செவ்வாய், 30 டிசம்பர், 2014

துவரை.


துவரை
துவரை.

மூலிகையன் பெயர் –: துவரை.

 தாவரவியல் பெயர் –; CAJANUS INDICUS.
தாவரக்குடும்பம். –; FABACEAE.
பயன் தரும் பாகங்கள் –; இலை, காய், துவரம்பருப்பு, பொட்டு, வேர் இழம் தழிர் மற்றும் அதன் தடிபாகம் முதலியன.
வகைகள் –: வம்பன்-2 மற்றும் வம்பன்-3 என்பன.

வளரியல்பு –; துவரை ஒரு மீட்டர் முதல் 4 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய சிறு மரம் மற்றும் பெரிய செடி. இது 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதன் தாயகம் வட ஆசியா. இதை உணவு தானியமாகப் பயிரிட்டனர். ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லேட்டின் அமரிக்கா போன்ற நாடுகளில். துவரைக்கு ஆங்கிலத்ததில் PIGEON PEA, KARDIS, GANDULEBEAN, TROPICAL GREEN PEA, KADIOS, CONGO PEA, GUNGO PEA, TOOR DAL, ARHAR DAL, RED GRAM, YELLOW HAHL. என்று அழைப்பார்கள். இதற்கு வருட மழையளவு 650 எம்.எம். வரை தேவைப் படும். இது 3 ஆண்டுப் பயிராகவும், ஒரு வருடப் பயிராகவும் இருக்கும். இதற்கு பி.எச்- 5 முதல் 7 வரை மண் வளம் இருக்க வேண்டும். 5 க்குக் குறைவாக இருந்தால் வளராது.இதற்கு சீதோஸ்ண நிலை 18 – 30 டிகிரி சிலிசியஸ் இருக்க வேண்டும். விதைத்த 180 முதல் 250 நாட்களில் பலன் தரக்கூடியது. இதை உழுந்து, வேர்கடலை, பருத்தி, பச்சைப் பயிர் போன்ற பயிர்களில் ஊடு பயிராக சால் விட்டுப் பயிரிடுவார்கள்.  ஒரு ஏக்கருக்கு 500 கிலோவரை பலன் கொடுக்கக்கூடியது. ஒரு கிலோவில் 16000 – 18000 விதைகள் இருக்கும். இதன் கிளைகள் அதிகமாக வரும். பூ மஞ்சள் நிறத்தில் மற்றும் ஊதா, சிவப்பு இதழ்கள் இருக்கும். காய்கள் கொத்தாக விடும்.

வம்பன் 2180 ஆடிப் பட்டத்திலும், வம்பன் 2110 வகை ஆடி, புரட்டாசி மற்றும் மாசிப் பட்டத்திற்கு ஏற்றது. ஒரு ஏக்கருக்கு 2,5 கிலோ விதை தேவைப் படும். இதைத் தண்ணீர் விட்டுப் பயிர் செய்வதானால் நாற்று விட்டு ஒரு மாதம் கழித்து எடுத்து நட வேண்டும்..ஆறு மாதத்தில் பூக்க ஆரம்பிக்கும். அப்பொழுது நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  காய்கள் முற்றிய பின் ஒரு அடி விட்டு வெட்டி அவைகளை வெய்யிலில் காயவைத்து நன்றாகக் காய்ந்த பின் அடித்து துவரையைத் தனியாக எடுக்க வேண்டும். மேலும் அதை இருப்பு வைக்கும் முன்பு பூச்சிகள் வராமல் இருக்க மருந்து தெளிக்க வேண்டும். துவரை காய்ந்த பின் உடைத்ததெடுத்தால் துவரும் பருப்பாகும். இதில் அதிக புரத சத்துள்ளது. இது உணவில் அதிகம் பயன் படுத்துப் படுகிறது. துவரை விளையும் நாடுகள் ஆசியாவில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், பூட்டான், இந்தியா மற்றும் இலங்கை. ஆப்பிரிக்காவில் எத்தோப்பியா, கென்யா, மாளவி, டான்ஜானியா மற்றும் உகாண்டா போன்றவை. உலக உற்பத்தியில் 82 விழுக்காடு இந்தியாவில் விளைவிக்கப் படுகிறது. மேற்கு ஆப்பிருக்காவில் துவரைச் செடியின் இலைகளை கால்நடை தீவனமாகப் பயன்படுத்துகிறார்கள். இத்தோப்பிய்யாவில் இதன் தளிர் கொழுந்தை சமைத்து உணவாகச் சாப்பிடுகிறார்கள். துவரையை காப்பபி மற்றும் மஞ்சள் போன்ற வற்றிக்கு நிழலாகவும் வளர்க்கிறார்கள். துவரை விதை மூலம் இன விருத்தி செய்யப் படுகிறது.


துவரையின் மருத்துவப் பயன்கள் –: துவரைப் பருப்பில் அதிக சத்துக்கள் இருப்பதால் பண்டைகாலந்தொட்டு இதன் பருப்பை சமைத்துக்கடைந்து அதனுடன் மாட்டு நெய் சேர்த்துக் குழந்தைகளுக்கும் மெலிந்தவர்களுக்கும் கொடுப்பது

பழக்கமாகக் கொண்டுள்ளனர். துவரையை அடித்துப் பிரிக்கும் போது அதன் பொட்டுகளை ஆட்டுத் தீவனமாகவும், மாடுகளுக்குப் பால் கொடுப்பதை அதிகரிக்கவும் இதைக் கொடுப்பார்கள்.


