சனி, 28 செப்டம்பர், 2013

சித்தாமுட்டி.





சித்தாமுட்டி.


சித்தாமுட்டி.

மூலிகையின் பெயர் :– சித்தாமுட்டி.

தாவரப்பெயர் :– PAVONIA ZEYLANICA.

தாவரக்குடும்பம் :- MALVACEAE.

பயன்தரும் பாகங்கள் – செடிமுழுதும்.

வேறு பெயர்கள் :– சேங்கன். மம்மட்டி, தெங்கைப் பூண்டு. போன்றவை.

வளரியல்பு :– சித்தாமுட்டி மணல் கலந்த பாறையுள்ள இடங்களில் நன்கு வளரும். காடுகளில் புதர்கள் அதிகமாக உள்ள இடங்களில் அதிகம் காணப்படும். இது நேராக வளரும் செடி. தரிசு நிலங்களிலும், வேலியோரங்களிலும் சாதாரணமாகக் காணப்படும். இதன் இலைகள் ஓரங்களில் பல்லுள்ளவை. எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். சுமார் மூன்று அடி உயரம் வரை வளரக்கூடியது. பூக்கள் சிறிதாக 5 இதழ்களுடன் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூக்கள் தனியாக இருக்கும்  7 எம்.எம். நீளம். வெளிநாடுகளிலு பின்க் நிறத்திலும் கூட இருக்கும். இலைகள் 2.5 x 3  3-5 செ.மீ. அகலத்திலும், 3 – 4 செ.மீ .நீளத்திலும் இருக்கும். பூக்களும் காய்களும் ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அதிகம் காணப்படும். பூக்கள் எல்லா நாட்களிலும் தென்படும். இதன் காய்கள் சிறிதாகவும் உருண்டையாகவும் இருக்கும். சித்தாமுட்டி இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா, அமரிக்கா போன்ற நாடுகளிலு காணப்படுகிறது. இது விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

சித்தாமுட்டியின் மருத்துவப் பயன்கள் :- தாதுக்கிளின் எரிச்சலை தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகப் பயன்படும். பாரிசவாதம், முகவாதம், போன்ற கடும் வாத நோய்களைத் தீர்பதற்குறிய மருந்தாகும். மது பழக்கத்திலிருந்து விடு பெற உதவுகிறது. கர்பிணிப் பெண்ணுக்ககு மருத்துவ உணவாகப் பயன்படுகிது. இதன் தைலம் முடி உதிர்வதைத் தடுக்கிறது. இது மூட்டு வலியைக் குணப்படுத்ததும் மருந்ந்தாகப் பயன்படுகிறது.

சித்தாமுட்டி வேர் 10 கிராம் சிதைத்து 100 மி.லி. நீரில் போட்டு 25 மி.லி. யாகக் காய்ச்சி 2 சிட்டிகை திருகடுகு சூரணம் சேர்த்து காலை மாலை 3 நாள் கொள்ள வாதம், சுரம் தீரும்.

நவர அரிசியை சித்தாமுட்டி வேர் கசாயம் கலந்த பாலுடன் வேக வைத்து உடலெங்கும் தேய்த்து விடுதல் போன்ற சிகிச்சை முறைகள் மது பழக்கத்திலிருந்து விரைவில் விடுபடலாம்.

கர்பிணிப் பெண்களுக்கான உணவாகப் பயன்பட கருவுற்ற முதல் மாதம் பாலுடன் சித்தாமுட்டி மூலிகையைக் காய்ச்சி ஆற வைத்துக் கொடுப்பது உடலுக்கு நல்லது.

---------------------------------------------------------------------------------------------------------(தொடரும்)
படம் அனுப்பிய சரவணன் பெங்களூர் அவருக்கு நன்றி.
 

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

எலும்பொட்டி.




 
எலும்பொட்டி இலை.


எலும்பொட்டி.

மூலிகையின் பெயர் -: எலும்பொட்டி.

தாவரப்பெயர் :– ORMOCARPUM COCHINCHINCENSE.

தாவரக்குடும்பம் :– FABACEAE..

:
பயன்தரும் பாகங்கள் :– சமூலம்.

