ஞாயிறு, 28 அக்டோபர், 2018

தவறான கருத்து


தவறான கருத்து:

சித்த மருத்துவம் ஒரு மூலிகை மருத்துவம்(Herbal Medicine) என்ற தவறான கருத்து மக்களிடம் உள்ளது.
சில ஊடகங்களும் கூட சித்த மருத்துவம் என்றாலே ஏதோ சில மூலிகைகளை அரைத்து சாப்பிடுகின்ற மருத்துவம் என ஒரு உருவகத்தை உண்டாக்குகின்றன. இது முற்றிலும் தவறு.
சித்த மருந்துகளில் மூலிகைகள் மட்டுமல்லாது, உலோகங்கள்(Metals), உபரசங்கள், தாதுஉப்புக்கள், நவமணிகள்(Nine gems), பஞ்சசூதப் பாசாணங்கள், மற்றும் உயிரினங்களிலிருந்து எடுக்கப்படும் மருந்துச் சரக்குகள் போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றன.
siththa maruththuvam5உலோகங்கள் என எடுத்துக் கொண்டால் இரும்பு, காரீயம், வெள்ளி, தங்கம் என 11 வகையான உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இன்னும் சொல்லப்போனால் இன்று Maggi-யில் அதிக அளவில் இருப்பதாகக்கூறி தடைசெய்யப்பட்டுள்ள ‘காரீயம்’(Lead) கூட ஒரு மருந்துச் சரக்காக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
பாசாணங்கள் என எடுத்துக்கொண்டால் (Arsenic Compound), கந்தகம்(Sulphur), வெள்ளைப் பாசாணம்(White Arsenic), மிர்தார் சிங்கி, வீரம், மயில் துத்தம், அப்பிரகம், துருசு போன்ற 64 வகையான வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
siththa maruththuvam4உப்புகள் என எடுத்துக்கொண்டால் இந்துப்பு(Rock Salt), கல்லுப்பு(Asphalt), சீனாக்காரம்(Aluminum potassium sulphate), சூடன்(camphor), நவச்சாரம்(Ammonia Chloride), பச்சைக் கற்பூரம், வெங்காரம் (Borax), வெடியுப்பு(Potassium Nitrate) போன்ற 25 விதமான வேதிப்பொருட்கள் சித்த மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் 120 வகையான உபரசங்கள் (Secondary Minarals) சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக சொல்லவேண்டுமானால் பூநாகம், வெள்ளைக்கல், நிமிளை, கல்மதம், அன்னபேதி போன்றவற்றைக் கூறலாம்.
மேலும் மிகவும் சக்தி வாய்ந்த மருந்துச் சரக்குகளான ரசம்(Mercury), ரசசெந்தூரம், இலிங்கம், பூரம், வீரம்(hydrargyrum Perchloride) போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த இடத்தில் உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். சித்த மருத்துவம் மூலிகை மருத்துவம்தான் என இத்தனை நாள் நினைத்திருந்தோமே இவ்வளவு வேதிப்பொருட்கள் சேர்த்துத்தான் சித்த மருந்துகள் தயாரிக்கிறார்கள் என்றால் (Chemicals), அது பக்க விளைவை ஏற்படுத்தாதா?, அவை பாதுகாப்பானதா? என நீங்கள் யோசிக்கலாம்.
நிச்சயம் பாதுகாப்பானதுதான். ஏனென்றால் ஒவ்வொரு மருந்துச் சரக்கையும் (Raw Drug) பயன்படுத்துவதற்குமுன் அது சுத்தி(Purification) செய்யப்படுகிறது.
அதாவது அதிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்குவதற்கான செயல்முறைதான் சுத்தி எனப்படுகிறது.
ஒவ்வொரு சரக்கிற்கும் பல்வேறு சுத்தி முறைகளை சித்த மருத்துவ முன்னோடிகள் கூறிச்சென்றுள்ளனர்.
உதாரணத்திற்கு இன்று ‘Maggi’-யில்அதிகம் இருப்பதாக குற்றம் சாட்டப்படும் Lead என்ற காரீயத்தின் சுத்தி முறையை மட்டும் கூறுகிறேன். ஐவேலிச் சமூலச்சாறு, அதாவது Diplocyclos Palmatus என்ற தாவரத்தின் சாற்றினை பயன்படுத்தி காரீயத்தை சுத்தி கொள்ளலாம்.
மேலும் நொச்சி சாற்றினைப் பயன்படுத்தியும் சுத்தி செய்யலாம். மேலும் வெள்ளாட்டின் சிறுநீர் மற்றும் பிரண்டையை பயன்படுத்தியும் சுத்தி செய்யலாம்.
இப்படியெல்லாம் பல வேதிமுறைகளை கடந்துதான் சித்த மருந்துகள் உருவாகின்றன. அவற்றைத்தான் நாங்கள் நோயாளிகளுக்கு வழங்குகிறோம்.
எனவே சித்த மருத்துவம் என்பது ஏதோ ஒரு மூலிகையை உணவாக பயன்படுத்தி நோயை நீக்குகின்ற மருத்துவ முறை அல்ல.
ஆக, சித்த மருந்துகள் மூலிகை மருந்துகள்(Herbal Medicine) அல்ல. சித்த மருந்துகள் மூலிகை மற்றும் தாதுப்பொருட்கள் அடங்கிய மருந்துகள்(Herbo mineral).
இவை மட்டுமல்லாது உயிரினங்களிலிருந்தும் மருந்துச் சரக்குகளை பயன்படுத்துகிறது சித்த மருத்துவம்.
siththa maruththuvam7உதாரணமாக ஆமை ஓடு, கிளிஞ்சல், கஸ்தூரி, கடல்வாழ் உயிரினங்கள், உயிரினங்களின் பித்த நீர், பறவைகளின் இறகுகள், முட்டைகள், அவைகளின் ஓடுகள், இரத்தம் போன்றவற்றையும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சித்த மருத்துவத்தின் உண்மை வீரியம் இப்படி கடல் அளவு இருக்கும் பொழுது, கடற்கரையில் கிடக்கும் சிப்பியை மட்டும் பார்த்து இதுதான் கடலில் இருக்கிறது என்பது போல, ஒரு சில மூலிகைகளை மட்டும் கொண்டு செய்யும் மூலிகை மருந்துகளே சித்த மருத்துவம் என்பது போன்ற கருத்துக்களை மாற்றுவதற்கே இந்தக் கட்டுரை.

