வியாழன், 26 டிசம்பர், 2013

கொட்டக்கரந்தை.



 
கொட்டக்கரந்தை

கொட்டக்கரந்தை.

மூலிகையின் பெயர் –: கொட்டக்கரந்தை.

தாவரவியல் பெயர் -: SPHOERANTHUS MIRTUS.

;தாவரக்குடும்பம் -: ASTERACEAE.

வேறு வகைகள்  -: 1. SPHOERANTHUS SENEGACENSIS.  2. SPHOERANTHUS ANGOLENSIS.  3. SPHOERANTHUS HIRTUS.
                    4. SPHOERANTHUS POLYCEPHALUS.

வேறு பெயர்கள் -  விஸ்ணுகரந்தை. மொட்டப்பாப்பாத்தி, நாறும் கரந்தை என்பன. ஆங்கிலத்தில் EAST INDIAN GLOBE-THISTLE & RICE   FIELD WEED.
பயன்படும் பாகங்கள் -: செடிமுழுதும்.

வளரியல்பு -: கொட்டக்கரந்தை ஈரமான வளமான இடங்களில் வளரக்கூடியது. முக்கியமாக வயல்களில் நெல்லுடன் கழையாகவும் வரப்போரங்களிலும் வளரக்கூடியது. இதன் தாயகம் ஆப்பிரிக்கா. இது சுமார் 30-60 செ.மீ.உயரம் வளரக்கூடியது. பற்களுள்ள நறுமணமுடைய இலைகளை மாற்றடுக்கில் கொண்ட சிறு செடி. இது அதிக கிளைகளைக் கொண்டிருக்கும். தண்டு உருண்டையாக இருக்கும். இலையின் நீளம் 2-7 செ.மீ ம், அகலம் 1 – 1.5 செ.மீ. கொண்டது. பிரவுன் மற்றும் பச்சையாக இருக்கும். பூ தனியாக தண்டின் உச்சியில் குஞ்சம் போன்று சிறு பந்து போன்று உரண்டையான சென்நிறப் பூ கொத்தினை உடையது. பூ உருண்டையாக கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும். வெளிபக்கப்பூ பெண் பூக்கள் மத்தியில் நீண்டிருபது தன்மகரந்தசேர்க்கையைக் கொண்டது. நவம்பர் முதல் மார்ச்சு வரை பூத்துக் காய்க்கும். பழம் வாசனையுடையது, குவிந்திருக்கும். நாட்பட்டால் வாசனை மறைந்து விடும்.

மருத்துவப்பயன்கள் -கொட்டக்கரந்தை மலமிளக்கவும், தாது வெப்பு தணிக்கவும் பயன்படும். நுரையீரல் நோய், யானைக்கால் வியாதி, இரத்த சோகை, கற்பப்பையில் வலி, மூலம், ஆஸ்த்துமா, வெண்புள்ளி, வயிற்றுக்கடுப்பு, வாந்தி, இருமல், விரைவீக்கம் நோய், மூத்திரப்போக்கு, பெருகுடல் வலி, கொங்கை தளர்ந்து தொங்குதல், பைத்தியம் மற்றும் 'எயிட்ஸ்'ஆகிய நோய்களைக் குணப்படுத்தக் கூடியது. இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். வண்டுகடி, இருதய நோய் குணமாகும். இதன் வேரில் ஆயில் எடுத்து உடம்பின் மேல் பூசினால் கண்டமாலை (Scrofula) குணமாகும். பூ கண் பார்வையை அதிகப்படுத்தும். தோல் வியாதி குணமடையும். இதன் விதை மற்றும் வேரின் பொடி குடல் புழுவை (Anthelmintic) அழிக்கும்.

கொட்டக்கரந்தையின் பூக்காத செடிகளைப் பிடுங்கி நிழலில் உலர்த்தி. பொடி செய்து 5 கிராம் பொடியுடன் சிறிது கற்கண்டுப் பொடி கலந்து சாப்பிட்டு வர வெள்ளை உள் ரணம்,, கிராணி, கரப்பான் ஆகியவை தீரும். நீடித்துச் சாப்பிட்டு வர மூளை, இதயம், நரம்பு ஆகியவற்றைப் பலப்படுத்தும்.

மேற்கண்ட பொடியுடன் கரிசிலாங்கண்ணிப் பொடி சமன் கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர இள நரை தீரும். உடல் பலம் பெறும்.

