மூலிகையின் பெயர்
–: மணத்தக்காளி.
தாவரவியல் பெயர்
–: SOLANUM NIGRUM
தாவரவியல் குடும்பம்
–: SOLANACEAE.
வேறு பெயர்கள்
–: மணித்தக்காளி, மிளகுத்தக்காளி, உலகமாதா, சிறுன்குன்னி போன்றவை.
பயன்படும் உறுப்பு
–: இலை, வேர், காய் மற்றும் பழம்.
வளரியல்பு –: மணத்தக்காளி
செடி வகையைச் சேர்த்தது. இது சுமார் 40 செ.மீ. உயரம் வரை வளரும். அதே அளவு பரவலாக அடர்த்தியாகப்
படரும். சற்று மணற்பாங்கான நிலம், குப்பை, எரு கலந்த மண், குளிர்ச்சியான பகுதிகளில்
தான் இது செழித்து வளரும். இதன் இலைக் காம்பிலிருந்து சிறு நரம்பு வளர்ந்து அதில் கொத்துக்
கொத்தாக மொக்கு விட்டு மலர்ந்து காய்க்கும். இதன் பூ கத்திரிப் பூவைப் போல நான்கு இதழ்களுடன்
கூடியதாக மிகச்சிறிய அளவில் வெண்ணிறமாக இருக்கும். நடுவில் சிறிய மகரந்தத் தண்டு இருக்கும்.
இதன் காய் மிளகு அளவில் மிளகுக்காய் போலவே இருக்கும். இக்காய்கள் காய்த்துக் கருநிறமாகப்
பழுக்கும். இந்தப் பழம் இனிப்பாக ருசியாக இருக்கும். இதனுள் கத்திரி விதை போல மிகச்சிறிய
விதைகளிருக்கும். இதை ஒரு சிலர் விரும்பிச் சாப்பிடுவார்கள். இது விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது. இதற்கு
ஆங்கிலத்தில் APPLE OF SODOM, BLACK NIGHTSHADE, POISON BERRY etc.,
மணத்தக்காளியின்
மருத்துவப் பயன்கள் –: மணத்தக்காளி வியர்வையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை
அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது.
மணத்தக்காளி இலையை
இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வர உட்சூடு, வாய்புண்,
முதலியவை நீங்கும். சிறுநீரை வெளியேற்றும். தேகம் குளிர்ச்சியாகும். உடல் வசீகரம் ஏற்படும்.
மணத்தக்காளி இலையை
வதக்கி வலியுடன் கூடிய விரை வீக்கத்திற்கு இளஞ்சூட்டுடன் வைத்துக் கட்டி வர நன்மை பயக்கும்.
மணத்தக்காளிக்கீரையை
தினந்தோறும் பருப்புடன் கலந்து சமைத்து உண்டு வரலாம். மலக்கட்டை நீக்கும். நெஞ்சில்
கட்டியுள்ள கோழையை அகற்றி வாத ரோகங்களை நீக்கும்.
மணத்தக்காளி வற்றலுக்கு
சுவையின்மையை நீக்கி பசியைத் தூண்டும் குணம் உண்டு. மணத்தக்காளிக் காய்களைப் பறித்து
சுத்தம் செய்து, மோருடன் சிறிது உப்பு சேர்த்து வெயிலில் நன்கு உலர்த்தி எடுத்து வைத்துக்
கொள்வதே மணத்தக்காளி வற்றல். இதனை எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து சோற்றுடன் கலந்து
சிறிது நெய் சேர்த்து உண்டு வந்தால் மலர்ச்சிக்கல், வயிற்றில் கிருமியினால் உண்டாகும்
தொந்தரவுகள் விடுபடும். ஆஸ்த்துமா, நீரிழிவு, காசம் முதலிய நோய் உடையவர்கள், மெலிந்த
உடலினை உடையவர்கள் அனைவருக்கும் இது சிறந்தது.
நீர்க்கோவை, நீர்ச்சுருக்கு
முதலியவற்ற்றிற்கு இதன் வற்றலை 135 கிராம் எடுத்து 700 மி.லி. வெந்நீரில் ஊறவைத்து
ஒரு மணி நேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் அதனை இறுத்து 35 மி.லி. அருந்தி வருவது
நல்லது.
மணத்தக்காளி இலையிலிருந்து
தயாரிக்கப்படும் தைலம் இருமல், இரைப்பு முதலிய நோய்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.
சமையலில் மணத்தக்காளி
கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். மணத்தக்காளி
இலையைக் கீரை போல் கடைந்து உண்டு வர, அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும்
குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு.
மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும்
செய்து உண்டு வந்தால் நோய்கள் நீங்கி உடல் வன்மை பெறும்.
மணத்தக்காளியிலையைக்
கொண்டு வந்து ஆய்ந்து, கீரை உள்ள அளவில் பாதியளவு பச்சைப் பருப்பு என்ற பாசிப் பருப்பைச்
சேர்த்துக் கூட்டு வைத்து அல்லது கடைந்து பகல் சாதத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட்டு
வந்தால் மூலத்தில் இரத்தம் வருவது நின்றுவிடும்.
மணத்தக்காளிக்
கீரையுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு, வெகவைத்து தண்ணீரை இறுத்துக் குடித்து விட வேண்டும். பிறகு
கீரையை உப்பு சேர்த்துத் தாளித்து பகல் உணவுடன் சேர்த்து ஐந்து நாட்கள் சாப்பிட வயிற்றுப்
புண் ஆறிவுடும்.