சனி, 30 டிசம்பர், 2017

'மூலிகைவளம்' இலவச ஈ புத்தகமாக

'மூலிகைவளம்'  இலவச ஈ புத்தகமாக

அன்பர்களே வணக்கம்.
மூலிகைவளம் வலைப்பதிவு பல ஆண்டுகளாக எழுதி வந்தேன். தற்போது எனது இடது கண் குழுக்கோமாவால் தெறிவதில்லை. அதனால் இரண்டு ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதுவதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டேன். இதுவரை எழுதியதை எனது இரு  நண்பர்கள் இலவச ஈ புத்தகமாகத் தயார் செய்துள்ளார்கள். அதை முழுதும் படிக்க விரும்புவோர் கீழ் கண்ட தலைப்பில் பதிவிரக்கம் செய்து பயனடையுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

http://freetamilebooks.com/ebooks/mooligai-valam/


ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “மூலிகை வளம் epub” mooligai-valam.epub – Downloaded 40955 times – 6 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “மூலிகை வளம் mobi” mooligai-valam.mobi – Downloaded 8033 times – 11 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “மூலிகை வளம் A4 PDF” mooligai-valam-A4.pdf – Downloaded 23935 times – 5 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “மூலிகை வளம் 6 inch PDF” mooligai-valam-6-inch.pdf – Downloaded 14725 times – 6 MB




செவ்வாய், 29 செப்டம்பர், 2015

பருத்தி






பருத்தி

மூலிகையின் பெயர் –: பருத்தி..

தாவரவியல் பெயர் -: GOSSYPIUM HERBACEUM.

;தாவரக்குடும்பம் -: .MALVACEA..

பயன்படும் பாகங்கள் -: இலை, மொட்டுகள், பூ மற்றும் விதை.