‘கொட்டைக் கரந்தைதனைக் கூசாம லுண்டவர்க்கு----------
வெட்டைதணியுமதி மேகம்போம் – துட்டச்------------------------
சொறிசிரங்கு வன்கரப்பான் றோன்றா மலப்பை----------------
மறிமலமுந் தானிறங்கு மால்.’

குணம் – கொட்டைக் கரந்தைக்கு வெள்ளை, ஓழுக்குப் பிரமேகம், சினைப்பு, கிரந்தி, கரப்பான் இவைகள் நீங்கும். வெளிவராமல் தங்கிய மலத்தைப் போக்கும்.

காய் விடுவதற்கு முன் பயன் படுத்துதல் அதிக பலன் தரும்.  இதன் பட்டையை அரைத்து மோரில் கலந்து உட்கொள்ள மூலத்திற்கு நல்லது. இதன் சமூலம் தலை, மூளை, இருதயம், நரம்பு இவைகட்குப் பலத்தைக் கொடுக்கும். கசாயமாகச் சாப்பிடப் பைத்தியம், கிரந்தி போம். இக் கசாயத்தோடு சீரகத்தைப் பொடித்துப் போட்டு உட்கொள்ள வயிற்றுக் கோளாறுகள் போம். இதன் சமூலத்தில் சாற்றைச் சூதகத்திற்குச் சுருக்கக் கொடுக்க வெள்ளிக் கம்பியைப் போலாகும். சித்த நூல் படி இதன் சமூலத்தின் ரசமும், இலை ரசமும், வாத முறைக்கும் கற்பமுறைக்கும் மிக்க உபயோகமுள்ளது. ஆயை இராமமூர்த்தி கூறுகிறார் இதன் இலையை நன்கு அறைத்து கசாயமாக 48 நாட்கள் குடித்தால் எயிட்ஸ் என்னும் நோய் குணமாகும் என்கிறார். இது சித்தர்கள் கூற்றாம்.

பார்வை-'நலம் தரும் மூலிகைகள்'.
படம் அனுப்பிய நெருஞ்சிப்பேட்டை சரவணன் அவருக்கு நன்றி.

நல்ல சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து சாப்பிடவும்.

கொட்டக்கரந்தை செடி.தொடரும்.


திங்கள், 25 நவம்பர், 2013

விஷ்ணுக்கிரந்தி.



 
விஷ்ணுக்கிரந்தி


மூலிகையின் பெயர் –: விஷ்ணுக்கிரந்தி.


தாவரவியல் பெயர் -: EVOLVULUS ALSINOIDES.

;தாவரக்குடும்பம் -: CONVOLVULACEAE..

வேறு பெயர் விஷ்ணுக் காந்தி எனப்படும்.

பயன்படும் பாகங்கள் -: செடிமுழுதும்.

வளரியல்பு -விஷ்ணுக்கிரந்தி எல்லா இடங்களிலும் தானே வளரக்கூடியது. இது தரையோடு படர்ந்து வளரும் சிறுசெடி.இதன் தாயகம் தென் அமரிக்கா. இதன் தண்டு நீளம் 20 - 70 செ.மீ. வரை வளரும். முழுமையான சிறு இலைகளைக் கொண்டது. வட்டமான சிறு 

மலர்களை உடையது. இதன் பூ விட்டம் 6 - 8 மில்லி மீட்டர் இருக்கும்.  இதன் காய் சிறிதாக உருண்டையாக இருக்கும். அதில் நான்கு விதைகள் இருக்கும். பொதுவாக நீலநிறமாகவும் அரிதாக 
வெண்ணிற, செந்நிற மலர்களும் காணப்படுவதுண்டு. விஷ்ணுக் 
காந்தி எனவும் 
குறிப்பிடுவதுண்டு. தமிழகமெங்கும் தரிசு நிலங்களில் 
தானே வளர்கிறது. விதை மூலமும், பக்கவேர்கள் மூலமும் 
இனவிருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் -விஷ்ணுக்கிரந்தி நோய் நீக்கி உடல் தேற்றுதல், காய்ச்சல் போக்குதல், கோழையகற்றுதல், வியர்வை பெருக்குதல்,
தாது பலமளித்தல் மலர்ச்சிக்கலைப் போக்கும். இதன் எண்ணெய் பெண்கள் முடி வளர உபயோகிப்பர். இதன் வேர் குழந்தைகளின் காச்சலைப் போக்கும். மன அமைதியைக் கொடுக்கும். இதன் இலையை சிகரெட்டாகச் செய்து புகையை உள இழுத்தால் தொடர் இருமல், ஆஸ்த்துமா குணமாகும். இது தொழுநோயைக் குணப்படுத்தும். ஆகிய மருத்துவ குணங்கள்யுடையது.

