வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

கிணற்றடிப்பூண்டு






மூலிகையின்பெயர் –:கிணற்றடிப்பூண்டு..

தாவரவியல்பெயர் –:  TRIDAX PROCUMBENS.

தாவரவியல்குடும்பம்COMPOSITAE.

மருந்தாகும்பாகங்கள்இலைகள், செடிமுழுதும்.

வேறுபெயர்கள்கிணற்றுப்பாசான், வெட்டுக்காயபச்சிலை, செருப்படித்தழை, மூக்குத்ததிப்பூண்டு, காயப்பச்சில்லை முதலியன.

ஆங்கிலப்பெயர்கள்COAT BUTTONS, TRIDAX DAISY.முதலியன.

வளரியல்பு- கிணற்றடிப்பூண்டு எல்லாவித வளமான மண்ணில் வளரும் ஒரு சிறு செடி. 
இதன் தாயகம் மத்திய அமரிக்கா.பற்களுள்ள சற்று நீண்ட தடிப்பான
சொரசொரப்பான பச்சை இலைகளையும், மஞ்சள் நிறப் பூக்களையும் உடைய சிறு செடி .ஈரமான இடங்களில் தானே
வளரும் தன்மையுடையது .இலையின் நீளம் 3-6 1.5-3 செ.மீ.தண்டு 5 -10  எம்.எம்.நீளம், பூவின்விட்டம் 1.3  1.5 செ.மீ. பூவின் இதழ்கள் 5.நடுவில் வெண்மையாகஇருக்கும். இது தன்மகரந்தச் சேர்க்கையால்
விதை உண்டாகும். ஒரு செடியில் 1500 விதைகள் இருக்கும் அவை காற்றில் பரவி ஒட்டிக் கொள்ளும்.
இது சாலை யோரங்களில், தரிசு நிலங்களில், தோட்டங்கள், புல்வெளிகள் எங்கும்  பரவி வளரும். சீதோஸ்ண, மிதசீதோஸ்ண வெப்பத்தில் வளரக்கூடியது. உலகெங்கும்பரவியுள்ளது.
லேசான பஞ்சுபோன்ற விதைகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

கிணற்றடிப்பூண்டின் மருத்துவப்பயன்கள்இது புண்ணாற்றும், ,குறுதியடக்கி, கபநிவாரணி .மூச்சுக்குழாய்ச்சிரை, மூக்கடைப்பு, தடுமல், நீர்கோப்பு, வயிற்றுப்போக்கு, பேதிமுதலியவை குணமாகும்.


இலையை நீர்விடாது அரைத்து வெட்டுக்காயம், சிராய்ப்பு ஆகியவிற்றில் பற்றிடச் சீழ் பிடிக்காமல் விரைந்து ஆறும்.

கிணற்றுப்பூண்டின் இலைச்சாறும்,   குப்பைமேனி இலைச்சாறும் மருத்துவரின் அலோசனைப்படி கலந்து குடித்தால் நஞ்சு முறிவு ஏற்படும் .மேலும் வயிற்றுக் கோளாருகள் தீரும்
 (தொடரும்.)