பஞ்சமுட்டிக் காகுமரும் பத்தியவீ யஞ்சனமாம்

விச்சுரஞ் சந்நிகட்கு மெத்த நன்றாம் பஞ்சின்

விழுத்துவரை யாது மெலிந்தாரைத் தேற்றுங்

கொழுத்துவரை யாயினீகொள்.”


குணம் –: துவரம் பருப்பை வெண்ணெயிலிட்டுச் சமைத்து போசன முதலில் பசுவின் நெய்யுடன் அன்னத்திற் கலந்துண்ணப் பிடிக்கும் பிடி சதை வளரும். இரைப்பைக்கும் உடலிற்கும் பலத்தைக் கொடுக்கும்.


பத்தியப் பதார்த்தங்களில் சிறந்த உணவாக இதைக் கருதலாம். சக்தியில்லாமல் மிக மெலிந்தவர்களுக்கு இது பயன் படும்.


துவரை இலைகள் மிளகோடு சேர்த்துப் பல்லீறுகளைச் சுத்தப் படுத்துவும், பல் வலிக்கும் பயன் படும்.


இவ்விலைகளை அரைத்து முலைக்குப் பூச பால் சுரப்பது நிற்கும்.  

சாம்பசிவம் அகராதி.


முத்துக்குமார் அம்பாசமுத்திரம்- மிக்க நன்றி.

மூலத்தை ஓட ஓட விரட்டும் துவரை..!

மூலத்தை துரத்தும் துவரை வேர் நாம் உண்ணும் உணவு உணவுப்பாதையில் சீரணிக்கப்பட்டு திடக்கழிவாக மலவாசலில் வெளியேறாவிட்டால் பல உபாதைகள் தோன்ற ஆரம்பித்துவிடும் . இதற்காக மிகவும் பிரயத்தனம் செய்து மலம் கழிக்க முயற்சிக்கும்போது மலவாயிலில் வலி மற்றும் புண்கள் தோன்றலாம். இதே நிலை நீடிக்கும்பொழுது மலப்பாதையில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு மலம் கழிக்க சிரமம் உண்டாவதுடன் ஆசனவாயின் வெளிப்புறம் அல்லது உட்புறத்தில் சிறுசிறு கட்டிகளோ அல்லது வீக்கமோ தோன்றி மூலநோயாக மாறிவிடுகிறது.

குறைந்தளவே தண்ணீர் அருந்துபவர்கள், அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள், நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்கள், வாயுவை பெருக்கக்கூடிய பதார்த்தங்களை அதிகம் உட்கொள்பவர்கள், கடுமையான மலச்சிக்கல் உள்ளவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் மூலநோய்க்கு ஆட்படுகிறார்கள். பரம்பரையாகவும் மூலநோய் ஏற்படுகிறது. இவர்களுக்கு ஆசனவாய் பகுதியில் கிருமிகள் தங்கி வளருவதால் ஆசனவாயில் அரிப்பு உண்டாகி, சில நேரங்களில் மூலம் முற்றிப்போய் ரத்தமும், சீழும் மலத்துடன் கலந்து வெளியேற ஆரம்பிக்கிறது. பலருக்கு இதன் ஆரம்ப அறிகுறி தெரியாமல், நோய் அதிகரித்த பின்பே பலவித உபாதைகள் தோன்றுகின்றன. மூலநோய் உள்ளவர்கள் வாயுவை பெருக்கக்கூடிய கிழங்கு வகைகள், பயறு வகைகள், கொழுப்பு சத்துள்ள உணவுகள், அசைவம், காரம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பதுடன், நீண்ட நேரம் அமர்ந்திருப்பதையும், அதிக எடை தூக்குவதையும், வாகன பிரயாணம் செய்வதையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

எளிதில் செரிக்கக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள், பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். சாதாரண மூலம்தானே என்று அலட்சியம் காட்டினால் அது பவுத்திரமாகவும், ஆசனவாய் அடித்தள்ளலாகவும் மாறிவிடுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் துவரையின் வேரில் ஏராளமான மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன. கஜானஸ் கஜன் என்ற தாவரவியல் பெயர் கொண்ட பேபேசியே குடும்பத்தைச் சார்ந்த துவரைப் பயிர்கள் உணவுப்பயிராக சாகுபடி செய்யப்படுகின்றன. சாணபுஷ்பிகம் என்ற சமஸ்கிருத பெயர் கொண்ட துவரையின் வேரில் பெனில் அலனின், ஐசோபுளோவின், ஐசோபுளோவோன், ஸ்டீரால், ஆன்த்ரோகுயினோன், டிரைடெர்பினாய்டு மற்றும் கஜானால் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன. இவை மெல்லிய சதைப்பகுதிகளில் ஏற்படும் வீக்கம், கொப்பளம், கட்டி போன்றவற்றை கரைத்து அங்கு தேங்கிய ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன.

துவரை வேரை நிழலில் உலர்த்தி முடிந்தளவு பட்டையை உரித்து, நன்கு பொடித்து, சலித்து 1 முதல் 2 கிராம் அளவு தினமும் இரண்டு வேளை தேன் அல்லது வெண்ணெயுடன் கலந்து சாப்பிட, ஆசனவாய் பகுதியில் தோன்றிய வீக்கம் மற்றும் சதை வளர்ச்சி நீங்கும். துவரம் பருப்பிலும் இந்த வேதிச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அன்றாட உணவில் நன்கு வேகவைத்து உட்கொண்டு வந்தால் மலவாய் பகுதியில் தோன்றிய வீக்கம் நீங்கும்..
-தொடரும்.
.துவரை செடியுடன் காய்ந்தது
Add caption