விஷ்ணுக்கிரந்தி சமூலம், பற்படாகம், கண்டங்கத்திரி வேர், தூதுவேளை வகைக்கு 30 கிராம் சிதைத்து 1 லிட்டர் நீரில் போட்டு கால்
லிட்டராகக் காய்ச்சிக் காலை, மாலை 50 மி.லி.கொடுக்கச் சுரம் வலகும். 2, 3 வேள்ளையாகக் கொடுக்க விடாத காச்சல் தீரும்.

பற்படாகம் நீக்கி ஆடாதொடைசேர்த்து மேற்கண்டவாறு சாப்பிட என்புருக்கிக் காய்ச்சல் தீரும்.

இதன் சமூலம் அரைத்துக் கொட்டைப் பாக்களவு தயிரில் கொடுக்க இரத்த பேதி, சீதப் பேதி தீரும். காரம், புளி நீக்க வேண்டும்.

இதன் சமூல விழுது நெல்லிக் காயளவு ஓரிரு மண்டலம் கொள்ளக் கண்ட மாலை தீரும்.

விஷ்ணுக்கிரந்தி, ஓரிதழ்தாமரை, கீழாநெல்லி சமன் அரைத்துப் பாக்களவு காலை, பகல், இரவு உணவுக்கு முன் உண்டு பால் குடித்து
வர நரம்பு தளர்ச்சி, இந்திரி ஒழுக்கு, மறதி, வெட்டைச் சூடு தணிந்து உடல் பலம் உண்டாகும்.

விஷ்ணுக்கிரந்தி 5 கிராம் சமீலத்தைப் பால் விட்டு மையாய் அரைத்துப் பாலில் கலக்கி வடிகட்டிக் காலை, மதியம், மாலை 3 வேளையும்
கொடுத்து வரச் சீதபேதி, காய்ச்சல், மேகம், என்புருக்கி, இரைப்பு, இருமல், ஈளை,  வாத, பித்தத் தொடர்பான நோய்கள் அனைத்தும் தீரும்.

---------------------------------------------------------------------------------------------------------------(தொடரும்)

வெள்ளி, 25 அக்டோபர், 2013

சீத்தா.

 
சீத்தா.



மூலிகையின்பெயர் சீத்தா.

தாவரவியல்பெயர் -: ANNONA SQUMOSA.

;தாவரக்குடும்பம் -: ANNONACEAE.

பயன்படும்பாகங்கள் –:இலை, வேர், பழம், பழத்தின்தோல், விதை, மற்றும் பட்டை.

வகைகள் –: 1. சீத்தா-ANNONA SQUMOSA. 2. முள்சீத்தா - ANNONA MUCICATA… மேலும் 3. ராம்சீத்தா – ANNONA RETICULATE.

வளரியல்பு –:சீத்தாஒருமரப்பயிர். சீத்தாவகைகளுக்குத்தக்கவாறுஅதன்பழங்கள்இருக்கும்.இலைகளும்சிறிதுவித்தியாசப்படும். இதன்தாயகம் அமரிக்கா, மற்றும் வெஸ்ட்இண்டீஸ் என்று சொலிகிறார்கள்.ஆனால் உண்மை எது என்று தெறியவிலை .இது தட்ப வெப்ப மண்டலத்தில் வளரக்கூடிய மரம். இதற்கு 25 டிகிரிசெண்ரிகிரேடு முதல் 45 டிகிரிசெண்ரிகிரேடு வரை வெப்பத்தில் நன்கு வளரும்.சீத்தா 18 அடிமுதல் 26 அடி உயரம் வரை வளரக்கூடியது .இது கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை தான் வளரும் தன்மையுடையது. இலைகள் பச்சையாக எதிர்அடுக்கில் அமைந்திருக்கும் .அகலம் சிறிதாகவும் நீளம் அதிகமாகவும் இருக்கும்.சிறு கிளைகள் அதிகமாக இருக்கும். பூக்கள் முதலில் பச்சையாகவும் பின் மஞ்சள் நிறமாக மாறும்.பூக்கள் தடிப்பான மூன்று இதழ்களைக் கொண்டிருக்கும்.பின் பிஞ்சுகள் விட்டு காயாக மாறும்.காய்கள் ஆப்பிள் போன்று உரண்டையாக இருக்கும். ஆனால் மேல் தோல் சிறு சிறு அரைகள் போன்று அமைந்த்திருக்கும். காய் முற்றினால் சாம்பல் நிறமாகமாறும். அப்போது அதைப்பறித்துப் பழுக்கவைத்து உடனே சாப்பிடுவார்கள் .பழத்தைப் பிறித்தால் வெண்மையான சதை கொட்டைகளை மூடியிருக்கும். அந்த மிருதுவான பாகந்தான் சுவையாக இருக்கும். இதை அதிக நாள் வைத்துச் சாப்பிடமுடியாது,,அழுகிவிடும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.கொட்டை கருப்பாக இருக்கும்.சீத்தா விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

சீத்தாவில் அடங்கியுள்ள உணவுச் சத்துக்கள்.