வளரியல்பு :– எலும்பொட்டி செடி வகையைச் சேர்ந்தது. இது வளமான மண்ணில் நன்கு வளரும். மிதமான சீதோஸ்ணம் போதுமானது. இது பற்றி பழங்காலத்தில் கிராமங்களில் எலும்பு முறிவை குணமாக்கும் என்று தெறிந்து வைத்து அதை இரகசியமாக வைத்திருந்தனர். இந்தச் செடி எப்போதும் பச்சையாக இருக்கும். இது 6 அடி முதல் 9 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் தண்டுகள் முதிர்ந்தால் கெட்டியாகிவிடும். இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். அவை 9 – 17 இணுக்குகள் இருக்கும். இலை 1.5 சி எம்.முதல் 2.5 சி.எம் நீளம் இருக்கும். இவைகள் முதிர்ந்து பழுத்தால் கருப்பாக இருக்கும். பூக்கள் மஞ்சள் அல்லது வெண்மையாக இருக்கும். பூக்கள் வாடினால் பசை போன்று இருக்கும். இதில் கால்ச்சியம் அதிகமாக இருக்கும். விதைகள் ஓவல் வடிவத்தில் பிரவுன் நிறத்தில் இருக்கும்.ஜூன் முதல் செப்டம்பர் மாதத்தில் பூக்கும். விதை அக்டோபர் மாதத்தில் எடுக்க வேண்டும்  இது தாய்வான், இந்தியா, ஜப்பான், மலேசியா, பசிபிக் தீவவுகள், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து, சீனா மற்றும் வியட்னாமில் காணப்படும். இது விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் :– எலும்பொட்டி செடியில் கால்சியம் அதிகமாக இருப்பதை தற்போது கண்டறிந்துள்ளார்கள். அதை எலிகளுக்குக் கொடுத்து அதன் எலும்பு முறிவை விரைவில் குணமாவதைக் கண்டரிந்தார்கள். அந்தக் காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இதன் இலையை நன்கு அரைத்து அதை அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டி விரைவில் குணமாவதைக் கண்டறிந்தனர். ;இதை இரகசியமாக வவைத்திருந்தனர். இதனால் இதற்குக் காரணப்பெயராக அமைந்தது. இதன் சமூலத்தில் சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீர் விட்டு நன்கு சுண்ட வைத்து அதன் ‘எக்ஸ்ட்ராக்’ எடுத்து வடிகட்டி, அதில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் கலந்து பாட்டிலில் வைத்துக் கொண்டு எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இரு லேசான மூங்கில் தப்பையில் வெள்ளைத் துணிசுத்தி கட்டுப்போடுவார்கள். பின் அதன் மீது இந்த மருந்தை நனைத்துக் கொண்டிருப்பர். இப்படி செய்யும் போது ஒரு சில மாதங்களில் அடிபட்ட இடம் குணமடைந்து விடும். இது கேராளாவில் முட்டிகுளக்கரையில் செய்து வருகிறார்கள்.

------------------------------------------------------------------------------------------------(தொடரும்)
எலும்பொட்டி  பூ.

சனி, 27 ஜூலை, 2013

தைம். THYME..


 
தைம். THYME.

தைம். THYME..               



மூலிகையின் பெயர் :- தைம். (THYME.)



தாவரப்பெயர் :– THYMUS VULCARIS (LINN)



தாவரக் குடும்பம் :- N.O.LABIATAE.



பயன்தரும் பாகம் :– இலை, தண்டு பூ முதலியன.



வளரியல்பு :– தைம் மலைப் பாங்கான இடங்களில் நன்கு வளரும். தண்ணீர் தேங்கக்கூடாது. வடிகால் வசதி இருக்க வேண்டும். கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் வளரக்கூடியது. இதன் தாயகம் ஸ்பெயின், தெற்கு ஐரோப்பாவில் இருந்தது. ரோமானியர் அதிகம் பயிரிட்டனர். இதன் வேர்கள் அதிகமாக இருக்கும். பக்கக்கிழைகள் அதிகம் உண்டாகும். அடர்த்தியான புதர் போல் காணப்படும். இதன் உயரம் 4 முதல் 8 அங்கும் வரை வளரும். இலைகள் சிறிதாக இருக்கும். நீளம் 1/8 அங்குலமும் அகலம்  1/16 அங்குலமும் இருக்கும். இலைகள் பச்சையாக அடர்த்தியாக இருக்கும். பூ இரு பாகமாக இருக்கும். மேலே 3 இதள், கேழே 2 இதள் போன்று அமைந்திருக்கும். விதைகள் உருண்டையாக இருக்கும். தைமில் மூன்று வகை உண்டு. LEMON THYME, CARAWAY THYME, & WILD THYME. இதற்கு 3 ஆண்டுகள் வரை முழைப்புத் தன்மை இருக்கும். இலைகள் நறுமணம் கொண்டவை. இதிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள். இது மருத்துவ குணம் உடையது. இவை மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை பூக்கும். தைம்மை கிரேக்கப் பெண்கள் வீரத்தின் சின்னமாக வீரர்களுக்குக் கொடுப்பார்கள். அரண்மனையை சுத்தம் செய்ய இதன் இலைகளை ஊரவைத்து அதன் நீரில் சுத்தம் செய்தார்க்கள். இதைப் பயிரிட 2 அடி நீளத்திற்கு இடைவெளிவிட்டு விதைகளை பண்டுத்திய நிலத்தில் நடுவார்கள். இதை கட்டிங் மூலமாகவும் பயிரிடலாம். இதன் வேர்களைப் பிறிந்தெடுத்து அதையும் நடுவார்கள். மார்ச்சு மாதத்தில் ஈரப்பதம் இல்லாத மண்ணில் நட்டுப் பின் நீர் விடுவாரகள். இது வருடாந்திரப்பயிர்.