வளரியல்பு -: பருத்தி கரிசல் நிலத்தில் வளரும் இயல்புடையது. பச்சையான அகலமான இலைகளை மாற்றடுக்கில் கொண்டது. மஞ்சளான பூக்களைக் கொண்ட செடி. இது சுமார் 4அடி முதல் 5 அடி வரை வளரக்கூடியது. . பூக்கள் முற்றி 3 அரை கொண்ட சப்பைகள் உண்டாகி பிஞ்சாக பச்சை நிறத்தில் இருக்கும். பிஞ்சுகள் முற்றி காய்ந்து பருத்திப் பஞ்சாக விரியும். பஞ்சு வெள்ளை நிறமாக இருக்கும்.. இது தமிழகமெங்கும் வளர்கிறது. பஞ்சிலிருந்து கொட்டையைப் பிறித்தெடுத்து எண்ணெய் எடுக்குவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் உபயோகிக்கிறார்கள். மருந்தாகவும் பயன் படுகிறது. பஞ்சிலிருந்து நூல் எடுத்து ஆடைகள் செய்யப் பயன்படுத்திகிறார்கள். இதில் பல ரகங்கள் உண்டு. நீர் பாய்ச்சியும், மானாவாரியாகவும் பயிர் செய்வார்கள். வரலச்சுமி என்ற ரகம் நல்ல மகசூல் கொடுக்கிறது. இது விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் – இது மலமிளக்கி, காமம் பெருக்கி, கோழையகற்றி மேலும் இரத்த கிரஹினி, முழங்கால் வலி, பெண் குறியில் வலி, சிறுநீர்தடை, நீர்ச்சுருக்கு, மாதவிடாய் தடை போன்றவறை குணமாக்க வல்லது.

பருத்துயின் இலை அல்லது மொக்கையாவது கால் பலம் அரைத்து, அரைஆழாக்குப் பசும்பாலில் கரைத்து உண்ணச் சீழ்ப் பிரமேகம், இரத்த பித்த ரோகம், இரண சோபை ஆகியவற்றை நீக்கும்.

இதன் கொழுந்து அதிசார பேதியையும், இதன் இலையைச் சாம்பலாக்கி இரணங்களில் போட ஆறும். பருப்பு லேகியங்களில் சேர்க்கத் தாது விருத்தி உண்டாகும்.

‘பருத்தி பெரும்பாட்டைப் போக்கும்’ –யோகர் நிகண்டு 1500

பருத்தி விதை, அரிசித் திப்பிலி, நெற்பொறி, ஏலக்காய், சர்கரையும், தேனும் மேற்படி சூரணத்துடன் கலந்துண்ண விக்கல், வாந்தி தீரும்.



----------------------------------------------------------------------------------------------------(தொடரும்)

வெள்ளி, 26 ஜூன், 2015

பலா.



 
பலாமரம்
பலா.

மூலிகையின் பெயர் –: பலா.

தாவரவியல் பெயர் –: ARTOCARPUS HETROPHYLLUS.

தாவரவியல் குடும்பம் –: MORACEAE.

பயன்படும் பாகங்கள் –: மரம், பழம், காய், பிஞ்சு, இலை, பிசின், கொட்டை தோல் மற்றும் வேர் முதலியன. 

வேறு பெயர்கள் –: சக்கை, பலவு, பலாசம், வருக்கை மற்றும் ஏகாரவல்லி என்பன.

வகைகள் –: கரிப்பலா, ஆசினிப்பலா, கூழைப்பலா, வருக்கைப்பலா போன்றவை.