மணத்தக்காளியிலைச்சாறு,
வல்லாரை இலைச்சாறு, தேன் மூன்றிலும் ஒரு தேக்கரண்டி எடுத்து தினசரி காலை, பகல் மாலையாக
மூன்று வேளையும் காமாலை நோய் தீரும் வரை கொடுக்க வேண்டும்.
மணத்தக்காளி-காய் மற்றும் பழம். |
ஆயுர்வேதம் ஜூன்
2012 ல் பதிவானவை – நன்றி.
வாய்ப்புண்ணா? மணத்தக்காளி கீரையை வாயில் போட்டு மென்று
துப்புங்கள் எனும் பாட்டி வைத்தியம் இன்றும் பலன் தரும். மணத்தக்காளியில் இலைகள்
மட்டுமல்ல, இதன் காய்களும் பலன் தருபவை. மணத்தக்காளி ஒரு
மீட்டர் உயரம் வளரும் செடி. இலைகள் பச்சை நிறமாகவும், பூக்கள் வெள்ளை நிறமாகவும் இருக்கும். காய்கள் முதலில் பச்சை நிறமாகவும், பின்பு சிவப்பாகி கருமையாகும். காய்கள் கருமிளகு போல் இருப்பதால் இது மிளகு
தக்காளி என்றும் அழைக்கப்படும்.
தாவிரவியல் விவரங்கள்
தாவிரவியல் பெயர் - Solanum
Nigram
குடும்பம் - - Solanaceae
ஆங்கிலம் - Black Night Shade,
சமஸ்கிருதம் -
காஹமாச்சி உபயோகப்படும் பாகங்கள் - சமூலம்
கீரையின் பொதுத் தன்மைகள்
உடல் தேற்றி, சிறுநீர் பெருக்கி, வியர்வைப் பெருக்கி, கோழை அகற்றி.
மருத்துவப் பயன்கள்
வாய்ப்புண், வயிற்றுப்புண்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது
மணத்தக்காளிக்கீரை. கையளவு கீரையை எடுத்து வாயில் போட்டு மெல்ல வாய்ப்புண்கள், நாக்குப் புண்கள் ஆறும். உடலுறுப்புகளில் வேறெங்கும் புண் இருந்தால் அவையும்
குணமாகும்.
வெறும் கீரையை உண்டாலே வாய்ப்புண்கள் ஆறும்.
சிறிது மஞ்சள் பொடியை சேர்த்து கீரையை வேக வைத்து உண்டால் புண்கள் சீக்கிரம்
ஆறும். குடல் புண்களையும், மணத்தக்காளி ஆற்றும். வாய்ப்புண், நாக்குப்புண், வாய்வேக்காடு, குடல் புண் போன்றவற்றுக்கு மணத்தக்காளிகீரை
கண்கண்ட மருந்தாகும். வாய் வெந்திருக்கும் போது மணத்தக்காளி + சிறிது சீரகம் + ஒரு
மிளகாய் வற்றல் சேர்த்து, எண்ணெய்யில் வதக்கி, தண்ணீர் சேர்த்து வேக வைத்து, பிறகு அதில் தேங்காய்ப்பால் சேர்த்து வேக
வைத்து உண்டால் வாய்ப்புண் உடனே குணமாகும்.
காய், கீரை இரண்டையும் உணவில் சேர்த்துக் கொண்டால்
உடல் காங்கை (சூடு) தணியும். உடல் குளிர்ச்சியடையும்.
ஒரு கைப்பிடி அளவு கீரையுடன் ஒரு ஸ்பூன்
பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து
கஷாயமாக செய்து குடித்து வர சிறுநீர் நன்கு பிரியும். நீர்க்கடுப்பு, எரிச்சல் குணமாகும்.
இலைச்சாற்றை வெளிப்புண்கள் மேல் தடவினாலும்
ஆறிவிடும்.
இலைச்சாற்றை சருமம், தேமல், சொறி சிரங்கு இருக்கும் இடத்தில் தடவினால்
அவை மறையும்.
மணத்தக்காளி இலைச்சாற்றுடன் பால் சேர்த்து
குடித்து வர, காமாலை குணமாகும்.
உடல் இளைத்திருப்பவர்கள் மணத்தக்காளி
சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட உடல் பருக்கும்.
வாத நோய்கள் குணமாக, மணத்தக்காளி கீரையை உப்பு போட்டு சமைத்து சாப்பிட வேண்டும். கப நோய்களுக்கும்
நல்ல மருந்தாகும். கப நோய்கள் தீர, ஒரு கைப்பிடி மணத்தக்காளிக்கீரையை எடுத்து 10 மிளகு, 3 திப்பிலி, 4 சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து விழுதாக அரைத்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் தணியும்.
மணத்தக்காளிக்கீரை மலச்சிக்கலை போக்கும்.
உடல் எடை குறைய, மணத்தக்காளி கீரையை 100 கிராம் எடுத்து கொதிக்கும் நீரில் 5 (அ) 10 நிமிடம் போட்டு எடுத்து 2 வெங்காயம் (அரிந்தது) + பாதி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கஷாயம்
தயாரிக்கவும். இதை காலை உணவுக்கு பின் சாப்பிட்டால் அதிஸ்தூலம் (அதிக உடல் பருமன்)
குறையும்.
மணத்தக்காளிப்பழம் கர்ப்பிணிகளுக்கு நல்லது.
கருவை வலிமையாக்கும்.
மணத்தக்காளி செடியை இலை, காய், பழம் இவற்றுடன் சேர்த்து இடித்து
பிழிந்தெடுத்த சாறு கல்லீரல் வீக்கம், கணைய வீக்கம் ஆகியவற்றுக்கு சிறந்த
மருந்தாகும்
ஆயுர்வேதம் ஜூன் 2012
---------------------------------------------------(தொடரும்)