சித்தாமுட்டி.
மூலிகையின் பெயர் :– சித்தாமுட்டி.
தாவரப்பெயர் :– PAVONIA ZEYLANICA.
தாவரக்குடும்பம் :- MALVACEAE.
பயன்தரும் பாகங்கள் – செடிமுழுதும்.
வேறு பெயர்கள் :– சேங்கன். மம்மட்டி,
தெங்கைப் பூண்டு. போன்றவை.
வளரியல்பு :– சித்தாமுட்டி மணல் கலந்த
பாறையுள்ள இடங்களில் நன்கு வளரும். காடுகளில் புதர்கள் அதிகமாக உள்ள இடங்களில்
அதிகம் காணப்படும். இது நேராக வளரும் செடி. தரிசு நிலங்களிலும், வேலியோரங்களிலும்
சாதாரணமாகக் காணப்படும். இதன் இலைகள் ஓரங்களில் பல்லுள்ளவை. எதிர் அடுக்கில்
அமைந்திருக்கும். சுமார் மூன்று அடி உயரம் வரை வளரக்கூடியது. பூக்கள் சிறிதாக 5
இதழ்களுடன் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூக்கள் தனியாக இருக்கும் 7 எம்.எம். நீளம். வெளிநாடுகளிலு பின்க்
நிறத்திலும் கூட இருக்கும். இலைகள் 2.5 x 3
3-5 செ.மீ. அகலத்திலும், 3 – 4 செ.மீ .நீளத்திலும் இருக்கும். பூக்களும்
காய்களும் ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அதிகம் காணப்படும். பூக்கள்
எல்லா நாட்களிலும் தென்படும். இதன் காய்கள் சிறிதாகவும் உருண்டையாகவும் இருக்கும்.
சித்தாமுட்டி இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா, அமரிக்கா போன்ற நாடுகளிலு
காணப்படுகிறது. இது விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.
சித்தாமுட்டியின் மருத்துவப் பயன்கள் :-
தாதுக்கிளின் எரிச்சலை தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகப் பயன்படும்.
பாரிசவாதம், முகவாதம், போன்ற கடும் வாத நோய்களைத் தீர்பதற்குறிய மருந்தாகும். மது
பழக்கத்திலிருந்து விடு பெற உதவுகிறது. கர்பிணிப் பெண்ணுக்ககு மருத்துவ உணவாகப்
பயன்படுகிது. இதன் தைலம் முடி உதிர்வதைத் தடுக்கிறது. இது மூட்டு வலியைக்
குணப்படுத்ததும் மருந்ந்தாகப் பயன்படுகிறது.
சித்தாமுட்டி வேர் 10 கிராம் சிதைத்து
100 மி.லி. நீரில் போட்டு 25 மி.லி. யாகக் காய்ச்சி 2 சிட்டிகை திருகடுகு சூரணம்
சேர்த்து காலை மாலை 3 நாள் கொள்ள வாதம், சுரம் தீரும்.
நவர அரிசியை சித்தாமுட்டி வேர் கசாயம்
கலந்த பாலுடன் வேக வைத்து உடலெங்கும் தேய்த்து விடுதல் போன்ற சிகிச்சை முறைகள் மது
பழக்கத்திலிருந்து விரைவில் விடுபடலாம்.
கர்பிணிப் பெண்களுக்கான உணவாகப்
பயன்பட கருவுற்ற முதல் மாதம் பாலுடன் சித்தாமுட்டி மூலிகையைக் காய்ச்சி ஆற
வைத்துக் கொடுப்பது உடலுக்கு நல்லது.
---------------------------------------------------------------------------------------------------------(தொடரும்)
படம் அனுப்பிய சரவணன் பெங்களூர் அவருக்கு நன்றி.
படம் அனுப்பிய சரவணன் பெங்களூர் அவருக்கு நன்றி.