புதன், 30 ஜூலை, 2014

மாசிபத்திரி.


 
மாசிபத்திரி.

மூலிகையின்பெயர் –: மாசிபத்திரி.

தாவரவியல்பெயர் –: ARTEMISA ABSINTHIUM.

தாவரக்குடும்பம். –:  ASTERACEAE.

ஆங்கிலப்பெயர் -:  WORMWOOD.

பயன்படும் பாகங்கள் –:  இலை, பூ கிளைகள்.

வேறுபெயர் –:  மாசிப்பச்சை.

வளரியல்பு -: மாசிபத்திரி எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு மூலிகைச்செடி. இது வெப்ப நாடுக்களில் வளரும் மூலிகை. இதன் தாயகம் வடஆப்பிரிக்கா. இது மருத்துவ குணமுடையது. இது அதிகமான வேர்கள் இருக்கும். இது நேராக இரண்டரை அடி முதல் மூன்றரை அடி உயரம் வளரக்கூடியது. கிளைகளுடன் சாம்பல் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். இலைகள் மேற்பக்கம் பச்சையாகவும் கீழ்ப்பக்கம் வெண்மையாகவும் இருக்கும். இலைகள் 25 செ.மீ. நீளம் வரை இருக்கும். பூக்கள் வெளிர்மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய் சிறிதாக முற்றி கீழே விழுந்து விடும். மாசிபத்திரி தரிசு நிலங்களில் தானே வளரும் .மலைச்சரிவுகளில் பாறைகளின் இடுக்குகளில் காணப்படும். இது வயல் வெளிகளிலும் வரப்புகளிலும் காணப்படும். இது வடஅமரிக்கா மற்றும் இந்தியாவில் காஸ்மீர் பள்ளத்தாகிகிலும் அதிகம் காணப்படும். இது கட்டிங் மூலமும் விதைகள் மூலமும் இனவிருத்தி செய்யப்படும்.

மாசிபத்திரியின் மருத்துவப்பயன்கள்  –:  இது கார்ப்பு, கசப்புச்சுவைகள், எண்ணெய் பசையூட்டுதல், மலமிளக்கி , நறுமணம்கொண்டது,  இது பித்தம், விரணம், வாதம், குட்டம் கிரிமிநோய், சதராக்னிகுறைவு, கை கால்வலி, மூர்ச்சை, கல்லீரல்வீக்கம், உணவைச் செரிக்கும், உறுப்புகளுக்கு உரமேற்றும். இது மதுபானங்கள் மற்றும் வொயினில்மணத்திற்காக சேர்ப்பார்கள். இது காச்சல், ஈரல் நோய்கள்,  காயங்கள், பூச்சிக்கடி நோய்கள் வாயு உபாதைகளை  போக்கும்இதன் பொடி மற்றும் எண்ணையைப் பயன்படுத்துவார்கள். இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் நரம்புமண்டலத்தைத் தூண்டக்கூடியது, ஆண்மையைத் தூண்டும். ஆனால் இதை உட்கொள்ளும் போது தக்க மருத்துவரின் ஆலோசனைப்படிதான் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பக்கவிளைவுகள் ஏற்படும். அவை வாந்தி,  சதைப்பிடிப்பு, வலிப்பு, வாதம், கிட்னிபாதிப்புப் போன்றவையாகும்..

மாசிபத்திரியன் இலையை காயவைத்து அதை டீத்தூள் போல் பொடி செய்து பிறசவ வேதனையில் இருக்கும் பெண்களுக்கு டீபோட்டுக் கொடுத்தால் வலிகுறையும்.  மாசிபத்திரி எண்ணெய் மேல் பூச்சாக நெஞ்சில் பூசினால் நெஞ்சு எரிச்சல் நீங்கும். இதில் செய்யப்பட்ட கழும்பை மூட்டுவலிக்கும்,  தசைப் பிடிப்புகளுக்கும் தடவினால் குணமாகும்.

------------------------------------------------------------------------------------------(தொடரும்)