வளரியல்பு –: பலா ஒரு மரவகையைச் சார்ந்தது. இதன் பிறப்பிடம் தென் கிழக்கு ஆசியா. வெப்ப நாடுகளில் நன்கு வளரும். இதன் அடிபாகம் 30 - 40 செண்டி மீட்டர் விட்டத்தில் இருக்கும். இது 8 மீட்டர் முதல் 25 மீட்டர் வரை வளரும். இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும், அகலமாக இருக்கும். ஒடித்தால் பால் வரும். இதன் அடிமரத்தில் சிறு கிளை உற்பத்தியாக அதில் பச்சை நிறத்தில் பூக்கள் வரும். பின் மஞ்சளாக மாரும். பூக்கள் தன் மகரந்தச்சேர்க்கையால் பிஞ்சுகள் விட்டுக் காயாக வளரும் வெளித்தோற்றத்தில் முள் போன்ற முனைகள் இருக்கும். உள்ளே நாரும் பலாசுழைகளும் இருக்கும். பலாச்சுழை மஞ்சள் நிறத்தில் இருக்கம். சுவையாக இருக்கும். அதனால் முக்கனிகளில் ஒன்றாகும். நடுவில் தண்டுகள் இருக்கும். சுழைக்குள் கொட்டைகள் இருக்கும். கரிப்பலா பொறியல் செய்யப் பயன்படுத்துவார்கள்.  மேல் கிளைகளிலும் காய்கள் விடும். பலாமரத்திலிருந்து பலவிதமான மரச்சாமான்கள், பொம்மைகள் செய்வார்கள். பலகைகள் சட்டங்கள் அருத்துப் பயன்படுத்துவார்கள். பலாவை வீட்டுத் தோட்டங்களில் வளர்ப்பார்கள். இந்தியா, பிலிப்பன்ஸ், தாய்லந்து மற்றும் இலஙைகை ஆகிய நாடுகளில் காணலாம்.  பலா  மார்ச்சு மாதம் முதல்  செப்டம்பர் மாதங்களில் காய் விடும். ஒரு பலாப்பழத்தின் எடை சுமார்  9 முதல் 18 கிலோ எடை இருக்கும். இது விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

பலாவின் மருத்துவப் பயன்கள் –: பலாப்பழத்தின் பயன்கள். முகநூலிலிருந்து-

ஆஸ்துமாவை குணப்படுத்தும் பலாப்பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படுவதால் நன்மைகள்..?
முக்கனிகளுள் ஒன்றான பலாப்பழம் பல மருத்துவகுணங்கள் கொண்டவை. பலாப்பழத்தை தினமும் சப்பிட்டு வந்தால், கண் பார்வையை சரிசெய்து, புற்று நோய், இரத்த அழுத்தம்,ஆகியவை வராமல் பாதுகாக்கும்.
பலாப்பழம் தினமும் சப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
புரதச்சத்து நிறைந்தது:
பலாப்பழத்தில் புரதச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வாருங்கள். மேலும் இது பருப்பு வகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்கும். இதனால் பருப்புக்களின் மூலம் ஏற்படும் வாய்வுத் தொல்லையைத் தவிர்க்கலாம்.

புற்றுநோயைத் தடுக்கும்:
பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டு ஆகிய அமில சத்துக்கள் உள்ளன. இவை புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும்.

இரத்த அழுத்தத்தை குறைக்கும்:
பலாப்பழத்தில் பொட்டாசிய சத்து அதிகம் இருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.

கண் பார்வையை மேம்படுத்தும்:
பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அவை பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுப்பதோடு, கண்களில் புரை ஏற்படுவதையும் தடுக்கும். முக்கியமாக பலாப்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம் உள்ளது.

ஆஸ்துமாவை குணமாக்கும்:
ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். மேலும், இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், மாலைக்கண் நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மலச்சிக்கல்
பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு இருக்கும்.

புரோட்டீன்
பலாப்பழத்தில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இதனை சீசன் போது தினமும் உட்கொண்டு வாருங்கள். மேலும் இது பருப்பு வகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்கும். இதனால் பருப்புக்களின் மூலம் ஏற்படும் வாய்வுத் தொல்லையைத் தவிர்க்கலாம்.

நோயெதிர்ப்பு சக்தி
பலாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் காய்ச்சல், சளி போன்றவை தாக்காமல் தடுக்கலாம்.

ஆற்றல்
பலாப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் இருக்கிறது. மேலும் இதில் உடலின் ஆற்றலை அதிகரிக்கும். சிம்பிள் சர்க்கரையான ஃப்ருக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் அதிகம் உள்ளது.

புற்றுநோயைத் தடுக்கும்
பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் உள்ளது. இவை புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

இரத்த அழுத்தம்
பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.