நீர்          63.8 கிராம்.
புரோட்டீன்   1.17 கிராம்.
கொழுப்பு     0.5 கிராம்.
மாவுசத்து    20 கிராம்.
நார்சத்து      6.6 கிராம்.
கால்சியம்17.6  -  27 மில்லிகிராம்.
இரும்பு      11.4 மில்லிகிராம்.
மக்னீசியம்   84 மில்லிகிராம்.
தாமிரம்       .43 மில்லிகிராம்.
பாஸ்பரஸ்  14.7 மில்லிகிராம்
ரிபோபிளேவின் பி2 0.086 மில்லிகிராம்.
ரியாசின்    .175 மில்லிகிராம்.
அஸ்கார்பிக்அமிலம் 15.0 மில்லிகிராம்.
கலோரி   95..

சீத்தாவின்மருத்துவப்பயன்கள் .-: சீத்தாவின் இலை கசாயம் வைத்துக் குடிக்க வயித்துப் போக்கைக் கட்டுப் படுத்தும். இந்த இலை சயரோக வியாதியைக் குணப்படுத்தும். அல்சரைப் போக்கும். விதைபூச்சி க்கொல்லி மருந்தாகப் பயன்படுகிறது. இதைப்பொடி செய்து தலைக்குக் குளிக்கjப் பேன் தொல்லை நீங்கும் .விதையிலிருந்து 30 சதம் எண்ணெய் இருப்பதால் எண்ணெய் எடுக்கிறார்கள். இது சோப்புத் தயாரிக்கப் பயன்படுகிறது..பழத்தில் பவுடர் தயாரிக்கிறார்கள். இதில் வைட்டமின் சிஅதிகம் உள்ளது. இந்தப் பழத்தின் சதைப் பகுதியிலிருந்து குளிர்பானம் தயாரிக் கிறார்கள். இதில் 16.5 சர்கரை இருப்பதால் குண்டானவர்கள் சாப்பிடக் கூடாது. இதன் வேர் கருச்சிதவை கட்டுப் படுத்துகிறது. இதன் பழம் சாப்பிட இதயம் பலம் பெரும். குழந்தைகளுக்குக் கொடுக்க எலும்பு, பல் உறுதியாகும். குளிர்காச்சலைப் போக்கும். செரிமானம் ஏற்பட்டு மலச்சிக்கல் குணமாகும். இலையை அரைத்துப் புண்களுக்கு வைக்க புண்கள் குணமடையும்.

முகநூலில் பாலசுப்ரமணியன் என்பவர் சீதாப்பழத்தின் மருத்துவ குணம் பற்றி அறிவிக்கிறார்----

சீதாப்பழத்தில் இத்தனை மருத்துவ குணமா..?!

சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில்அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும்கொண்டது.
இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரியமருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும்காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

பழத்தில் உள்ள சத்துக்கள்:

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது.நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவைஇப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:
சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்துதயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோகநோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர்கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள் குணமடையும்:
சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவைபழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாககுணமடையும்.

மேனி பளபளப்பாகும்:
விதைகளை பொடியாக்கி சமஅளவுபொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடிமிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர்காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்துஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது.விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம்ஏற்படும்

எலும்பு பலமடையும்:
சீத்தாபழத்தில் உடலைவலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்லபலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும்.எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலைகுணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும்ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்:
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம்சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல்அதிகரிக்கும்.

சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்:
சீதா (Annonasquamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.

இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.

பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது.ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப்பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப்பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர்வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாகஇருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாகவிரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

சிறிதளவு அழுத்தம்தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவைநிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள்கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களைஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.
முள்சீத்தா - ANNONA MUCICATA

சீத்தா மரம்.


ராம்சீத்தா – ANNONA RETICULATE.

தொடரும்)----------------------------------------------------------------------------------- .