வெள்ளி, 29 மே, 2015

சிவனார் வேம்பு.





சிவனார் வேம்பு

மூலிகையின் பெயர் -: சிவனார் வேம்பு.

தாவரவியல் பெயர் -: INDIGOFERA.

தாவரவியல் குடும்பம் -: PAPILIONACEAE. (FABACEAE)

பயன்படும் பாகங்கள் -: செடி முழுதும் மருத்துவப் பயனுடையது.

வேறு பெயர்கள் -: அன்றெரித்தான் பூண்டு, குறைவின் வேம்பு போன்றவை.

வளரியல்பு -: சிவனார் வேம்பு என்னும் மூலிகைச் செடி ஒரு வருடாந்திர வளர்ச்சிச் செடி. இதில்  750 வகைகள் உள்ளன. அவை வளர்வதிலும், பூக்களிலும் வேறு பாடு உள்ளன.  இதன் இலைகள் சிறிதாகவும் முட்டை வடிவிலும் இருக்கும்.  பூக்கள் சிவப்பு நிறத்திலு இருக்கும். கொத்தான காய்களையும், சிவப்பு நிற தண்டினையும் உடைய மிக சிறு செடி. இது செம்மண் நிலத்தில் நன்கு வளரும். தமிழகமெங்கும் காணப்படும். செடி பிடுங்கிய உடனே உலர்ந்தது போல எரியும் தன்மையுடையதாகையால் அன்றெரித்தான் பூண்டு என நாட்டுப் புறத்தில் குறிப்பிடுவதுண்டு. இது விதை மூலம் இன விருத்தி செய்யப் படுகிறது.

சிவனார் வேம்பின் மருத்துவப் பயன்கள் - இது தாது எரிச்சல் தணித்தல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், நஞ்சு முறித்தல் குடல்புண் குணமாக்குதல் ஆகியவை குணமாக்க வல்லது. அகத்தியரும் அவர் பாடலில் இதன் பலன் பற்றிக் கூறியுள்ளார்.

செடியை வேருடன் உலர்த்திப் பொடித்துச் சமன் கற்கண்டுத் தூள் கலந்து ஒரு தெக்கரண்டிப் பாலில் சாப்பிட்டு வர ஆயுளை நீட்டிப்பதோடு தொழு நோய் போன்ற கடும் நோய்களையும் குணப்படுத்தும்.

செடியைச் சுட்டுச் சாம்பலாக்கித் தேங்காயெண்ணையில் குழைத்துத் தடவி வரச் சொறி, சிரங்கு, கபாலக் கரப்பான் ஆகியவை தீரும்.

இலையை அரைத்துப் பற்றிடக் கட்டிகள் உடைத்துக் கொள்ளும் அல்லது அமுக்கி விடும்.

இதன் வேரால் பல் துலக்கவோ மென்று துப்பவோ செய்தால் வாய்புண், பல் வலி ஆகியவை தீரும்.



இதன் சமூலத்தை வெண்ணெய் கூட்டி மெழுகுபோல் அரைத்து நீர் சம்பந்தமான புரைக்குழலுக்கு (கிரந்தி கட்டுக்கு) மேற்றடவி வரக்கரைந்துபோம்.
இதைச் சுட்டுச் சாம்பலாக்கித் தேங்காய் எண்ணெயிற் குழைத்துத் தலையில் உள்ள சிரங்குகளுக்குத் தடவ ஆறும்.



-------------------------------------------------------------------------(தொடரும்)