண நோய்யை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
எனது வீட்டிலிருக்கும் செடி. ஆனால் ஒரு மெக்சிகோ நாட்டுத் தாவரம் ஐயப்பனா (EUPATORIUM TRIPLINERVE Vahl - AYAPANA) அறுவை சிகிச்சை நிலையில் இருப்பவரைக் கூட மிக எளிதாக குணப்படுத்துகிறது. சுமார் 5 இலைகளை காலையில் பல்சுத்தம் செய்து வெறும் வயிற்றில் இதனை உட்கொண்டு சிறிது சுடுநீர் அருந்தவேண்டும். பின் 30 நிமிடங்கள் கழித்து உணவருந்தலாம். நோயின் தன்மையை பொறுத்து 5 முதல் 10 நாட்களில் குணமாகிவிடுகிறது. இதனை நிறைய நண்பர்களுக்கு அளித்து அவர்கள் நலமுடன் இருப்பதை நான் காணுகிறேன். இதனை வளர்ப்பது மிக எளிமையானது. மொரிஷியஸ் நாட்டில் முதன்மை தாவரமாக உள்ள "ஐயப்பனா" தமிழகத்தில் இன்னும் இது பிரபலமாகவில்லை.

kuppusamy சொன்னது…

இதை மண்மரம்மழை மனிதன் பதிவர் வின்சென்ட் அளித்துள்ளதை மேலும் அளித்துள்ளேன் மக்கள் பயன் அடையட்டும்.

JP's PMP Exam சொன்னது…


Where can I get this at chennai?

kuppusamy சொன்னது…

ஐயம்பனா மூலிகை சென்னையில் எங்கு கிடைக்கும் என்பது தெறியவில்லை. கோவையில் நண்பர் வின்சென்ட் என்பவரிடம் உள்ளது. அவரது எண் 9894066303.