தைமின் மருத்தவப்பயன்கள் :– மூலிகைப் பயிரான தைம் ஓர் நல்ல மருத்துவ குணமுடைய மூலிகை. தைமின் தைலம் காரத்தன்மையுடையது. நறுமணம் கொண்டது. இனிப்பு சுவை கொண்டது. நரம்புத் தளர்ச்சியைக் குணப்படுத்தும். மனவளர்ச்சியைப் பெருக்கும். நச்சுப்புழுக்களைக் கொல்லும். நெஞ்சுவலி, காசநோய், மார்புச்சளி, முதலிய சிகிச்சைக்கு இந்த ஆயில் உதவும்.



பித்த நீரையும், இரத்தத்தையும் இளக்கும். சிறுநீரகம், கண் முதலியவற்றின் சிகிச்சைக்கும், இரத்தத்தைச் சுத்தி செய்வதற்கும் பயன்படும். சரும நோய்களின் சிகிச்சையில் குடற் பூச்சிகளைக் கொல்லும்.



தைம் தலைப் பொடுகைப் போக்கும். ஏழு தேக்கரண்டி யளவு வரண்ட தைம் இலைப்பொடியை இரண்டு கப் நீரில் பத்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி அதை குளித்த தலை முடிக்குத் தடவி தேய்த்து விட்டால் பொடுகு குணமாகும்.



தைம் எண்ணெயை சிறிதளவு வாயில் விட்டுக் கொப்பளிக்க தொண்டை வலி குணமாகும். இந்த எண்ணெயால் இருமல், வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, தோல் அறிப்பு, சிறுநீர் தாரைசுத்தம், டான்சில் வீக்கம், வாய்ப்புண், வாய் நாற்றம் முதலியன குணமாகும். இது இரத்தம் உரைவதை (கிளாட்) குணப்படுத்தும் தன்மையுடையது. இதற்குப் பாக்டீரியா தடுப்பு சக்தி கொண்டது. இந்த எண்ணெயுடன் மற்றொரு எண்ணெய் சேர்த்து பற்கள் சுத்தமாகவும் விழாமல் இருக்கவும் பயன்படுகிறது.  ஆண்களுக்ககுச் சக்தியைத் தூண்ட இந்த மூலிகையைப் பயன் படுத்துகிறார்கள். பிரசவமான பெண்கள் உதிரப்போக்கு வராமல் தடுக்க இந்த தைம் மூலிகையைப் பயன்படுத்துகிறார்கள். மூலிகை சூப் மற்றும் உணவு தயார் செய்வதிலும் தைமை உபயோகிக்கிறார்கள். தைம் சோப்புத் தயார் செய்யவும், அழகு சாதனங்கள் தயாரிக்கவும், பற்பசை தயாரிக்கவும் பயன் படுத்துகிறார்கள். இந்த இலையை இரவில் தூங்கும் போது தலையணையுடன் சேர்த்து வைத்துத் தூங்கினால் கெட்ட சொப்பனங்கள் வராது என்ற நம்பிக்கை ரோமானியர்களிடம் இருந்துள்ளது. இதன் காய்ந்த இலையில் டீ போட்டுக் குடிப்பதால் ஆஸ்த்துமா, குளிர், இருமல் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.  உடம்பு சூட்டால் கண்ணிலும், மூக்கிலும் அதிகமான நீர் வடிதலை தைம் குணப்படுத்தும். தைமோல். (THYMOL) ஆயில் ஏண்டிசெப்டிக் (ANTISEPTIC) மற்றும் ஏண்டி ஃபங்கல் (ANTI-FUNGAL) குணமுடையது. தைமில் வைட்டமின் பி (B) காம்ளக்ஸ், ஏ (,A) கே, (K) ஈ, (E) சி (C) மற்றும் போலிக் ஏசிட் (FOLIC ACID) உள்ளது.



100 கிராம் புதிய பச்சை தைம் இலையில் அடங்கயுள்ள சத்துக்கள் சதவிகிதம் பின் வருமாறு.-



1.   38% of dietary fiber.
2.   27% vitamin B-6 (Pyridoxine)
3.   266% of vitamin C.
4.   158% of vitamin A.
5.   218% of iron.
6.   40% of calcium.
7.   40% of maganasium.
8.   75% of manganese.
9.   No cholesterol.





 
தைம் மூலிகைச் செடி.

 -----------------------------------------------------------------------------(தொடரும்)