செரிமானம்
பலாப்பழத்தில் நார்ச்சத்து வளமாக நிறைந்திருப்பதால், அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கும்.

குடல் புற்றுநோய்
பலாப்பழத்தில் டயட்டரி கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குடல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

பார்வையை மேம்படுத்தும்
பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அவை பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுப்பதோடு, கண்களில் புரை ஏற்படுவதையும் தடுக்கும். முக்கியமாக பலாப்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.

சரும ஆரோக்கியம்
தற்போது விரைவிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் பலாப்பழத்தை உட்கொண்டு வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுத்து, சருமத்தை இளமையோடு பாதுகாக்கலாம்.

ஆஸ்துமா
ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.

எலும்புகளின் ஆரோக்கியம்
பலாப்பழத்தில் உள்ள கால்சியம், எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, எலும்புகளை வலிமையோடும் வைத்துக் கொள்ளும். இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நாள்பட்ட மூட்டுவலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

இரத்த சோகை
பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே, நியாசின், வைட்டமின் பி6, ஃபோலேட், பேன்டோதெனிக் ஆசிட், காப்பர், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் அதிகம் இருப்பதால், அவை இரத்தம் உருவாக உதவும். மேலும் இப்பழம் உடலானது இரும்புச்சத்தை உறிஞ்சி, இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.

சளி மற்றும் நோய்த்தொற்றுகள்
பலாப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்ளும் போது, சளி மற்றும் நோய்த்தொற்றுகள் தாக்குவது தடுக்கப்படும். மேலும் ஒரு கப் பலாப்பழத்தில் உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைத்து, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும்.

இரத்த சர்க்கரை அளவு
உடலில் மாங்கனீசு குறைபாட்டினால் ஏற்படுவது தான் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவது. ஆனால் இந்த சத்து பலாப்பழத்தில் அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளலாம்.

தைராய்டு
தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு காப்பர் மிகவும் முக்கியமான ஒன்று. உடலில் காப்பர் குறைபாடு ஏற்பட்டால், அது தைராய்டு சுரப்பியில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். இத்தகைய காப்பர் பலாப்பழத்தில் இருப்பதால், தைராய்டு இருப்பவர்கள், இதனை உட்கொள்வது நல்லது.

மாலைக்கண் நோய்
பலாப்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ உள்ளது. ஆகவே இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், மாலைக்கண் நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

இதய நோய்
பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6, இரத்தத்தில் ஹோமோசிஸ்டின் அளவை குறைத்து, இதயத்தை சீராகவும் ஆரோக்கியமாகவும் செயல்பட உதவும்.

அல்சர்
அல்சர் இருப்பவர்கள், பலாப்பழத்தை உட்கொண்டு வந்தால், அல்சர் குணமாவதுடன், வயிற்றுப் பிரச்சனைகளும் நீங்கும்.

சரும சுருக்கம்
பலாப்பழத்தின் விதையை பாலில் சிறிது நேரம்
ஊற வைத்து, பின் அதனை அரைத்து முகத்தில் தடவி மாஸ்க் போட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், ஆறே வாரங்களில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

கூந்தல் வளர்ச்சி
பலாப்பழத்தின் விதைக்கு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆகவே இதன் விதையை சமைத்து சாப்பிட்டு வந்தால், தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் சீராக இருந்து, இதனால் தலையில் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

பட்டுப்போன்ற சருமம்
நல்ல பட்டுப் போன்ற சருமத்தைப் பெற, பலாப்பழத்தின் விதையை உலர வைத்து, அதனை பால் மற்றும் தேனுடன் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, உலர வைத்து கழுவி வேண்டும். இப்படி செய்து வந்தால் பட்டுப் போன்ற சருமத்தைப் பெறலாம்.

வைட்டமின் ஏ
பலாப்பழத்தின விதையில் உள்ள வைட்டமின் ஏ, முடிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. முக்கியமாக முடியின் ஆரோக்கியத்தையும், முடியில் ஏற்படும் வறட்சியையும் தடுக்கும்.

-------------------------------------------------------------------------(தொடரும்)
பலாச்சுழை.                                                                                              
பலாக்கொட்டை.